நாண் / எக்ஸ்பாண்டபிள்ஸ் டூ.. திரை விமர்சனம்.

நாண் / எக்ஸ்பாண்டபிள்ஸ் டூ.. திரை விமர்சனம்.
Naan Tamil Film Review and Expandables 2

தமிழ் படங்களுக்கு இணையாக தமிழில் டப் செய்யப்பப்ட்டு தமிழகம் எங்கும் பட்டித்தொட்டிகள் எல்லாம், போஸ்டர் ஒட்டப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த எக்ஸ்பாண்டபிள்ஸ் சமீபத்திய ஆங்கிலப்படத்தை பார்க்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. படம் ஆரம்பமே ஒர டமார் டூமில் தான், சகட்டுமேனிக்கு ஒரு குட்டி ரானுவத்தின் பாதுகாப்பில் உள்ள ஒரு சீன முக்கியப் புள்ளியை சிறையில் இருந்து மீட்டு வர ஒரு டப்பா வண்டியில் சில்வர்ஸ்டார் ஸ்டோலின் தலைமையில் பழைய கதாநாயகர்கள் கூட்டம் கிளம்பி பல்லாயிர புல்லட்கள் செலவு செய்து பலருக்கு டிக்கட் வாங்கிக்கொடுத்து ஆனால் இவர்களில் ஒருவர் கூட சிறு அடிகூட படாமல் காப்பாற்றி கூட்டிவருகிறார்கள்.

இவர்களிடம் ஒரு அரதப்பழசான மீடியம் சைஸ் விமானம் ஒன்று உள்ளது அதனை கார்களை பார்க் செய்வது போல் எங்கு வேண்டுமானாலும் இறக்கி, இறக்கைகளை ஒடித்து, மீண்டும் ஓட்டி, தண்ணீரில் பார்க் செய்து விடுகிறார்கள். எப்படிப்பா? எப்படி? அதாவது ஆங்கிலப்பட பார்முலாபடி காட்சி ஆரம்பத்தில் ஒரு சாகசம் செய்வது, பின் ஒரு சிறிய மிஷனை ஆரம்பித்து வில்லனை சாகடித்து முடித்தல்.. இதுலேயும் இதே கதைதான்.

ஒரு கொடுங்கோல் வில்லன் கூட்டம் யுரேனியம் கடத்தி ரஷ்யாவில் 5000 டன் பெட்ரோலியம் பதுக்கி வைத்திருக்கும் மறைந்த சுரங்கத்தை கண்டுபிடித்து உலகின் பெரிய பணக்காரனாக ஆக திட்டம் போட்டு செயல்படுத்துவதும், அதனை சில்வர்ஸ்டார் குரூப் அவ்வப்பொது ஒருசில கிழட்டு உறீரோக்களும் எங்கிருந்தோ வந்து இணைந்து அடுத்தடுத்த காட்சிகளில் காணாமல் போய்விடுபவர்களுடன் சேர்ந்து முறியடிக்கிறார்கள். இசைதான் டமார் டமார் என பில்டப் செய்கிறதே தவிர, காட்சிகள் எல்லாம் சுமார்தான்.. 30 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலப்படங்கள் போலவே எடுத்திருக்கிறார்கள். அதிலும் அந்த கிளைமாக்ஸ் ரொம்ப மொக்கை… கடைசியில் வில்லனை ஆயுதங்கள் இல்லாமல் நிராயுதபாணியாக சந்தித்து கொல்கிறார் ஸ்டாலின். இவர்தான் இந்தப்படத்தின் உறீரோ போல் செயல்படுகிறார் (மிகவும் மந்தமாக…) கதாநாயகி வேஸ்ட்… மொத்தத்தில் ரொம்ப மொக்கையான தமிழ்படம் பார்த்தமாதிரியே தோனுகிறது.
…………………….

மேலேபார்த்த படம்மாதிரியே சோம்பாலான தோற்றத்துடன் படம் பார்ப்பவர்களுக்கே அலுக்கும் வகையில் விஜய் ஆண்டணி கதாநாயகனாக (என்னசெய்வது இவரே தயாரிப்பாளர் பாடகர் யேசுதாஸ் மகனாயிற்றே) சொதப்பல் கதையுடன், ஆள்மாறட்டம் செய்து நண்பரைக் கொன்று, சந்தப்பங்களை தனக்கு சாதகமாக மாற்றி போலீசுக்கு சிறதளவும் சந்தேகம் ஏற்படாத வகையில் தப்பி விடுகிறாராம். ஏண் இப்படி.. நல்லாத்தானே போய்ட்டிருந்தது ? என ஒவ்வொருவரையும் நினைக்க வைக்கிறார்கள்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

5 thoughts on “நாண் / எக்ஸ்பாண்டபிள்ஸ் டூ.. திரை விமர்சனம்.

 1. இந்த மாதிரி பல ஹீரோக்கள் சேர்ந்து நடித்த படங்களில் திரைக்கதை ரொம்ப முக்கியம், பல பேர் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகின்றனர்.

  ‘நான்’ படத்தைப் பற்றி கொஞ்ச பேர் நல்லவிதமாக சொன்னாங்களே தல? படம் ரொம்ப மொக்கையா என்ன?

 2. நல்லது நடந்தால் சரிதான்…..

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  வலைப்பூ தலையங்க அட்டவணை
  info@ezedcal.com
  http//www.ezedcal.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s