ஆ.பொ.வ.வா.எப்படி? பகுதி 2

ஆ.பொ.வ.வா.எப்படி? பகுதி 2
Life style of mid aged peoples

முதற்பகுதியை பலரும் நன்றாக உள்ளது என பாரட்டு தெரிவித்தால், இரண்டாம் பகுதி தொடர்கிறது. இளமைப்பருவம் முடிந்து கிட்டத்தட்ட 30 வயது கடந்து 50 வயதுக்குள் ஏற்படும் சம்பவங்களை அலசுவோம். திருமணம் முடிந்து, 6 மாத காலத்திற்கு காலம் மிக விரைவாக செல்லும், ஏனெனில் அனைத்தும் புதிதாகவும் இனிமையாகவும் அமைந்துவிடும்.. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

இதற்கிடையே இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தம்பதியர் இல்லற வாழ்வில் சுகம்பெற்று அதன்பயனாக கரு உருவாக செய்திருப்பர். அதன்பின், இளமை கொஞ்சம் கொஞ்சம் ஆக வெளியேத் தொடங்கும். கருவுற்ற பெண்ணின் பராமரிப்பு மற்றும் குழந்தைபிறப்பு, பொருளாதார ரீதியில் வலுவாக இருப்பின் புதிய செலவினங்கள் ஒரு பொருட்டாக அமையாது, ஆனால், பொருளாதார ரீதீயில் பலவீணமாக இருப்பவர்களுக்கு புதியசெலவினங்கள் ஒரு சுமையே. குடும்பத்தினரின் ( அக்கா / தங்கை / தம்பி / அப்பா / அம்மா ) தேவைகளையும் சேர்த்து பூர்த்தி செய்யவும் நேரலாம்.
அப்படி இப்படி ஐந்தாறு வருடங்கள் கடத்தியும், ஒரு சிற்சில சௌகரியங்களும் அசௌகரியங்களும் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டும், இதற்கிடையே இரண்டாவது குழந்தைப் பிறப்பும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான தேவைகளும் ஒரு தம்பதியினரை வழிநடத்திச் செல்லும். பெரும்பாலும் இக்காலக் கட்டங்கள் ஒரு ஆற்றில் மிதந்து செல்லும் தக்கை போலவே, சுழண்று செல்ல ஆரம்பிக்கும்.

ஒரு வழியாக 10 வருடங்கள் வரையிலான காலக்கட்டத்தில் தனது சேமிப்பையும், வசதி வாய்ப்புக்களையும் தனிப்பட்ட திறமையையும் வைத்து வசதியாக வாழ என ஒரு வீட்டையும் கட்டியோ, அபார்ட்மெண்ட்டில் இடம் பிடிக்கவோ முயன்று வெற்றியும் பெறுவர். கார், டூவீலர் போன்ற வசதிகள் ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. ஒரு சிலர் அதிகப்படியான பணத்தை உருப்படியாக சேமிக்க, இடம் / நிலம் போன்றவைகளும், லிக்யூடிட்டி தேவைகளுக்காக ஷேர் / மீயூட்வல் பண்ட் / பேங்க் எப்டி / கோல்டு / பிளாட்டினம் என இறங்குவதும், ஒரு சிலர் அதிக ரிட்டர்ன்க்கு ஆசைப்பட்டு ஈமு கோழி, ஆடு, வளர்த்த்ல் போன்றவைகளின் கவர்ச்சி விளம்பரத்தில் விழுந்து சேமித்த பணம் முழுவதும் பணால் ஆவதும் உண்டு.

பலருக்கு இக்காலக்கட்டத்தில் கேரியர் என்பது உயர்வை அளிக்கவோ .. இடம் மாற்றம், பணி மாற்றம் ஏற்படவோ நேரும். ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கையே ஒரு பனிப்போராட்டமாக மாறி ரணகளமாக மாறிவிடும். இக்காரணங்களால், குடும்பம் மற்றும் பணிச்சுமைகளை சரியாக கையாண்டு வெற்றி அல்லது அமைதிகாணத் தேவைப்படும் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட ரசனைகளும், தேவைகளும் மாறவும், பழக்க வழக்கமும் (டாஸ்மார்க் பழக்கம்) போன்றவைகளும், தனிப்பட்ட மனித மனதின் வெறுமை ஏற்படும் பொழுது அதனை நீக்கவென என குறைந்தபட்சம் சிகரெட், பாக்கு போன்றவை லாகிரி வஸ்துக்களுக்கு அடிமையாவதும் இந்தப்பருவமே.

ஒருவழியாக இந்தப்பருவத்தில் குழந்தைகளைப் நன்றாக படிக்க வைக்கவோ, வீட்டுக்கடன் போன்றவைகளால் (இருப்பின்) பொருளாதார ரீதியாக தள்ளாடி தள்ளாடி வெளியேறுவதும், பெட்டர் உறால்ப் ( அதாங்க கணவன் அல்லது மனைவி ) யின் திறமையான செயல்பாடுகளும் உற்றார் உறவினரின் உதவியோ அல்லது உபத்திரம் செய்யாமல் இருப்பதைப் பொறுத்தது. ( உதாரணமாக.. உறவினர் ஒருவர் தனது சேமிப்பு முழுவதையும் தனது உறவினர் வீடுகட்ட கொடுத்துவிட்டு திரும்ப பெற இயலாமல் முழிப்பது.. அதற்காக உண்மையில் உதவி தேவைப்படும் பொழுது செய்யாமல் இருப்பது மிகவும் தவறு)

பொதுவாக, இக்காலக்கட்டத்தில் மிகவும் பொறுமையாகவும், திறமையை வீணடிக்காமல் சரியான இலக்குடன் நண்பர்கள் வட்டம் மற்றும் உறவினர் வட்டத்தின் வழிகாட்டுதல் பெற்றும், அமைதியான முறையில் குடும்பத்தை வளர்த்தும், சமூக உறவில் உறுதியாக கால்பதித்து தனிப்பட்ட முத்திரைப்பதிப்பதும் பிறரின் நம்பிக்கையும், நன்மதிப்பையும் பெறுவதும் சுயநலத்தை வென்று வெற்றி என்னும் பாதையில் அடிஎடுத்து வைப்பது இப்பருவத்தின் செயல்பாடுகளே முக்கியப்பங்கு வகிக்கும் என்பதனை மனதில் நிறுத்தி நிதானமாகவும், கவனமாகவும் செயல்படவேண்டிய மானிடப்பருவம். இங்கே, உடல்நலமும் முக்கியபங்கு வகிக்கும், தொப்பை, உடல்பருமண், நரைமுடி, பைல்ஸ் ( intake of foods – processing and outlet the waste not working properly ) கண் கண்ணாடி அணிதல் போன்றவைகள் ஏற்பட நமது உணவு மற்றும் வேலையின் தன்மையும், உடற்பயிற்சியோ, உடல்நலத்தின் மீது அக்கறை இன்மையோ தான் காரணம்.

மகிழ்ச்சி… பொதுவாக நாம் வாழ்வதே நாம் பெறும் இன்பம் மற்றும் அனுபவம் தான்… பணக்காரராக இருந்தால்தான் இன்பமாக இருப்பார் என்பது மிகவும் தவறு. பிளாட்பாரத்தில் படுத்திப்பவர் தனது நாயுடன் காட்டும் அன்னியோன்யம் மற்றும் அன்பைக்கூட ஒரு சில பணக்காரர்கள் தங்களது சுற்றத்துடன் காண்பிப்பது இல்லை என்பது பெரும்பாலும் நிகழ்வு. ஆகவே, இப்பருவத்தினர் என்ன செய்து கொண்டிருந்தாலும் எதிலும் நிறைவையும், மகிழ்ச்சியையும் காண்பதே தனது அடுத்த பருவத்தினை எதிர்கொள்ளும் தைரியத்தையும், முன்ஏற்பாடுகளையும் செய்யும் என்பதனை மனதில் நிறுத்தி அதற்கேற்ப நடந்து கொள்ளல் நலம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

3 thoughts on “ஆ.பொ.வ.வா.எப்படி? பகுதி 2

  1. மிக அருமையான பகிர்வு ……உங்கள் பகிர்வுக்கு நன்றி……..

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s