மாற்றான்… ஆடு வித்தா 4 காசு… ஆட்டுவித்தா 10 காசு…
mattran… konjam tamil ularals…
ரொம்ப நாளாக பதிவே போடல… ஏன்னா, டொக்கு போட்டது போக, விடுமுறை விட்டது போக… மீதி நேரத்தில் வேலையை பார்க்கவே சரியாக இருந்தது. இந்த தலைப்பை பற்றி இந்தப்பதிவின் கடைசியில் பார்க்க..
• முதல் 2 புயல்கள் நம்ம நாட்டுக்கு இப்ப வந்திருக்கு அதனால என்ன பாதிப்புன்னு 2 நாள் கழித்துத்தான் தெரியும்… சாக்கிரதையாக இருந்துக்கோங்க..
• ஆர்ச் வளைவுகள் கட்டுறாங்க அம்மா.. அதே நேரத்தில் அந்த வளைவுகளை நல்ல ஆர்க்கிடெக் மூலம் சிறப்பாக புதிய வடிவில் புதிய பொருட்களை வைத்து உருவாக்கினால் காலத்திற்கும் அது உலகில் பெயர் சொல்லும் இல்லையா.. ஆமா, இதை எப்படி அம்மாவிடம் சொல்வது.?
• தீபாவளி வந்துடுச்சு வழக்கம்போல.. காசு உள்ளவன் செலவழிக்க பறக்கிறான்.. காசு இல்லாதவன் கடன் கொடுக்க யார் கிடைப்பான்னு அலையறான்.
• டைம்பாஸ் ..ன்னு ஒரு 66 பக்க குட்டி குமுதம் டப் கணக்காக அந்தக்கால சுவாரசியமான குமுதம் போல் வந்திருக்கு.. பார்த்தேளே.. நன்னதான் இருக்கு.
• டெங்கு தமிழகம் எங்கும் பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கு.
• ரெயில் டிக்கட் விலை ஏறுதாம்… மீண்டும் பஸ்ஸேதானா?
• படித்ததில் பிடித்தது. தமிழ்மகன் என்பவர் எழுதிய ஒரு கதை… (குட்டியாக உங்களுக்கு) தமிழ்நாட்டில் உள்ள ஒருவருக்கு இரவு போன் வருகிறது.. அதில் பிரான்ஸ் நாட்டில் வாக்கப்பட்டுப் போன ஒரு அப்பாவிப்பென் கணவரின் குடி மற்றும் அடித்துஉதைத்தலால் மனம்வெம்பி பேசி கவுன்சிலிங் பெறுகிறார். மனைவியும் லோசாக குடித்திருக்கிறாராம்.. கவுன்சிலிங் தந்த நபர் பொறுமையாக அவரை சமாதானப்படுத்தி பிடிக்கலேனே வெளியேறிவிட தெரிவிக்கிறார்.. கொங்சநேரம் கழித்து போன் வருகிறது. எடுத்து பேசும் பொழுது அந்தநபர் சொல்கிறார் நீங்க சொன்ன அறிவுரைப்படியே 14 வது மாடியில் இருந்து குடித்துவிட்டு படுத்துக்கிடந்த கணவரைத் ஜன்னல் வழியாக வெளியேற்றிவிட்டேன்.. என்று…
• மாற்றான்… அப்பப்பா ஒரேநேரத்தில் இதே போல இரண்டு படங்கள் மற்றொன்று சாருலதா… இரண்டு வித்தியாசமான சூர்யாவை இணைத்திருப்பார்கள் என்று போனால் அப்படியெல்லாம் இல்லை.. சோம்பலான சூர்யா, ஜாலியான சூர்யா என இரண்டு ஒட்டி பிறந்த குழந்தைகள்.. அவர்களுக்குள்ளேயே ஈகோ… எனர்ஜியான் என்ற பால் பவுடரில் கலக்கப்பட்ட பின்விளைவுகள் ஏற்படும் ஊக்கமருந்து… அந்த ஊக்கமருந்து கண்டுபிடிக்க காரணம்.. விஞ்ஞானிகள்.. பாதிப்புகள் என சமீபத்தில் வந்த ஒலிம்பிக் போட்டியை பார்த்துக்கொண்டே கதை அமைத்திருக்கிறார்கள்.
• கேவிஆனந்த்.. மெனக்கெட்டு படம் எடுத்திருக்கிறார்.. படம் ரஷ்யா, இந்தியாவில் ராஜஸ்தான் தமிழ்நாடு என சுற்றிசுற்றி வருகிறது… சூர்யாவிடம் இருந்த துறுதுறுப்பு எங்கே போனது… ரொம்ப போராக இருக்கிறது… கதாநாயகி சும்மா சோப்பு டப்பா மாதிரி வந்து போகிறார்.. பாட்டுக் கூட ஒன்னு நல்லாருக்கு படம் ரொம்ப நீளமாக… போய்க்கிட்டே இருப்பதுதான் ஒரே குறை..
தலைப்பைப்பற்றி… சாதரணமாக ஆடு வளர்த்து வித்தால் அதன் விலை ஒருவருக்கு குறைவாகத்தான் இருக்கும்.. அதே நேரத்தில் ஆட்டுவித்தால் (அதிகாரத்தால்) பிறரை இம்சித்து பணம் பெற்றால் காசு கூடத்தான் இருக்கும். ( அய்யோ… கொல்றீங்களே…ன்னு சொல்வது கேட்குது…)