தத்தளிக்கும் தமிழகம்…. எதிர்காலம் என்னாவாகும்?

தத்தளிக்கும் தமிழகம்…. எதிர்காலம் என்னாவாகும்?
tamil nadu facing problems… what next ?
மற்ற மாநிலங்கள் அமைதியாக இருக்க, தமிழகம் மட்டுமே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு அன்றாடம் வாழ்வே பிரச்சினைக்குரியதாக மாறிவிட்டது.
1. மின்வெட்டு
அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. குறிப்பாக தொழிற்நிலையங்கள் நிரம்பிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, தினந்தோறும் 600 ரூபாய் சம்பாதித்த தொழிலாளர்கள் சுமார் 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க இயலுகிறதாம். அதிலும், தறிஓட்டுபவர்களின் நிலைமை மிக மோசம். ரேஷன் அரிசியை சாப்பிட்டு காலம் தள்ளுபவர்களே அதிகம். தொழில் இல்லை.. தூக்கம் இல்லை.. கொசுக்கடியால் காய்ச்ச்ல் உண்டு.. மழை இல்லாததால் விவசாயம் பொய்த்துவிடும் நிலைமை. காவிரி நீர் போதுமானதாக இல்லை. ஆற்றில் உறாயாக படுத்துறங்க போதுமான மணல் கூட இல்லை அனைத்தையும் அள்ளிவிட்டு களிமண் தான் பல்லிளிக்கிறது.

2. தட்பவெப்பம்.
முன்எப்பொழுதும் இல்லாதவகையில், இப்பொழுது வெயில்
104 டிகிரியை தொடுகிறது.. திடீர் என்று சூறாவளி காற்று அடிக்கிறது. மழையும் பெய்கிறது. ஓரு நிரந்தரமான போக்கு
இல்லை.
3. பொருளாதாரம்
தமிழகம் எதிர்பாராத பொருளாதார தள்ளாட்டம் வசதியானவர்கள் வசதியாகவும், ஏழைகள் மிகவும் ஏழையாகவும் போகக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் ஊழல் மற்றும் விலைவாசி ஏற்றத்தால் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்குக்கு விலைஏற்றத்தை செய்து விட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தாறுமாறான விலையேற்றத்தினால், மனித நடமாட்டம் அற்ற தண்ணீர் இல்லாத காடுகூட வெறும் பாறைகளும், முட்செடிகளுமாக பயனற்று இருந்த இடங்களைக் கூட பிளாட்களாக போட்டு விளம்பரப்படுத்தி விற்று விடுகிறார்கள்.
4. பொழுதுபோக்கு ஏமாற்றம்
தற்பொழுது தமிழகம் பொழுதுபோக்கில் கூட பெரும்
ஏமாற்றத்தினையும், வெற்றிடத்தையும் சந்தித்து வருகிறது. பவர் ஸ்டார் போன்றவர்களையும் கைது செய்து விட்டதால், ஈமு கோழியினால் ஏமாந்தவர்களைப் பார்த்து மற்றவர்களும், ஏமாறதவர்களைப் பார்த்து ஏமாந்தவர்களும் மாறி மாறி வஞ்சினம் கொண்டு பார்க்கிறார்கள்.
5. மனச்சிதைவு.
பெண்களின் பெரும்பாலான பொழுதுபோக்காக சீரியல்களே
இடம்பிடித்து இதுகாறும் இல்லாத வன்முறையையும், குடும்பங்களை சிதைக்கும் தகாத சண்டைகளும், உறவுமுறைகளை கெடுக்கும் வசனங்களும் தாறுமாறாக வீட்டுக்குள்ளே வந்து, அதைப்பார்க்கும் பெண்களின் மனதில் விஷ விதையை விதைக்கிறது. இப்படியே போனால், எதிர்காலத்தில் நல்ல சந்ததியினர் உருவாவது கேள்விக்குறியாகிவிடும்.

6. மீடியா
முன்எப்பொழுதும் இல்லாத வகையில் தற்பொழுது 100
கணக்கான சானல்களின் படையெடுப்பாலும், பிரிண்ட் மீடியாக்களின் டமால் டூமில் தலைப்புக்களாலும், தமிழகம் திடீர் என்று செய்தி அதிர்ச்சி அலைகளை சந்திக்கிறது. ஒரு சிறிய ஊரில் ஒரு வீட்டு ஓடு உடைந்தது கூட 24 மணிநேரமும் தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் கட்டாயம் பார்த்து அறிந்து கொள்ளவேண்டிய செய்தியாக வலம் வருகிறது.
7. சுதந்திரம்
இதுதாண்டா சுதந்திரம்ன்னு ஒவ்வொருவரும்
விதிமீறல்களையும், சட்டங்களை மதிக்காமலும், சாலைகள் தோறும் நடந்துகொள்வதால், (மது வேற… தண்ணீர் மாதிரி கிடைக்காத இடமே இல்லை) ஏகப்பட்ட விபத்துக்கள், குப்பைகளை சாலைகளிலேயே போடுதல், ஆடு மாடு வளர்த்தல்
பிறருக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் ஆக்கிரமித்தல், வாகனங்களை ரோட்டில் நிறுத்துதல், சாக்கடைகளில் குப்பை போடுதல், ரோட்டிலேயே ஒன்.டூ பாத்ரூம் செல்தல். பேருந்தில் இருந்து துப்புதல், கூட்டத்தில் புகுந்து சில்மிஷம்.. புதிதாக செயின் அறுத்தல் என எங்கேயும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கிறது.

என்ன செய்யலாம் ?
1. அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை
2. சட்டத்திட்டங்களை கடுமையாக்குதல்
3. தனிப்பட்ட ஒழுங்கீனங்களை தண்டிக்க வகைசெய்தல்
4. மீடியாவின் சுதந்திரமான போக்கினால் எழும் விளைவுகளுக்கு பொறுப்பாக்கி பலகோடிகளை அபராதம் விதித்தல்.
5. சீரியல்களின் அராஜக போக்கினை எதிர்த்து வழக்குத் தொடுத்தல்..
நல்லாயிருக்குள்ளே… இருப்பினும் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுக்கெல்லாம் மிக முக்கிய காரணமாக மக்கள் தொகை… இதைக்கட்டுப்படுத்த இந்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், எதிர்காலத்தில் இந்தியா தத்தளிக்கும் நாடாக மாறிவிடும் அபாயமுண்டு.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

3 thoughts on “தத்தளிக்கும் தமிழகம்…. எதிர்காலம் என்னாவாகும்?

  1. மின்வெட்டு தான் மிக பெரிய கொடுமை…

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s