வான்மேகமே….
space brings wonderful themes
இந்த வானத்தைப்போல அழகானது உலகில் ஒன்றும் இல்லை. யாராயிருந்தாலும், எப்படியிருந்தாலும், எங்கிருந்தாலும், ஒரே மாதிரியாக காட்சியளிப்பதில் அந்த வானம் மட்டுமே இருக்க இயலும்.
கவிஞர்கள், தங்களது பெரும்பாலான கவிதைகளில் எப்படியாவது இந்த வானத்தை கொண்டுவந்து விடுவார்கள். கவிஞர் வைரமுத்து ஆரம்பமே … நிழல்கள் படத்தில் வரும் அந்த வானைப்பற்றிய பாடலே.. ( வானம் எனக்கு ஒரு போதி மரம், தினமும் எனக்கு சேதி தரும் )
விண்டோஸ் பயன்படுத்துபவர்களின் பேவரைட் ஸ்கிரின் ஒரு மேடும் அதனைச் சார்ந்த வானமும்… மிக அழகாக 90களில் கலிபோர்னியா மாகானத்தில் எடுக்கப்பட்ட படமும், 2005ல் மீண்டும் அதே கோணத்தில் வேறொருவர் அதே இடத்தில் எடுக்கப்பட்ட படமும் வெவ்வேறாக இருக்கிறது. ( நெட்டில் தேடிப்பார்க்கவும்…)
தேமுக தலைவரின் வெற்றிப்பயணமும், அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரேன்னு பாடியதற்கு பின்னரே… என்பதனையும் நினைவில் கொள்ளவும். காக்கிச்சட்டைத் திரைப்படத்தில் வானிலே தேனிநிலா ஆடுதே பாடுதே வானம்பாடி…ன்னு கமலும் அம்பிகாவும் ஜோடி சேர்ந்து நம்மை அந்த வானில் சிறகடிக்கமாறு நமது சிந்தனைகளை சிதறடித்தார்கள்.
மேகம் கறுக்குதுன்னு… தண்ணீர் தண்ணீர் படத்தில் சரிதா பாடிக்கொண்டே வானத்தைப் பார்ப்பதும், ஒரு சில நீர்த்துளிகள் மட்டும் விழுந்து மழை மறைந்து விடுவதும் திடுக் திருப்பம் நிறைந்தது… ( மறக்க இயலுமா…)
சிறு குழந்தைகளுக்கு இருட்டாயிருக்கும் வானத்தைப் பார்த்து பயப்படுவார்கள்… அந்த நாளில் அமாவாசை இருட்டில் நடந்து செல்ல அஞ்சி பெரும்பாலும் பயணத்தை தவிர்த்து விடுவதும் உண்டு.
வானம் பொய்த்து.. தண்ணீர் இல்லையெனில் இந்த உலகத்தை கற்பனை செய்து பார்ப்பது அரிது. இன்றைக்கு நமது அன்றாட நடவடிக்கைகள் செய்கைகள் அனைத்தும் வானத்தை முன்னிறுத்தியே அமைகிறது…( அதாங்க செயற்கை கோள்கள் இல்லைன்னா செல்போன் இல்லை, டிவி இல்லை, இல்லை இல்லைகள் தான்…). அந்த முக்கியமானவர்கள் வானத்தில் அலையும் அலைக்கற்றைகளாலேயே அலைக்கழிக்கப்பட்டது உலகம் அறிந்த விஷயம்.
நடப்பு விஷயம்…
• அம்மாவும், ஜகதீஷ் சட்டரும் பேச்சுவார்த்தை வானம் பொய்த்தால் தண்ணீர் விடுவீர்களா விடமாட்டிங்களா?
• 2ஜி அலைக்கற்றையினால் ஏற்பட்ட நஷ்டம் உண்மையானதா? இல்லையா? ஆடிட் டிபார்ட்மெண்ட்டையே ஆடிப்போகும்படி கேள்வி எழுந்துள்ளது.