டிசம்பர் 21ல் உலகம் அழியுமா.. அழியாதா?

டிசம்பர் 21ல் உலகம் அழியுமா.. அழியாதா?
Really the day on 21st December 2012, The World is end ?

ஊடகங்களின் தலையாய பிரச்சினைகளில் தற்சமயம் முன்னிலையில் இருப்பது இந்த டாபிக்தான்.. (12.12.12ல் ரஜினி பிறந்தநாள்தான் முடிஞ்சாச்சே அப்பா சாமி அலப்பறை தாங்க முடியல, எந்தசானலை துறந்தாலும் ரஜினிபாட்டுதான், எப்எம்லாம் ஒரே ரஜினிபாட்டுதான்.. வார, நாளிதழ்கள்லாம் ஒரே ரஜினிமயமாம் தான்… சே…ன்னு பப்ளிக் என்னுமளவிற்கு ஆகிவிட்டது) நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் அடித்து துவைப்போம்.
t3
• 3113 வருடங்களே உள்ள மாயன் காலண்டர் 21.12.2012ல் முடிவிற்கு வருவதால், பலரும் இந்த கருத்தை வழியுறுத்துகிறார்கள். மாயன் என்பவர் மயன் என்பதாகவும், இந்துக்கள் அவரை கடவுளாக வணங்குகிறார்கள் எனவும் ஒரு பதிவில் பார்த்தேன். திரு. கணபதி ஸ்தபதி என்பவர் இந்த மயன் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்கிறார்கள்.

• பைபிள் கூட இந்த வருடமுடிவில் உலகம் அழியும் எனத் தெரிவித்திருப்பதாக, திரு. உமாசங்கர், ஐஏஎஸ் கூறியதாக செய்திகள் கூறுகிறது.

• மதுரை ஆதினமும் அடித்து சொல்றார் உலகம் அழிந்துவிடுமாம்.

• ஆனால், நாஸா வெளியிட்டுள்ள செய்தியில் இதெல்லாம் கட்டுக்கதை, யாரும் நம்பவேண்டாம் என்கிற ரேஞ்சில் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
t0
• அதெல்லாம் சரி.. அழியுமா.. அழியாதா… விஞ்ஞான ரீதியில் இந்த உலகம் அழிய என்னவெல்லாம் காரணமாகலாம்..

1. பூமி தனது இயக்கத்தை தாறுமாறாக மாற்றாலாம் அதன் விளைவாக அனைத்தும் தலைகீழாக மாறலாம்.
2. சூரியன் தனது வெப்பக்கதிர்களின் வீச்சை அதிகரிக்கலாம்.
அதனால் பூமியின் வெப்பம் அதீதமாக உயர்ந்து, பொருட்கள் அனைத்தும், நாமும் தான் வெப்பம் தாங்காமல் எரிந்து போகலாம்.
3. வெளியில் உள்ள கிரகங்கள், விண்மீண்கள் போன்றவைகள் பூமியில் வந்து மோதலாம்.
4. புவிஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்பட்டு பல விஷயங்கள் ஏற்படலாம்.
5. காற்றுமண்டலத்தில் உள்ள வளிமங்களை வளர்சிதை மாற்றம் / கெமிக்கல் ரியாக்ஷன் மூலம் மாற்றம் அடைந்து அதன்விளைவாக ஆக்ஸிசன் போன்ற இன்றியமைதா வாயுக்கள் காலியாகலாம்.
6. கடல் நீர் திடீரென வற்றிப்போதல், அல்லது பொங்கி எழுதல்
7. பூமிஅதிர்ச்சி ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படலாம்.
8. மனிதமனங்களில் ஒருவித ஒட்டுமொத்த அகோரம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
9. மேற்கண்ட பல விஷயங்களோ அல்லது ஒரு விஷயமோ ஏற்பட்டு, அதன்விளைவாக மனிதர்களின் இரத்தஓட்ட மண்டலம் சிதையும் படியாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த மனிதஇனமும் மடியலாம்.

1980களில் ஸ்கைலாப் என்னும் சாட்டிலைட் விழுந்து ஒரு ஊரே காலியாகிவிடும் என மீடியாக்கள் (அப்போ பிரிண்ட் மற்றும் ரேடியோ மீடியா மட்டுமே பிரபலம்) அலற, மக்கள் கூட்டம் கூட்டமாக பயந்து போய் வீட்டில் உள்ள ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டு விட்டு, உறாயாக சினிமா பார்த்துவிட்டு, சிவனே என்று கடவுளை வேண்டிக்கொண்டே உறவினர்களுடன் ஒரே இடத்தில் கூடியிருந்ததாக கேள்வி… பின்பு ஸ்கைலாப் கடலில் விழுந்து, அந்த செய்தி ரேடியோ மூலமாக சொன்னபிறகுதான் பலருக்கு மூச்சே வந்ததாம்.

2012ல் அப்படியெல்லாம் நடக்காது என நம்புவோம்.. வழக்கம் போல் இந்த உலகம் நீடூழி வாழ வாழ்த்துவோம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

100லிருந்து … 101 .. கம்பெனி சீக்ரெட்ஸ்

100லிருந்து … 101 .. கம்பெனி சீக்ரெட்ஸ்
100 to 101 – company secrets of bloging

அப்பாடா ஒரு வழியா ஒரு வருடத்தில் 100 பதிவுகள் போட்டாட்டாச்சு, (இது என்ன பெரிசு ஒரு மாதத்தில் 100 பதிவுகள் போடுபவர்கள் இருக்கிறார்கள் … என்ன செய்வது பிளாக்கே கதியா இருப்பவர்களுக்கும் ஓய்வில் பிளாக் பக்கம் கவனம் திருப்புவர்களுக்கும் வித்தியாசம் உண்டள்ளவா…
t0
கம்பெனி சீக்ரெட்ஸ்ன்னா…. இந்த பதிவுலகில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்தப் பதிவு.

முதல் சீக்ரெட்… நம்மாளுங்க எல்லாருக்கும் அந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப பிடிக்குது…

இரண்டாவது சீக்ரெட்… சினிமா சம்பந்தமான செய்திகளை விரும்பி விரும்பி படிக்கிறார்கள்.

மூன்றாவது சீக்ரெட்… தலைப்பு சரியில்லாவிட்டால் நல்ல பதிவைக்கூட சீந்துவதற்கு யாருமில்லை.. அதே போல் மொக்கை பதிவு கூட நச் தலைப்பைப் பார்த்து ஓடிஓடி ஓப்பன்செய்கிறார்கள்.
t1
நான்காவது சீக்ரெட்.. தமிழ்வெளி, தமிழ்மணம், யூடான்ஸ், தமிழ்10, உலவு, தேன்கூடு, இண்டலி இன்னும் சில திரட்டிகளில் இணைத்தாலும், அவர்களின் முன்னிலைப் படுத்துதலைப் பொறுத்தே நமக்கு உறிட்ஸ்கள் அள்ளுது.

ஐந்தாவது சீக்ரெட்.. திங்கள் மதியம் அல்லது செவ்வாய், புதன் அன்று போடப்படும் பதிவுகளுக்கே வரவேற்பு அதுவும் வெள்ளிக்கிழமை மதியம் போடப்படும் பதிவுகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.. (ஏன்னா… விட்டகுறை தொட்டகுறை வேலைகளை முடித்துவிட்டு வீக்எண்ட் கொண்டாடப் போக வேண்டாமா? அப்பபோய் உங்க பதிவைப் போய் யாராவது படிக்கவருவார்களா அம்மாஞ்சி மாதிரி சொல்லவந்தீட்டீங்க…)

ஆறாவது சீக்ரெட்.. வெளிநாட்டில் அதுவும் ஒண்டிக்கட்டை ரிமோட் நாடுகளில் உதாரணம் செசல்ஸ், ஐரோப்பா நாடுகளின் மூலைமுடுக்குகளில், கப்பல்களில் செல்லும் தமிழர்களே தமிழ் பிளாக்களுக்கு பெரும்பாலும் தொடர் ஆதரவு தருகிறார்கள்.
t2
ஏழாவது சீக்ரெட்.. பின்னூட்டம் வந்தால்தான் பிளாக்கை தொடருவேன் என அடம்பிடிக்காமல், வந்தாலும் சரிவராவிட்டாலும் சரின்னு தொடர்ந்து எழுதுபவர்களையே இந்த உலகம் நம்புகிறது..

எட்டாவது சீக்ரெட்.. போட்டிபோட்டுக்கொண்டு முதல் இடம் பெற எண்ணக்கூடாது (ஏனென்றால் அது எட்டாக்கனி ஏற்கனவே பல ஜாம்பவான்கள் அதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

ஒன்பதாவது சீக்ரெட்.. தப்பித்தவறி யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பிளாக் எழுதக்கூடாது…

பத்தாவது சீக்ரெட்.. இந்தவாரம் இந்த தகவல் சிக்கிடுச்சுன்னு ஒவ்வொருவாரமும் தலைப்பு மற்றும் செய்திகளை தெரிந்தெடுத்து எழுதினால் மக்களின் வரவேற்பு அமோகம்..

வாழ்க வளமுடன் தொடரும்…
அன்புடன் சிவபார்க்கவி

பலமுறை http://ta.wordpress.com/ இன்டெக்ஸ் மற்றும் தமிழ்வெளி,தமிழ்மணம் முன்னனி பதிவுகளில் இடம்பெற்றிருந்ததற்காக வாழ்த்துக்கள்.. (என்னசெய்வது நாமளே நம்மள வாழ்த்திக்க வேண்டியதுதான்..)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

நடுவுல 100 பக்கத்தைக் காணோம்… திரை விமர்சனம்

நடுவுல 100 பக்கத்தைக் காணோம்… திரை விமர்சனம்
naduvula konjam pakkatha kanom .. tamil film review
100 …. ஆமாங்க ஆமாம்… இந்தப்பதிவு 100வது பதிவு… சென்ற வருடம் இதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட சிவபார்க்கவி.வேர்டுபிரஸ்.காம் வலைப்பூவை தொடர்ந்து 31000 உறிட்களுக்கு மேல் அடித்து, தங்களது பேராதவை அளித்து வந்து கொண்டிருக்கும் இணைய தளபதிகளுக்கும், உறவுஸ்கிங் மேக்கர்களுக்கும், தகவல்தொழில்நுட்ப மதியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்…
tx

t0

t7
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…

அருமையான டைட்டில், பாலாஜி சக்திவேல் குழுவினர் என்பதால் புதிய கான்செப்ட் என்ற எதிர்பார்ப்பு தலைதூக்கிறது. அதனை கொஞ்சம் ஈடும் செய்கிறார்கள்.. ஒரு திங்கட்கிழமை மதியம் தொடங்கி வியாழன் காலை வரை நடைபெறும் கதை. நட்புன்னா இந்த மாதிரிதான் இருக்கனும்… வயது வித்தியாசம் பொருளாதார வித்தியாசம் பாராமல் 3+1 நண்பர்கள் உயிரைக்கொடுத்தும் (உயிரைக்கொடுத்து அல்ல அந்தளவிற்கு நட்பிற்காக நண்பனுக்காக தங்கள் உழைப்பைக்கொடுத்து சிக்கலில் மாட்டும் தனது நண்பனை காப்பாற்றி, கல்யாணம் பண்ணி வைப்பது.. ஆகா .. ஆகா.. அருமை ) (இது ஒரு உண்மைகதையும் கூடவாம்…) படம் ஆரம்பத்தில் அடுத்த நாள் திருமணம் நடைபெற இருக்கும் நண்பர் தனது நட்பு வட்டத்தில் அரட்டை அடிக்கும்பொழுது, கிரிக்கெட் விளையாடலமா என கிளம்பி கிரிக்கெட் விளையாட (கொஞ்சம் நீளமான காட்சிகள்…தான்) அதுவே படத்தின் கதைக்கும் ஆரம்பமாகிறது.

என்னாச்சு.. நீ தான் பாலைப்போட்டே, அப்படியே பறந்து வந்தது, நான் பிடிக்க போனேன் அப்படியே விழுந்து விட்டேன் பின் மண்டையிலே …… அடிபட்டது, இது ஒன்னும் பிரச்சினையில்லை கொஞ்சம் டெம்பரவரி மெமரி லாஸ்தான் தானா சரியாகிவிடும்…
இந்த வசனம் படம் பார்க்கும் அனைவருக்கும் மனப்பாடம் ஆகிவிடும் பின்னே 100 தடவையாவது இது திருப்பி திருப்பி வந்தா… ஆனா அதுதான் படத்தின் உறலைட்டே.. நண்பர்கள் ஒவ்வொருவரும் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் சூப்பர்ப்.. சிவாஜிகள் பலர் உருவாகிவிட்டார்கள்..
t2
சரியான நடிகர்கள் தேர்வு… பெயர்கள் ஒவ்வொருவருக்கும் சூட் ஆவது.. அவர்களுடைய பெற்றோர்களின் மேனரிசம்.. குடும்ப சண்டை… திருமண வரவேற்பில் பெண்ணைப்பார்த்து மாப்பிள்ளை யார்டா இவ .. பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டுன்னு கேட்பது… அதையெல்லாம் மூன்று நண்பர்களும் சமாளிப்பது.. என படம் கொஞ்சம் நீளமாக போனாலும்… பார்த்து ரசிக்கும் விதமாக எடுத்திருக்கும் இயக்குனர்..

பாடலே இல்லாத குறையைப் போக்க வேண்டி, படத்தின் புரேமோவிற்காக எடுக்கப்பட்ட பாடலை இடையில் போட்டு விடுகிறார்கள். சதா நேரமும் ரூமில் படுத்துக் கொண்டிருக்கும் நண்பரைப் பார்த்து என்னடா எப்ப பார்த்தாலும் புள்ளத்தாச்சி மாதிரி படுத்தே கிடக்கிற என்ற வசனமும். உறவினர் சதீஷ் என்பவருக்கே திருமணம் என நம்பவைத்து மணமகனை மேடையேற்றுவதும் அங்கே அந்த சதீஷ் வந்து பின்பு நடைபெறுவது அட்டகாசமான காட்சிகள். அண்ணன் கூட சண்டை போட்டுபிரிவதும், திருமணத்திற்கு வந்த அண்ணனை சண்டையைப்பற்றி ஞாபகம் இல்லாமல் கட்டி அணைத்து அன்பால் நனைப்பதும்… டாக்டரிடம் பேசுவது.. நர்ஸ்கள் டெரர் ஆவது என காட்சிக்கு காட்சி நன்றாக மெனக்கெட்டிருக்கிறார்கள்… நிறைவான படம்…கொஞ்சம் தொய்வைப்பற்றி கவலைப்படாமல் பார்த்து ரசிக்கலாம்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

துப்பாக்கியில் சுட்ட பீட்ஸா …. 2 திரைப்பார்வை

துப்பாக்கியில் சுட்ட பீட்ஸா …. 2 திரைப்பார்வை
Thuppakki , Pizza – Tamil Film Reviews

கொஞ்சம் டியூப் லைட்தான்… எல்லாரும் அடித்துத்துவைத்து தூர போட்டபின் எடுத்து விமர்சனம் செய்வது…. என்ன செய்வது.. மின்தடையால் இப்போதான் இந்த லைட் எரிகிறிது…

1. பீட்ஸா

இளமை துள்ளும் இந்தக்கதையில் டெரர் எட்டி பார்க்குது ஆரம்பத்தில் இருந்தே ஒரு டூபாக்கூர் கதை கதைக்குள்ளேயே வளர்ந்து வருவதால் நமக்கு எது டூபாக்கூர் எது ஒரிஜினல்ன்னு பிரித்து பார்க்க இயலாததே இந்தப்படத்தின் வெற்றி…
t1
இளைஞன், இளைஞி இருவரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவர்கள் இளமை முழுவதும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள், கெட்டூகெத்தர் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள், சில நாட்களில் அந்த பெண் கர்ப்பாகிவிடுவதால் ( பாதுகாப்புகளை மீறி ) உடனே வீட்டிலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்தும் கொள்கிறார்கள்.. இளைஞன் பீட்ஸா கடையில் சப்ளை செய்து சிறிது வருமானம் பெறுபவராகவும், இளைஞி பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதில் முன்னேற்றம் காண முனைபவராகவும், பீட்ஸா கடை ஓனர் மற்றும் இரு பணியாட்களும் இளைஞனுடன் நன்கு பழகுபவர்களாக இருக்கிறார்கள்… ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில், இளைஞன் கையில் 2 கோடி மதிப்பிலான பொருள் கிடைக்கிறது அதனை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டி இளைஞனும், இளைஞியும் சேர்ந்து முயற்சி செய்து வெற்றியும் ? பெறுவதுதான் … இந்த பீட்ஸா…
t0
படம் உண்மையில் ஒரு திரில்லர்தான்… அடுத்து என்ன என யோசிக்க விடாமல், காட்சியமைப்புகள்… இந்த இளமை டீம்முக்கு தமிழ் திரையுலகம் தனது பாராட்டு என்னும் பட்டு கம்பளத்தை விரித்து வரவேற்கிறது.

2. துப்பாக்கி
t2
நீண்ட நாளுக்குப்பின் விஜயின் ஒரு வெற்றிப்படம்,
வழக்கமான அட்டு பில்டப்கள் இல்லாமல், வெத்துவேட்டு பஞ்ச்கள் இல்லாமல், நார்மல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வேடத்தில் விஜய். இரானுவத்தில் இருந்து 40 நாட்கள் விடுமுறையில் வரும் விஜய் அண் கோ ( வீடு மும்பையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளவும் ) சேர்ந்து எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு சந்தேகப் பார்ட்டியை பின்பற்றி 20 இடங்களில் சாதரண மனிதர்கள் போலவே இருக்கும் தீவிரவாதிகள் ஒழித்து கட்டுவதும் இதனால் 20 இடங்களில் குண்டு வெடிக்க இருப்பதைத் தடுக்கவும், பின்னர் இந்த தீவிரவாதிகளின் தலைவனை கண்டுபிடித்து அழிக்க தன்னையே பணயம் வைக்கவும் விறுவிறுப்பான காட்சிகளால் நம்மை ஆனந்தப்படுத்துகிறார் இயக்குனர் முருகதாஸ். தொட்டுக்க ஊறுகாய் மாதிரி காஜல் வந்தாலும், பொருத்தமான இடங்களிலேயே காட்சிகள் அமைவதால், மெயின் கதைக்கு சங்கடமில்லை… கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் லாஜிக் பார்க்கமால் பார்க்கனும்…. மத்தபடி இதுவும் ஒரு வெற்றிப்படம் தான்.
t3
இந்த இரண்டு படங்களிலும், பொதுவாக சிரத்தையெடுத்து மக்களை எவ்வாறு திருப்திபடுத்துவது என்பது வெவ்வேறு சிந்தனைகளில் உருவாக்கி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு