கும்தலக்கா கும்மா, கும்மி அடிச்சா கும்கி…
kumki – film review and 2012 top ten issues of tamil nadu
வாழ்க வளமுடன், 2013 பிறந்தது… அனைவரும் வழக்கம் போலவே ஓடிக்கொண்டிருக்கிறோம், இந்த வயத்தைக் கழுவ, மற்றும் இந்த ஆடம்பர வாழ்க்கையை வாழ… சந்தோஷமே வாழ்க்கையின் ஆதார சுருதி…
நாடும் வீடும் பல பிரச்சினைகளை தாங்கி தினம் தினம் மீடியாவின் பூம்களால் பெரிது பெரிதுதாகத் தோன்றத் தொடங்கி விட்டது. ஆன்மீகம்.. சிறுது சிறிதாக வளர்ந்து வருவதுபோல் தோன்றினாலும், பெரும்பாலும் பலராலும் மறக்கடிக்கப்படும் விஷயமாக மாறி வருகிறது.
இளந்தளிர்களைப் பொருத்தமட்டில் படிப்பு படிப்பு என அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.. எப்படியானும் ரேங்க் எடுக்கனும், கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி செட்டில் ஆகிவிடவேண்டும் என உத்வேகம் தெரிகிறது.
தமிழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில்…
1. பவர்கட்
2. விலைவாசி ஏற்றம்
3. தண்ணீர் தட்டுப்பாடு
4. டாஸ்மாக்
5. சாலை விபத்துக்கள்
6. விவசாயம் பொய்த்தல்
7. சிறுதொழில்கள் நசிதல்
8. தொழிலாளர்கள் கூலிப் பிரச்சினைகள்
9. ரியல் எஸ்டேட் மற்றும் மணல் பிரச்சினை
10. செயின்பறிப்பு மற்றும் திருட்டுக்ள் அதிகரித்து,
மற்றவேலை வாய்ப்புக்கள் குறைந்தது
என 2012ல் டாப் டென் வகித்தது.
2012ல் இறுதியில் வந்தாலும் மனதிற்கு நிறைவைத்தந்த படம் கும்கி, அழகான படப்பிடிப்புத்தளங்கள் மற்றும் பிரபு சாலமோனின் மற்றுமொரு மலைக்காவியம்… ஒருசில கிராபிக்ஸ் குறைபாடுகள் இருந்தாலும், அருமையான இசையும், குழுமையான படப்பிடிப்பும், கதைநேர்த்தியும் அதைக் கொண்டுவந்த நடிகர்களையும் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் (அறிமுகமாம் ஆனால் எக்ஸ்பீரியன்ஸ் நடிகர்கள் போல நன்றாக பர்மான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்) ( தம்பி ராமையாவிற்கு அவார்டே வழங்கலாம்… அழகான நடிப்பினால் அசத்துகிறார் ) அந்த யானையும், அதன் இயல்பான நடிப்பும் கண்கொள்ளாக் காட்சி.
கதைச்சுருக்கம், கோவில் யானையுடன் விக்ரம் பிரபு மற்றும் தம்பி ராமையா ஊர்ஊராக சுற்றி வருகிறார்கள், யானைக்குரிய லைசென்ஸ் காணாமல் போய், வனத்துறையினரால் சிறைபிடிக்கும்பொழுது உதவிசெய்யும் நண்பருக்கு, உதவி செய்ய ஒரு மலைக்கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கொம்பன் என்னும் யானையை அடக்க கும்கியாக (ஒரு சில தினங்களுக்கு மட்டும் என்னும் கண்டிசனில்) வந்து சேர்கிறார்கள்.. அங்கே உள்ள மக்களின் உண்மையான செயல்பாடுகளினாலும், அந்த ஊரின் தலைவர் மகளின் அழகைக் கண்டு காதலில் விழும் யானைபாகன் மீண்டும் ஊரைவிட்டு கிளம்பாமல் யானையை கும்கியாகவே பயிற்சி செய்கிறார். கடைசியில் காதலும் பணால் கும்கியானையும் பணாலாக.. காதல் பட உறீரோ போல ஆகிவிடுகிறார். இடையில் நடைபெறும் காதல் புராணமே படம் முழுவதும் ஆக்கிறமிக்கிறது.
நூற்றுக்கணக்கான சேனல்களுடன், விரல்விட்டு என்னும் அளவிற்கு பிரிண்ட் மீடியாக்களுடன் விகடனின் ( குமுதம் மாதிரி ) டைம்பாஸ், சிங்கிள் டிஜிட் எப்.எம் களும் தமிழனின் பார்க்க, படிக்க, கேட்க என அனைத்து புலன்களையும் நாள்தோறும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.
தமிழர் திருநாளாம் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம், நட்பு பாராட்டி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்.
அன்புடன், சிவபார்க்கவி