ஆதி பகவான்.. பார்ட் 2 உண்டா ?
adhi bagawan film review
அடடா என்ன இது … போனவாரம் பார்த்த விஸ்வரூபத்தில் கடைசியில் வில்லன் தப்பி பார்ட் டூவில் சந்திக்கலாங்கிறார், இங்கே என்னடா என்றால், கத்தியால் குத்தி குத்தி கொலை செய்தும் இரண்டே நிமிடத்தில் வில்லன் காணாமல் போய்விடுகிறார்.. ஆதிபகவான் 2 பார்ட்க்காக இருக்கும்போல.
சரி சரி கதை என்ன.. இது கொஞ்சம் வித்தியாசமான கதைதான், நம்ம பகவான் தான் உறீரோ கம் வில்லன் ( ஜெயம் ரவி ) உதட்டில் லிப்ஸ்டிக் தடவிக்கொண்டு, கிட்டத்தட்ட 9 மாதிரியும் அதே நேரத்தில் பார்த்த பெண்களை நினைத்தமாதிரி பயன்படுத்திக்கொண்டும் கூடவே ராணின்னு ஒரு பெண்ணை நேசித்து பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பெரியபெரிய தாதா செய்ய வேண்டிய வேலையை தான் ஒருவரே செய்து மும்பையில் எண்கவுண்டரில் போட வேண்டிய நபராகிறார். காரணம், மும்பையை சேர்ந்த அரசியல் புள்ளி மத்தியமந்திரி ஆக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் புள்ளியை போட்டுத்தள்ளுகிறார். மும்பை பார்ட்டி மத்தியமந்திரி ஆனவுடன் அவருடைய தம்பி இவருடைய காதலியை கைபற்ற நினைப்பதால், மந்திரி தம்பியை போட்டுத்தள்ள, மந்திரி போலீஸ்இடம் சொல்லி பகவானை என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையே, போலீஸ் ஆபிஸருக்கும் பகவானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு, பகவானைப் போலவே உறாங்காங்கில் இருக்கும் சாதா ரவுடி (இன்னொரு ஜெயம் ரவி) கூட்டிவர ராணி தலைமையில் உறாங்காங் சென்று, அதிலும் வெற்றிபெற்று ஆதி (உறாங்காங் ஜெயம்ரவி) லோக்கல் கேங்கிடம் இருந்து உயிரைக்காப்பாற்றி மும்பை கொண்டுவந்து போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள்.
இதற்கிடையே, ஐதரபாத்தை சேர்ந்த கிராணைட் பெரும்புள்ளிகளிடம் கொள்ளைஅடித்ததற்காக அந்தகும்பலும் பகவானை போட்டுத்தள்ள தேட, பணம் வாங்கிக்கொண்டு எண்கவுண்டர் செய்ய கொண்டுபோகும்வழியில் போலிஸ் ஆபிஸர் 3 மணிநேரம் மட்டும ஐதரபாத் பார்ட்டியிடம் ஆதியை ஒப்படைக்க, கடினமாக நையப்புடைத்தும், சினிமாத்தனமான வெறி ஏற்பட்டு கடைசி நேரத்தில் ஆதி தப்பியும், இதற்கு காரணமான பகவானையும் போட்டுத்தள்ள கோவாவிற்கு வருகிறார், (எப்படித்தெரியும்) இறுதிகட்ட போரில் ராணி மற்றும் பகவானை கஷ்டப்பட்டு போட்டுத்தள்ள… 2 நிமிடத்தில் பகவான் உடல் மட்டும் காணாமல் போக… நாம் கொஞ்சம் ஜெர்க் உஷ் அப்பாடான்னு வெளியே வருகிறோம்.
ஜெயம்ரவிக்கு இது ஒரு சவாலான வேடம்தான் 9 போல நடிக்க தனித்திறமை வேனும்ல.. ராணியாம் ராணி தண்ணியடிக்குது, தம்மடிக்குது சண்டைபோடுது, கூட இருந்தே போட்டுத்தள்ளுது, டாக்டர் மாதிரி மார்பில் பாய்ந்த குண்டையெல்லாம் அனாவசியமாக எடுத்து வீசுது. ஓரு ரோக்கை தனது தங்கை விரும்பியதை நாசுக்காக கண்டித்தும், அவனை வரவழைத்து பேசிப்பார்த்தும், காசு கொடுத்து பார்த்தும் தங்கை திருந்தாத காரணத்தால் கண்எதிரே டமால்ன்னு உடனடியாக போட்டுத்தள்ளுவது.. திக்திக் நொடிகள்.
மற்றபடி, கேமராவைத்தூக்கிகொண்டு மும்பை, கோவா, உறாங்காங்ன்னு சுத்தே சுத்துன்னு சுத்திகாண்பிக்கிறாங்க.. அதுவும், ஒரு பழைய அரண்மணையை கொலைக்களமாக மாற்றி, கோவாவின் இடிந்த கோபுரங்களை வேறுவிதமான கோணத்தில் காண்பிக்கிறார்கள். இசை இருக்கிறது, ஆனாலும், ஏதோ மிஸ்ஸிங்… ஆங் மருந்துக்குகூட காமெடிபடத்தில் இல்லை. அமீரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.