கீழ்த்திருப்பதி லட்டு திண்ண ஆசையா? (பகுதி 2)

கீழ்த்திருப்பதி லட்டு திண்ண ஆசையா? (பகுதி 2)
THIRUPATHI LADDU THINNA ASAIYA PART 2

கீழ்த்திருப்பதியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி அலமேலு மங்காபுரம் போறதுக்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆகிவிட்டது அதனால், வரும்பொழுது ஆட்டோவில் 50 ரூபாதான்.. வந்துட்டோம் 15 நிமிடத்தில். வரும்வழியில் சின்னபொன்னு ஒரே அழுகை என்னாச்சு? நாங்க கேட்கல கேட்டது ஆட்டோ டிரைவர்.. அதாவது அலிபிரி பக்கத்தில் உள்ள z00 வுக்கு போகனுமாம்… டிரைவர் மெர்சலாகி 300 ரூபா கேட்டவர் ஓரேடியாக குறைத்து 160க்கு ஒத்துக்கொண்டு, அடுத்த அரைமணியில் குறுக்குவழியில் மிருககாட்சி சாலையில் இறக்கிவிட்டார்.
t1
அங்கே கூட்டம் இல்லை.. மிருககாட்சி சாலை நன்றாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கு. வசதியிருந்தா 4 சக்கர வாகனத்திலேயே (ரூபாய் 250 கட்டணம்) அல்லது 25ரூபா கட்டி பேட்டரி வாகனத்திலோ சுற்றலாம். ஆனால் மிருகம்லாம் விரல்விட்டு என்னும் அளவிற்கே உள்ளது. ஆனால் நன்றாக பராமரிக்கிறார்கள் என்பது அது கொழுகொழுவென இருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஈமுவை ஏலம் விட தவிக்கிறது அரசு. அங்கே ஒரு சில ஈமுவை காட்சியாக வைத்திருக்கிறார்கள். வெள்ளை புலியும், 3 சிறுத்தைகளும் பார்த்தோம்.
காட்டிற்கு நடுவிலே ஸ்நாக்ஸ் கடை இருப்பதாலோ என்னவோ, சுமாரான குஸ்காகூட சரக்கு முழுவதும் காலியாகிவிடுகிறது. வத்தல்தொத்தல் 3 சிங்கங்களை கூண்டுவண்டியில் சுற்றிகாற்றி 25 ரூபா வாங்கிகொள்கிறார்கள். புலின்னு போட்ட இடத்தில் வெறும் புளியமரம் தான் இருக்கிறது. என அப்படிஇப்படின்னு கால்நடையாகவே சுற்றிவர 4 மணிநேரம் ஆகிவிட்டது. அப்புறம், ஊருக்கு எந்த பஸ்ஸில் ஏறுவது என தெரியவில்லை வர பஸ்ல எல்லாம் தெலுங்குல எழுதியிருக்கு.. ஒரு ஆட்டோகாரர் கொண்டுவந்து ரோட்டில் விட்டுவிட்டு ஓடியே போய்விட்டார்.
எல்லாருக்கும் விடுமுறை தினமாகையால், இளைஞர்கள் பட்டாளம் டூவீலரில் (டாஸ்மார்க் அங்கேயெல்லாம் தனியார்வசம், சரக்கை அடித்துவிட்டு?) தாறுமாறாக பறந்து கொண்டிருந்தார்கள். அப்புறம் வெறும் 8ரூபா ஒரு நபருக்கு வாங்கிக்கொண்டு (டிரைவர்) சேஷர் ஆட்டோவில் பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். இடையில் அலிபிரியில் (நாங்க போன இடத்திற்கு மிக அருகில்) அந்த சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அடுத்த நாள் வந்த பேப்பரில் படித்து தெரிந்து கொண்டோம்.
t2
சித்தூர் வந்து, வேலூர் வந்து, திருவண்ணாமலை வந்து, இடம்இல்லாமல் வந்த பேருந்தில் இடம்பிடித்து (படிக்கட்டில்) ஊர் வந்து சேர்ந்தோம். இரவில் வீட்டுட்க்கு வர ஆட்டோபிடித்து (பஸ்டிக்கட்டைவிட அதிகம்) வீடு அங்கே இருக்க, ஆட்டோ இங்கேயே என இறக்கிவிடப்பட்டோம். (10ரூபா குறைவாக கொடுக்குறோமாம்.)
நீங்க எப்படி சீக்கிரம் தரிசனம் செய்தீங்கன்னுதான் கேட்க வறிங்க… நாங்கதான் 50ரூபா கொடுத்து ஆன்/லைன் புக்கிங் செய்து விட்டு சென்றதால் 4 மணிநேரத்தில் தரிசனம் கிடைத்தது. ஆனால், காத்திருந்த நேரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் ரூம்.1 ல் அடித்த டாய்லெட் நாற்றத்தை சகிக்க இயலாமல் நொந்து போனோம். இடையே, 13ரூ ப்ரூட்டி 20க்கும் வாங்கி சாப்பிடவேண்டியதாக போய்விட்டது.
கீழ்த்திருப்பதிலேயே வசதியான ரூம் கிடைத்தனால், தங்க பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள பாலாஜிபவனில் சாப்பாடு அருமை (இரவில் சாப்பிட்டது), காலையில் டிபனும் நன்றாக இருந்தது. விலையும் அவ்வளவு அதிகம் இல்லை. சுத்தமாகவும் சுகாதராமாகவும் இருந்தது. முதல்நாள் இரவில் மேல்திருப்பதி கோவிலின் பின்புறம் உள்ள கார்டனில் நடந்த தண்ணீர் ஷோவை அதிக நேரம் பார்க்க இயலவில்லை, மற்றும் அதிக கூட்டம் காரணமாக வெங்கிக்கே கடன் கொடுத்த வரகு சாமியை தரிசிக்க இயலவில்லை. கோவிலில் இரண்டு யாணைகள், அதில் ஒன்று இப்பவோ அப்பவோ டிக்கட் வாங்க ரெடி.. அதேசமயம், கீழ்த்திருப்பதியில் உள்ள ஆண்டாளுக்கு, 2 குட்டியானைகள் செம சூப்பர். நாங்க போனப்ப தேங்காய்க்கு பஞ்சமில்லை 40ரூபா கொடுத்தா, லக்கேஜ்களை இலவசமாக பாதுகாத்து அர்சனைக்கா 2 தேங்காய் ஒருபழம், ஊதுபத்தி, பூ கொடுக்கிறார்கள். சாதரணமாக ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கு குறையாமல் பக்தர்கள் கூட்டம் அம்முகிறது.. சமாளிக்கனுமே அப்படினு தேவஸ்தானமும் சிறப்பாகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள். இருப்பினும் கூட்டத்தினரின் ஒத்துழைப்புகுறைவால் ஒருசில குறைகள் ஏற்படுகிறது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் திருப்பதி டிரிப் செம பக்திரசத்துடன், நல்ல பொழுதுபோக்காகவும் மனமகிழ்ச்சி தந்தவையாகவும் அமைந்தது.
நீங்களும் போய் வாருங்களேன் ?…. கோவிந்தா.. கோவிந்தா..
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s