விஸ்வாமித்திர தூபம்… சே. சே. விஸ்வரூபம்

விஸ்வாமித்திர தூபம்… சே. சே. விஸ்வரூபம்
viswaroopam film review

என்னா கெட்டப்பு.. அப்பப்பா தமிழக மக்களையே தவிக்க வைத்த படம்.. 100 கோடி வசூலை எட்டிவிட்டதாக ரூமர் அடிபடுது. சாதாரணமாக வெளிவர வேண்டிய படங்களை எப்படித்தான் இப்படி மக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் கவன சிதறல்களை ஏற்படுத்தும் தடைகளை உருவாக்குகிறார்கள்.
படத்தைக் கொஞ்சம் கொத்துவோம்… வாங்க…
t0
சாதாரணமாகவே, கமலுக்கு சமூக அக்கறை மற்றும் சமூகத்தின் அவலம் அல்லது கலையம்சங்கள் ( சலங்கை ஒலி பார்த்தீங்களா.. அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்திருப்பார் ), ஏற்கனவே பல தொடர் படங்களில் நகைச்சுவை அல்லது ரொமான்ஸ் அல்லது தீவிரவாதம் என 3 டிராக்குகளில் சமீப 15 வருடமாக படங்களை எடுத்துவருகிறார்.

இந்தமுறை கொஞ்சம் திக்குமுக்காடச் செய்துவிட்ட விஸ்வரூபம் உண்மையில் எந்தவிதமாகவும் பிறருக்கு இடைஞ்சல்கள் எழாத ஒன்றாகவே படுகிறது. உண்மையில் சொல்லப்போனால் ஒரு அருதபழைய ஜேம்ஸ்பாண்ட் டைப் படத்தை போலவே, ( ரொமான்ஸ் மிஸ்ஸிங் ) உருவாக்கியிருக்கிறார் கமல். அவர் எடுத்தாளும் கதை ? உண்மையில் இதைக்காட்டிலும் கூடுதலாகவே நடைபெற்று வருகிறது என மக்கள் தியேட்டரில் பேசிக்கொள்கிறார்கள்.
t1
ஒரு சிலருக்கு இந்தபடம் பிடிக்கவில்லையென்பது, பரவலாகத் தெரிகிறது இருப்பினும் கமல் என்னும் கலைஞனின் முயற்சி அதாவது உறாலிவுட் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவந்துட்டதாகவேப் படுகிறது. படத்தில் இரண்டு கதாநாயகிகள்… இருப்பினும் அம்மாமியே பெரும்பாலும் கவர்கிறார். சேசிங் பரவாயில்லையென்றாலும், கமலுக்கு முஸ்லீம் வேடம் அவ்வளவாக பொருந்திவரவில்லையோ என தோன்றுகிறது. அவ்வளவு கொடுமையான தீவிரவாதக் கூட்டம், எளிதில் காஷ்மீரி என்று சொன்னவுடன் கமலை தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு, தனது மனைவி வரை உறவை நீட்டிப்பதும் கொஞ்சம் உதார்தனமானது… கமல் என்னும் ஒருவரே முழுபடத்தையும் தாங்கிபிடிக்க வேண்டியுள்ளது. பாம் வெடிக்க விடாமல் இருக்க, செல்ஜாமராக மைக்கிரோவேவ் ஓவனை கவிழ்த்து வைப்பது, புறா மூலம் உலகை அழிக்க புறப்படுவது. ( படத்தின் முதல் காட்சியே ஒரு புறாதான்… அது ஏன்னு பார்க்கும்பொழுது தெரியாமல் முழிபிதுங்கியது.. ) ஒற்றைக் கண்னு வில்லன் ( நிறைய பார்த்தாச்சு இதிலேயுமா.. )
இசை, படப்பிடிப்பு, எடிட்டிங்ன்னு நல்லாவே வேலை செய்திருப்பது தெரிகிறது.
t2
விஸ்வரூபம் 2 வந்தாத்தான் தெரியும், இந்தப் படத்தைபற்றி முழுமையாக.. எனவே, அதுவரை இதற்கு ரேட்டிங்க கொடுக்க கூடாது அப்பு என மக்கள் கோரஸாக நேற்றிரவு கனவில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க… ஊரை விட்டுப் போகாந்திங்க கமல் சார்ன்னு கேட்டுக்கிட்டு…. வணங்கி விடைபெறுகிறோம். நன்றி.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

10 thoughts on “விஸ்வாமித்திர தூபம்… சே. சே. விஸ்வரூபம்

  1. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் ( 24.02.2013 ) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 24.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  2. முழுக் கதையுமே அந்த டைடில் கார்ட் காடடப் படும் போதே வந்து விடுகிறதோமே….அதாவது முஸ்லிம் மக்கள் அமைதிப் புறாக்களாக வாழ்ந்து வருகிறாரகள் அப்போது ஒருவன் ஜிகாதி விதையை துவி சிலரை கெடுப்பதாகவும். அப்படி சிலரை (புறாக்களை) அமேரிக்கா அனுப்பிவைபபதாகவும் உள்ளதாக அதை கமல் சிமபாலிக்காகக் காட்டுதாகவும சொல்லப்படுகறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s