JOTHIDAM TIPS … PART 3 பரிகாரங்கள்
வடக்கு நோக்கி மண் தீபம் ஏற்றினால் கேஸ் ஜெயிக்கும்.
மாசி மாதம் 21 பாசிபருப்பு உருண்டை பண்ணி சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டு குழந்தை கையால் தானம் கொடுத்தால் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள்.
கிளிப்பச்சை பட்டுப்புடவை அம்பாளுக்கு கொடுத்தால் அலங்காரம் செய்து வழிபட்டால் கணவன்/மனைவி சண்டைகள் குறையும்.
சிவன்ராத்திரி அன்று வில்வஇலை கொண்டுபோய் சிவன் தலையில் போட வேண்டும் ( இதனால் அஷ்வமேதயாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் )
திருமணம் நடக்க, தாம்பாளத்தில் அரிசியை பரப்பி குத்துவிளக்கு ஏற்றி பூபோட்டு 9 முறை வணங்கினால் 48 நாட்கள் செய்ய வேண்டும்.
பெண்கள் மல்லாக்கப்படுத்தால் மகாலட்சுமி போய்விடும்,
விழுந்து கும்பிடும் பொழுது மார்பு தரையில் பட்டால் பாவம் ஏற்படும்.
அடுப்பு பற்ற வைக்கும்பொழுது நல்ல நினைப்பு நிகழ வேண்டும்.
ஆண்குழந்தை பிறக்க, ஆடிப்பூரம் அன்று ( கணவன் மனைவி இருவரும்) விரதம் இருந்து 5 வகை சாதம் செய்து அம்பாளை வணங்கி நெய் விளக்கு ஏற்றி வழிபடவேண்டும்.
கோவில் வழிபாடு
கும்பகோணம் நாச்சியார் கோவில் செல்லும் வழியில் 10வது கிலோமீட்டரில் திருவாஞ்சியம் என்னும் கோவில் குப்தகங்கை எனப்படுகிறது இங்கே சனி, எமதர்மன், ராகு/கேது ஒன்றாக அமைந்திருக்கிறார்கள், மேலும் யோக பைரவர், அம்பாள், மகாலஷ்மி, சரஸ்வதி என வரிசைக்கிரமமாக தரிசித்து குடும்பம் சகிதமாக ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளை கும்பலாக தீர்த்துக் கொள்ளலாம்.