ஜோதிட டிப்ஸ்

SILA மாதங்களுக்கு முன் பொழுது போகாம ரிமோட்டை அழுத்தி சேனல்களை பாஸ் செய்யும் பொழுது ஒரு ஜோதிடர் கூறும் சிலவற்றை பார்க்க நேர்ந்தது. இதெல்லாம் உங்களுக்கும் சரிப்படுமா என டெஸ்ட் செய்து கொள்ளுங்க… பீஸ்லாம் தரவேணாம் ஏன்னா, இதுவே டிவியடிச்சான் காப்பிதான்… ஓகே…என்ஜாய்.
t1
• 16 / 25 / 7 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு தெய்வீகத்தன்மை அதிகமாக ஒளிந்திருக்குமாம், அவற்றை முறையாக வெளிக்கொணர்ந்தால் வாழ்வில் வெற்றியாம், மேலும் வைடூரிய மோதிரம் அணிந்து கொள்ளவேண்டும்.
• ஒருவர் ஜாதகத்தில் 4ல் சுக்கிரன் இருந்தால் யோகம்
• 2ல் குரு அல்லது 7ல் குரு இருப்பின் அவரால் எந்த தொழிலையும் முழுமையாக செய்ய இயலாது
• 4 கிரகங்கள் சேர்ந்து ஒரே கட்டத்தில் இருந்தால் சிக்கல்தான், ஆனால் பரிகாரம் செய்துவிட்டால் அவருக்கு விபரீத ராஜயோகம் அடிக்கும்.
t2
• 12ல் சுக்கிரன் இருந்தால் அவர்நிச்சயம் கோடீஸ்வரன்.
• 7 ½ பிடிக்கும்பொழுதும் அல்லது விடும்பொழுதும் திருநள்ளாருக்கு செல்லாம், இடையில் சென்றால் சிக்கல்தான்.
• 10ல் குரு இருந்தால் பதவித்தேடிவரும், இருப்பினும் குரு பரிகாரம் செய்யவேண்டும்.
• ஏகாதசி அன்று பட்டினி கிடக்கவும் (வெறும் தண்ணீர் மட்டும்தான் குடிக்கவும்), துவாதசி அன்று வயிறு முட்ட இயற்கை ஆகாரங்களை சாப்பிட்டுவந்தால் அனைத்து செல்வங்களுடன் புகழும் வரும்.
• ஆடி மாதம் ஒவ்வொரு (குறைந்தது 5) வெள்ளிக்கிழமையும், மாவிளக்கு சிறிய சிறிய விளக்குகளாக 9 தயார்செய்து முக்கோண வடிவில் சாமியிடம் மாலைவைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
• தீராத வியாதி உள்ளவர்கள் ஒத்தைபடை எண்ணிக்கையில் ஆல இழை எடுத்து பூஜை செய்து படுக்கையில் வைத்து அடுத்தநாள் எடுத்து ஆற்றில்விடவும்… (வியாதி போகுதே…)
• கண்ணாடி அல்லது பச்சைபட்டு வஸ்திரம் பெருமாள் பூமாதேவி, சீதாதேவி கோவிலில் அர்ச்சனை செய்து கண்ணாடி மூலம் சாமியை பார்த்து பீரோவில் வைத்தால் திருட்டுப்பயம் இருக்காது / செல்வம் பெருகும்.
• மஞ்சள் அரிசி அல்லது மல்லிகைப்பூ கொண்டு அர்ச்சனை செய்தால் வேண்டுதல் நிறைவேறும்
t3
• அடிக்கடி விபத்து ஏற்படுபவர்கள், அரிசி / கோதுமை / ராகி / கம்பு போன்ற தானியங்களை ஏழை எளியவர்களுக்கு மனம் நிறையும் வகையில் தானம் அளித்தால் விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
• ஆயுள்பயம் உள்ளவர்கள் உப்பில்லாத தயிர்சாதம் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து மற்றவர்களுக்கு கொடுக்கவும்
• பிரச்சினை அதிகம் உள்ளவர்கள் கொடுமுடியில் உள்ள லஷ்மி நரசிம்மரைத் தரிசிக்கவும்.
[ part ..2 continues ]

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

Advertisements

10 thoughts on “ஜோதிட டிப்ஸ்

 1. என்ன ஒரு அபத்தம்.. இந்த கிரகம் இந்தக் கட்டத்தில் இருந்தால் இன்ன பலன் என்று கூறுவதே முதலில் அபத்தம்.

  ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கிறதென்றால் அது அந்த கிரகத்தின் நட்பு வீடா, பகை வீடா, உச்ச வீடா, நீச வீடா, ஆட்சி வீடா, சம சப்தம வீடா, கோணமா, கேந்திரமா, மறைவு ஸ்தானமா என்று பல விஷயங்களைப் பார்த்துத் தான் அந்த கிரகத்தின் வலிமையைக் கணிக்க முடியும். அதுவும் நவாம்சத்தில் அந்த கிரகம் என்ன வலிமை பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறும். மேலும் அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் உள்ளது, அந்த நட்சத்திரத்தின் அதிபதி யார், அவன் சுபனா, அசுபனா என்பதைப் பொறுத்தும் பலன்கள் மாறுபடும்.

  //12ல் சுக்கிரன் இருந்தால் அவர்நிச்சயம் கோடீஸ்வரன்.
  ஒருவர் ஜாதகத்தில் 4ல் சுக்கிரன் இருந்தால் யோகம்
  • 2ல் குரு அல்லது 7ல் குரு இருப்பின் அவரால் எந்த தொழிலையும் முழுமையாக செய்ய இயலாது//

  இதை, அதுவும் பலபேர் பார்க்கக் கூடிய டிவியில் சொன்ன ஜோதிடர் உண்மையிலேயே மிகப் பெரிய “ஞாநி”யாக இருக்க வேண்டும். அடேங்கப்பா… என்ன ஒரு ஞானம், தீர்க்க தரிசனம்… எனக்கு வைக்கோல் அரிக்குது.

  அதுவும் பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகி விடுமாம். அப்படியானால் நாட்டில் கோயில் கோயிலாக ஏறி பரிகாரம் செய்பவர்களுக்கு எல்லா பிரச்சனைகளும் நீங்கி இருக்க வேண்டுமே, ஏன் தொடர்கின்றன?

  பரிகாரம் என்பது எல்லோருக்கும் பலன் தராது என்பதையே பலர் அறிவதில்லை. பாவம்.

  டுபாக்கூர் ஜோதிடன், குருக்கள், ஃபராடு புரோகிதன், அர்ச்சனைத் தட்டு, டால்டா தீபம் விற்பவர்கள் பிழைப்பதற்கு வழி இதெல்லாம்.

  மக்களே, ஜோதிடம் உண்மை. ஆனால் ஜோதிடம் சொல்பவர்களில் பலர் பொய்யர்கள். பணம் பிடுங்கிகள். ஏமாற்றுக்காரர்கள்.

  ஜாக்கிரதையாக இருங்கள்.

  தெய்வத்தையும், ஜீவ சமாதி ஆன சித்தர்களையும், மகான்களையும், யோகிகளையும் மட்டுமே நம்புங்கள்.

  பணத்தாசை கொண்ட, பரிகாரம், ஹோமம் செய்தால் எல்லாம் சரியாகி விடும், கடன் அடையும், பணக்காரர்கள் ஆகி விடுவீர்கள் என்று சொல்லும் ஜோதிடர்களையும், தன்னை வழிபடச் சொல்லும் ஹைடெக்- போலி மூச்சுப் பயிற்சி சாமியார்களையும் நம்பி ஏமாறாதீர்கள்.

  நன்றி

  அன்புடன்
  ரமணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s