உதயம் என்எச் 4 … திரை விமர்சனம்
ஆடுகளம் வெற்றிமாறன் தயாரிப்பில் இந்த உதயம் என்எச்4 உருவாகியுள்ளது. கதைக்களம் முழுமையும் கர்நாடகாவிலும், தமிழக எல்லையும் சித்தரிக்கப்படுகிறது. வழக்கமான பொறியியல் காலேஜ் காதலில் விழும் மந்திரியின் மகள், சித்தார்த்தின் இயல்பான நடிப்பும், அவரது செயல்களும் மந்திரியின் மகளை காதலில் விழவைக்கிறது. (உதாரணமாக பெங்களுர் பப்பேயில் இந்து முன்னனியர் புகுந்து அனைவரையும் அடித்து வெறியேற்றும்பொழுது ஒரு மாணவியை அடியில் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அட்மிட் செய்ய முயல, அது தவறாக மந்திரியின் மகள் என மீடியா பரப்ப, டென்ஷனான மந்திரி மீடியாவை அடிக்க பிரச்சினை வலுக்கிறது, இதுவே காதல் வலுக்கவும் காரணமாகிறது).
ஒரு கட்டத்தில் மந்திரி பலத்த பாதுகாப்புடன் காலேஜ்க்கு மகளை அனுப்ப, சித்தார்த்தும் அவரது நண்பர்களும் இணைந்து கடைசி நாளன்று எஸ்கேப் ஆகிறார்கள். இடையில், ஒரு வலுத்த போலீஸ் ஆபிஸரிடம் மகளை கண்டுபிடிக்க அசைன்மெண்ட் ஒப்படைக்கப் படுகிறது. சித்தார்த்துடன், மந்திரி மகளும் கண்ணாபின்னா பிளான் செய்தும், போலிஸ் துரத்தி துரத்தி வந்துவிடுகிறது. பைக், கார், ரயில், பேருந்து, ஆட்டோ என பலவகையில் மாறி மாறி பயணித்தும், சிம்கார்டு, போன் என அனைத்தையும் மாற்றினாலும், சைபர்கிரைம் உதவியுடன் இவர்கள் எங்கிருக்கிறார்கள் என உடனடியாக கண்டுபிடிக்கும் போலீஸ் துரத்துகிறது. ஒருகட்டத்தில் ரவுடி கும்பலுடன் போலீஸில் பிடிபட்டாலும், பிறகு சித்தார்த்தின் திறமையான செயல்பாட்டால் விடுவிக்கப்படுகிறார். பிறகு நண்பரை பணயம் வைத்து பிடிக்க போலிஸிடம் சரணடைந்தாலும், கடைசியில் அனைவரையும் வென்றும் போலீஸ் அதிகாரியின் மனதை மாற்றி இருவரும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். (இடையில் ஒரே நாள் தான் இந்த சம்பவம் காரணம், அன்றுடன் அந்த பெண் மேஜர் ஆவதால் இரவு 12.00க்குள் பிடித்துவிடவேண்டும் என வெறியுடன் துரத்துகிறார்கள்)
அருமையான கதைச்சம்பவங்கள் ஆனாலும் பல இடங்களில் தொய்வடைந்து விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது.
எனினும் இளவட்டங்களை இந்தப்படம் கண்டிப்பாக கவரும், வசனம் வெற்றிமாறனாம் அப்படி ஒன்றும் பளிச்சென வெளியில் தெரியும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மணிரத்ணம் படம் மாதிரி ஷார்ட் வசனங்களே படத்தில் இடம்பெற்றிருக்கு. விறுவிறுப்பை தவறவிட்ட என்எச்4 யை பார்த்துவிடலாம்.