ஜோசிய பரிகாரங்கள்

ஜோசிய பரிகாரங்கள் ….
jothidam pariharam …

• சூரியன் வணங்கி வழிபட்ட சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் நீங்கும்.
• திருவையாறு கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. திங்களுர். இத்தல சந்திரபகவானை வணங்க சந்திரகிரக தோஷங்கள் விலகும்.
• மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானை வழிபட தோஷங்கள் நீங்கி குதுகல வாழ்வு கிட்டும்.
• கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு தோஷங்கள் நிங்கி விடும்.
t1
• 64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பொருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகும்.
• சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட பில்லி, சூன்யங்கள் தவிடுபொடியாகும்.
• ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்க சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.
• காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்த சுவாமியை வேண்ட, கேது கிரக தோஷங்கள் மறையும்.
• திருவாரூருக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளும் சனிபகவானை வணங்க, சனி தோஷங்கள் மறைந்தோடும்.
• சென்னை அரக்கோணத்திற்கு அருகே பள்ளூரில் அருளும் வாராறுயை வணங்க செவ்வாய் தோஷங்கள் தொலைந்தோடும்.
• சென்னை..கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்தவல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகாயற்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சம் கனிகள் வைத்து வணங்க, திருமண தோஷங்கள் நீங்குகின்றன.
t1
• கும்பகோணத்திலிருந்து 7 கி.மி. தொலைவில் உள்ள ஜயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்து கொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.
• சென்னை/தாம்பரம் அருகே படப்பை காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஉறி, நிதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து 9 வாரங்கள் இவர்களை தரிசிக்க சகல தோஷங்களும் நீங்குகின்றன.
• கும்பகோணத்திலிருந்து 20 கி.மி. தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும் மல்லைவனநாதரும் கர்ப்பத்தடை தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.
• சென்னை, ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்க தரித்திர தோஷம் நீங்கும்.
• திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற தோஷங்கள் தொலைகின்றன.
t2
• ராமநாதபுரம், தேவிபட்டணத்திலி ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல் நடவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் தகர்த்தெறிவார்கள்.
• காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும் திருவள்ளுர் வைத்ய வீரராகவப் பெருமாளையும் தரிசிக்க மறைந்த பித்ரு தோஷங்கள் தொலையும்.
• ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மூம்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.
• திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

நன்றி. ந. பரணிகுமார் @ ஆன்மீகமலர், தினகரன்
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s