சென்னையில் ஒரு நாள் ….

சென்னையில் ஒரு நாள் ….
chennayil oru nall – tamil film review

படத்தைபற்றி சுத்தமாக எதுவும் கேள்விபடாத நிலையில் சென்றிருந்தேன், இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ ஒரே என்ன அலை. கொஞ்ச நேரத்திலேயே ஓ இதுவா அது…ன்னு ஸ்ட்ரைக் ஆச்சு. ரொம்ப நேரத்துக்கு அழுவாச்சிதான் போங்க…வராமல் கூட இருந்து இருக்கலாம்ன்னு தோனுச்சு…
t0
உறிதேந்திரான்னு ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு அவருடைய இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்த சென்னையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மிக விரைவாக செல்ல அப்போதைய பணியில் இருந்த ஒரு உதவி கமிஷனர் உதவியதையும், வெற்றிகரமாக இந்தப்பணி முடிக்கப்பட்டு மற்றொருவருக்கு இதயம் பொருத்தப்பட்டதை கேரளாவில் டிராபிக்ன்னு படம் எடுத்து வெற்றிபெற்றதைப் பார்த்து நம்மாளுங்க தமிழ்லேயும் ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

சேரன் தன் தங்கைக்காக லஞ்சம்வாங்கி மாட்டிக்கொள்ளும் டிராபிக் கான்ஸ்டபிள், அவருடைய மகளாளும் புறக்கணிக்கப் படுகிறார். இதுபோல பல கிளைக்கதைகளை ஒருங்கிணைத்தும், அவ்வப்பொழுது காலை 8 மணி 8.10, 8.20ன்னு வெவ்வேறு கதைகளை காட்டுகிறார்கள் ஒருசில கதைகள் நமக்கு ஒட்டவே மாட்டேங்குது.
t1
ஆனா, தனது நண்பனுடன் முதல் நாள் டிவியில் நேரடி பேட்டி எடுக்க செல்லும் நபர்தான் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்படுகிறது. ( ஆக்ஸிடெண்ட் படமாக்கிய விதம் சூப்பர் ). வேலூரில் உள்ள மருத்துவமணையில் சாகக்கிடக்கும் சூப்பர் ஸ்டார் ( பிராகாஷ்ராஜ்/ராதிகா தம்பதி ) மகளுக்கு உடனடியாக மாற்று இருதயம் பொருத்த வேண்டும். மழை பெய்வதால் றெலிகாப்டரில் செல்ல முடியாததால். (சென்னையில் மழை இல்லை) உடனடியாக சென்னையில் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயத்தை வேலூரில் உள்ள மருத்துவமணைக்கு 1.30 மணி நேரத்தில் கொண்டு செல்லவேண்டும். இடையில் மூளைச்சாவு அடைந்தவரின் பெற்றோர் சம்மதம் கிடைக்க தாமதம், இந்த திட்டத்தை செயல்படுத்த கமிஷனர் ( சென்னைக்கு மட்டுந்தானே, வேலூர்க்கும் இவரே உத்தரவிடுகிறார் ) சரத்குமார் தலைமையில் ஒரு டீம், வண்டியை விரைவாக ஓட்ட டிரைவராக சேரன், கூட செல்ல இறந்தவரின் நண்பர், டாக்டராக சினேகாவின் கணவர் (பிரசன்னா) கிளம்ப மீடியா இதை றைலைட்டாக, பொதுமக்கள் டிராபிக்கை நிறுத்தியதால் கும்பல் போட்டும், ஒரே குழப்ப மயம்.
t2
ஒருவழியாக இருதயம் எடுக்க பெற்றோர் ஒப்புக்கொண்டு, அனைத்துத்திட்டமும் தயார் செய்து வண்டியும் கிளம்பி விடுகிறது. நமக்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஆனால், சேரனுக்கு பதற்றமே இல்லாமல் வண்டியை ஓட்டுகிறார்.
ஒரு கட்டத்தில் சேரனுடைய வண்டி எந்த தொடர்பு இல்லாமலும், ஏற்கனவே முடிவு செய்ய வழியில் வராமல் போகவே, கமிஷனர் பொருத்து பார்த்து மிஷன் பெய்ல், எல்லாரும் வீட்டுக்கு போகலாங்கிறார்.

அதற்கப்புறம் ஒருத்தர் யோசனை சொல்ல, வண்டி காணாமல் போன இடத்தில் இருந்து 2 எஸ்எம்எஸ்களை டிரேஸ் செய்து பிரசன்னா ஏற்கனவே ஒரு கொலை முயற்சி செய்துவிட்டு தப்பிக்கிறார்ன்னு தெரியவருது. இடையே, வண்டியை பிளாக் செய்து சேரனை மிரட்டுகிறார். குழப்பம் தெரிந்து ராதிகா போனில் கெஞ்ச, பிரசன்னா இறங்கி வந்து வண்டியை கிளப்ப, வேலூர் செல்ல குறுக்குவழியில் ஏற்கனவே பிளான் செய்த நிமிடங்களை விட 8 நிமிடம் அட்வான்ஸ் ஆக ?
பிறகு கமிஷனர் ஒரு செம ஐடியா கொடுக்கிறார். பைபாஸ் வழியாக சென்றால் 10 நிமிடம் தாமதம் ஆகுமாம் இடையே உள்ள ஒரு குறுகிய பாதை உள்ள ஊர் வழியே சென்றால் 10 நிமிடத்தை மிச்சம் செய்யலாமாம், அதற்காக பிரகாஷ்ராஜ் ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் மீடியாவில் கோரிக்கை விட குறுகிய தெருக்களில் உள்ள தடைகள் எல்லாம் நிமிடத்தில் ரசிகர்களால் அகற்றப்படுகிறது. இருதயம் வேலூர் சென்றடைய சூரியா, மூளைச்சாவு ஏற்பட்டால் உடல் உறுப்புகளை அனைவரும் தானம் செய்யுங்களேன் அட்வைஸ் கொடுக்க, நமக்கு ஒரு மாதிரியாக தலை சுற்ற தியேட்டரை விட்டு வெளியேறினோம்.

ஒரு சில நடிகர்கள், சீரியஸ்னெஸ் தெரியமால் மெதுவாக நடித்திருப்பது நமக்கு எரிச்சலாகிறது.. மற்றபடி, நல்ல முயற்சி, டீம் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s