நேரம் … திரைவிமர்சனம்
Neeram .. Time .. Tamil Film Review
அப்பப்பா நேரமே இல்லை.. நான் ரொம்ப பிசின்னு பீலா விட்டுக்கிட்டே கிடைச்ச நேரத்தில் நேரம் படம் பார்க்க கிளம்பிட்டோம். நாங்க கிளம்பின நேரம் பார்த்து, கேஸ் வருது, நாளைக்கு வாப்பான்னு சொல்ல முடியுமா, அத டெலிவரி எடுத்துட்டு, நகர்ந்தா தண்ணீ கேன்.. இதுவும் ரொம்ப முக்கியம்லா.. சரி போனா போவுது கிளம்புவோம்ன்னு கிளம்பினா, ஈபி காரன் ரீடிங் எடுக்க வந்துட்டான், ஒரு வழியா அதை முடிச்சுட்டு திரும்பினா போன கரண்டு எக்குத்தப்பா வந்துடுச்சா அப்படியே வந்த கரண்ட உட மனசு இல்லாமல், மோட்டார் போட்டு தண்ணீ ஏத்தி, வாசிங்மிஷின் ஓட உட்டு வேலைய முடிச்சாக்கா, அலுப்போ அலுப்பு, நேரமோ கடந்துடுச்சு சரின்னு மக்காநாளு சாயங்கலாம் போனாம்.
நம்ம நேரம் படத்துல ஒரே கதாநாயகன் கேரள இறக்குமதியாம், சின்ன பையான இருக்காம்ல, அவனுக்கு காலையில் 9 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் நடக்கிற சம்பவம் தான் படம். பீட்சா, ந.கொ.ப.கா, தீதும் நன்றே வரிசையில் மற்றுமொரு ஸ்பீடு போஸ்ட் காமெடி படம். நம்மாளுக்கு காலையில் எழுந்தவுடன் இருந்து கெட்ட நேரம் ஆரம்பிக்கிறது, கடன்காரர் (கொடூரமானவர் .. பணம் தரலைன்னா மனைவி/மக்களை மட்டும்மல்லாமல் ஆபிஸீசிள் புகுந்து டீம் லீடரரைக் கூட கடத்தி விடுபவர்) கொடுத்த பணத்தை 5மணிக்குள் திரும்ப செலுத்த கெடுவிடுவிக்க, காதலி வீட்டைவிட்டு ஒடி வந்து காத்திருக்கும்போது செயின் அறுத்துவிட்டு ஒருவன் ஓட, நண்பரிடம் பணம் பெற்று வரும்வழியில் பணத்தை அடித்துவிட்டு ஒருத்தன் ஓட, கையில் காசு இல்லாதப்ப ஊரில் இருந்து மச்சான்காரன் வந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டுட்டு பில்லை தலையில் கட்ட, காதலியை சந்திக்க காலதாமதம் ஆனதால், யாரோ வட்டிராஜா கடத்திக் கொண்டு போக, காதலியோட அப்பா போலீஸ்க்கு போய் போலீஸ்உடன் தேட, பல பிரச்சினை வரிசைக் கட்டிக் கொண்டு வருகிறது, ஆனால், அனைத்தையும் ஒரே புள்ளியில் படிப்படியான சம்பவங்கள் நடைபெற்று மாலை 5 மணிக்குள் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நல்ல வேலையும் கிடைத்து காதலியுடன் செட்டிலாவதே நேரம் படத்தின் கதை.
இடைவெளியில்லாமல் துரத்தி துரத்தி நிகழ்ச்சிகள் வந்து கொண்டே இருப்பதும், அனைத்தும் சிறிதளவாவது காமெடியாக இருப்பதும் பிரம்மாதமான படைப்புதான்…
சென்னையின் தெருக்களையும், சேரிகளையும் கேமரா துரத்துவதும், ஆட்டோவோ வில்லனாகவும், கதாநாயகனாகவும் ஒரிரு காட்சிகளில் தோன்றி பிரச்சினைகளை தீர்ப்பதும், நல்லா டைம் பாஸ் பண்ண தோதான படம். தீதும் நன்றேவில் நயன்தாராவிற்கு கோவில் கட்டுபவரே இங்கே வட்டிராஜாவாகவும், கடைசியில் வில்லன் செத்தவுடன் நாசர் தானே போட்டுத்தள்ளியதாகவும் பரப்பிவிட சொல்வதும் செம காமெடி. புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.