Theeya velai seyyanum kumaru .. tamil film review
தீயா வேலை செய்யனும் குமாரு …. திரை விமர்சனம்
காதலில் சொதப்புவது எப்படி படம் வந்தபொழுது தோன்றியது இனிமேல் கொஞ்சநாளைக்கு இந்த மாதிரி பார்முலா படங்களே தமிழ் சினிமாவில் கொடிகட்ட போகிறது. அதேபோல், யோசித்து தீயா வேலை செய்யனும் ( காதலியை உஷார் (எச்சரிக்கை அல்ல) படுத்த குமார் என்பவர் முயற்சித்து வெற்றி பெறுபதே முழுப்படம்.
படம் முழுக்க சித்தார்த்/சந்தானம்
கூட்டணி காமெடி கலக்கல்தான். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அப்பாவி சித்தார்த் (குமார்), கம்பெனியில் டீ கப் உடைத்ததற்கே எல்லாருக்கும் டீரிட் கொடுக்கும் அப்பாவி, ஆனால், அவரது குடும்பமே காதலித்து கல்யாணம் செய்யும் பரம்பரை.. இவரையும் காதலிக்க துரத்துகிறது.. ஆனால், சிறுவயதில் ஏற்பட்ட சிறிய ஊடல் (பெண்களுடன்) பெண்களையே வெறுக்கிறார்.
சிறிது காலத்தில், ஐடி கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு வரும் உறன்சிகா வை 100க்கும் மேற்பட்டவர்கள் கவுக்க டிரை செய்ய திடீர் என சித்தார்த் நாம கவுத்தா என்ன என்று முயற்சிக்கிறார். ஆனால், உறாண்ட்செம் பெலோ ஒருத்தர் பிராக்கட் போட்டு உறன்சிகாவுடன் சுத்த ஆரம்பிக்க, நண்பர்கள் உதவியுடன் சந்தானத்தின் உதவிக்கு செல்கிறார். சந்தானமோ காதலுக்கு பில் போட்டு கார்டு தேய்த்து பணம் பெற்றுக் கொண்டு விதவிதமான ஐடியாக்களை வழங்கி, உறாண்ட்செம் பெலோவை உறன்சிகா வெறுக்குமாறு செய்து கவனம் குமார் பக்கம் திரும்ப வைக்கிறார்.
காலப்போக்கில், குமார் சந்தானத்தின் தங்கையைதான் உஷார் படுத்துகிறார் என தெரியவர, சந்தானம் காதலுக்கு எதிரியாகிறார்… இருப்பினும் குமாரின் நல்ல குணத்தால், அனைவராவலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். கடைசியில் ஆஸ்திரேலியா செல்ல போகும் உறன்சிகா, குமார் அடிக்கும் ஸ்டண்ட் மூலம் சித்தார்த் உடன் செட்டிலாகிறார். படம் முழுக்க காமெடிதான், இசையும், லொக்கேஷன்களும் அருமையாக வந்துள்ளது. பொழுதுபோக்கிற்கு உதவும் தீ.வே.செ.கு டீமுக்கு வாழ்த்துக்கள்.