கலர்புல் தில்லு முல்லு … திரைவிமர்சனம்

கலர்புல் தில்லு முல்லு … திரைவிமர்சனம்
Dillu Mullu – Tamil Film Review
1981ல் வந்த தில்லுமுல்லு ஒரு ரஜினியின் எழுச்சிக்கு வித்திட்டது, 2013ல் சிவா என்னும் அகில உலக சூப்பர் ஸ்டாராம் சிவாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளது. சப்பை மூஞ்சியை வைத்துக்கொண்டே, திரையில் கலக்க முடியும் என மீண்டும் நிறுபித்திருக்கிறார்.
x0
படம் ஆரம்பத்தில் இருந்தே பார்க்க வேண்டும், டைட்டிலே கலக்கிவிடுகிறார்கள். யுவன் சங்கர்ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி பேக்கிரவுண்டில் தில்லுமுல்லு பாடல் வேறே, ஒரிஜினல் கதையை வைத்து அப்படியே ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து காட்சிக்கு காட்சி வித்தியாசமாக ஆனால் அதே படத்தை உல்டா செய்து மிகத்திறமையாக வெளியிடப்பட்டிருக்கிறது. டீமுக்கு கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போற்றே ஆகவேண்டும்.
x1
அடிக்கடி டிவியில் தில்லுமுல்லு, ஜானி படங்கள் எப்போ வந்தாலும் அதை முழுக்க ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்,
இந்த புதியபடத்தில் குறிப்பிட்டு சொல்லாமல் கோவை சரளா, புரேட்டா சூரி, சந்தானம், மனோ, பிரகாஷ் ராஜ் (தேங்காய் சீனிவாசனின் நடிப்பை மிஞ்சவில்லை என்பது ஒரு சிறிய வருத்தம்) என ஒரு பட்டாளமே போட்டி போட்டு நன்றாக நடித்திருக்கிறார்கள்.
x2
கதாநாயகி புதிது, சிவாவுடன் துபாயில் ஒரு டூயட் மற்றபடி மாடர்ன் கேர்ள் பாத்திரத்திரத்திற்கு மிகவும் பொருந்தி வருகிறார். பேங்க் மானேஜராக வருபவர் செய்யும் சேட்டை மிகவும் ரசிக்க தகுந்தது, குறிப்பிட்டு சொல்லனும்னா, 5 கோடி மதிப்புள்ள கேஸ் ஜெயித்துவிடும் என நம்பி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கார்களையும் அணிவகுத்து கோர்ட்டுக் வரவழைத்து, பின்னர் பஸ்ஸில் வீடு திரும்புவது செம அலப்பறை.
இசை, ஒளிப்பதிவு நன்றாக வந்திருக்கிறது. பழையபடத்தில றைலைட்டான கடைசியில் நான் முருகன் இல்லை, பிள்ளையார் என போட்டோவில் உள்ள கடவுள் பேசுவது தான் மிஸ்ஸிங்… கிளைமாக்ஸ் கலாட்டா பிரமாதம். அழகாக சிரித்துவிட்டு வரலாம்.. மிஸ் பண்ணக்கூடாத படம்…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s