ஏனுங்க இப்படி …. ஏன்….?
Why the people like..this ?
ஒரு சிலரால் நாம் இந்த சமூகத்தில் படும் துன்பம் இருக்கிறதே… அப்பப்பா சொல்லி மாளாது…
அனுபவம் 1.
சமீபத்தில் பேங்க்ஆப் பரோடா, திருச்சி மெயின் கிளையில் பணம் செலுத்தும்போது அந்த கவுண்டரில் இருந்த கேஷியர், திருப்பி திருப்பி பணத்தை என்னுவதும், டெனாமினேஷன் போடலைன்னு கத்து கத்து கத்துறதும், என்ன குற்றம் கண்டுபிடித்து இவர்களை விரட்டலாம்ன்னு கண்ல விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டே இருக்கிறார்…
எனக்கு பின்னால் வந்த ஒருவரிடம் 100 ரூபாயெல்லாம் வாங்க முடியாது… போ என்னால், கவுண்ட் செய்ய முடியாதாம் ( 50000 மேல் பணம் செலுத்த வந்தவர் திகைத்து ஏங்க 500 ரூபாயா வாங்கி எண்ணி வைக்கீறிங்க 100 ரூபாயா வாங்க முடியாதா உங்க பெயர் என்ன? DGM வரைக்கும் புகார் சொல்வேன் என எகிற அப்புறந்தான் அவர் அடங்கினாரு. ஏங்க… இப்படி..
அனுபவம் 2.
வழக்கமாக செயின் அணிந்து கொள்ளும் பழக்கமுண்டு.. பல தடவைகள் பேருந்தில் செல்லும்போது தூங்கிவிடுவேன், ஒரு சில நேரங்களில் கழுத்தில் ஏதோ ஊருகிறது போன்று தோன்றி முழித்து பார்த்தால், நம்ம மாட்டீர்கள்… சில நேரங்களில் கல்லூரி மாணவர்கள் செயின் அறுக்க முயற்சிப்பதும், சில நேரங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களில் ஒரு சிலர் முயற்சிப்பதும் என இதுவரை 5 முறை முயற்சி நடந்திருக்கிறது.. நீங்க ஜாக்கிரதையா…
அனுபவம் 3
திருச்சியில் மாவடிக்குளம்ன்னு ஒன்னு இருக்கு அதை தூர்
வார்கிறோம் வாங்கன்னு பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்தார்கள்… ஒரு சிலர் அதற்காக ஞாயிறு காலை 7 மணிக்கு சென்று (சுமார் 30/40 பேர்) செடி கொடிகளை அறுத்து ஆரம்பித்து வைத்தார்கள்… இடையே விஷயம் கசிந்து புதிய தலைமுறை போன்ற டிவிக்கள் இதை ஊதிவிட மீடியா வெளிச்சத்தை விரும்பும் பலரும் படையெடுக்க, கடைசியில் மாவட்ட நிர்வாகமே முன்வந்து இந்த பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பார்ப்போம்.. பணிகள் எவ்வளவு முடிவடைகிறதுன்னு…
faccebook / I Love Trichy
அனுபவம் 4
முன்னெல்லாம் ஆடி வந்தால், காசே யாருகிட்டேயும் இருக்காது, ஆனா இப்போ ஆடி எப்போ வரும், தள்ளுபடி எப்போ வரும்ன்னு ஒரே கூட்டம் தான், சொன்னமாதிரி துணிக்கடையிலேயும், நகைக்கடையிலேயும் கூட்டம் அம்முகிறது. பார்க்கிங் செய்ய கொஞ்சம் இடம் கிடைக்கவே 1 மணிநேரத்திற்கு மேல் செலவிட வேண்டியது இருக்கிறது. ரோடெல்லாம் ஒரே டிராபிக் தான்…
அனுபவம் 5
வீடு இருக்கும் தெருவில், ஒரு முன்னால் ஆட்சியிலிருந்த கட்சியை சேர்ந்தவர் கார்ப்பரேஷனை மிரட்டி, ஈபியை மிரட்டி காலியாக இருந்த மலைக்கோட்டைக்கு சொந்தமான பல கோடிமதிப்பிலான இடத்தை வேலிபோட்டு பிடித்து வைத்துகொள்வதுடன் டஜன் கணக்கில் மாடுகளை வளர்த்து தெருவில் மேய விட்டும், 2 வீலர் 4 வீலர்களை தெருவை அடைத்து நிறுத்திக்கொண்டும் அடாவடி செய்து வருகிறார். அரசுதுறை அலுவலர்களும் அராஜகத்தை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை…
அனுபவம் 6
இப்பொழுதெல்லாம், 4 வீலர்களை சாதரணமாக வாங்கி கொள்ளும் மக்கள் அதை நிறுத்த இடம் இல்லாமல் வீட்டு வாசல் அல்லது தெருவில் நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள்… அதனால் முன்னமாதிரி பீரியாக டூவீலரில் கூட போக முடியலடா சாமி….
அனுபவம் 7
தெருவில் 2 வருடம் முன்னால் ஒரு பெரியமனிதர் வீடு கட்டினார், அவருக்காக பைப்லைன் கொடுக்க வேண்டி தெருவை வெட்டி ஒரே கல்லுமண்ணாக ஆக்கிவிட்டனர்.. இன்று வரை அதனை சரிபண்ணவில்லை.. பலமுறை புகார் அளித்தும், தெருவிளக்கு எரியாதது போலவே தெருவும் குண்டும் குழியுமாக இருக்கிறது… என்ன செய்ய நாம இருப்பது இந்தியாவில்…