சிங்கம்..2 (சீறிக்கிட்டே இருக்கும்) .. திரை விமர்சனம்

சிங்கம் ஒன்னு முடியும்போது வரும் காட்சிகளை மீண்டும் ஓடவிட்டு தொடங்குகிறது படம். இதில் புதிதாக 3 வில்லன்கள், சகாயம் (லோக்கல் ), பாய் ( லோக்கல் ), டேனி ( தென் ஆப்பிரிக்கா ). ஆயுதக்கடத்தலை கண்டுபிடிக்க அரசால் ரகசியமாக தூத்துக்குடிக்குவரும் சூர்யா (மேக்கப் கொஞ்சம் டிப்பர் சி1 க்கும் சி2க்கும் ) ஸ்மார்ட்டான என்சிசி மாஸ்டராக பள்ளியில் பணிபுரிந்து கொண்டே உளவு பார்த்து வருகிறார். பள்ளி மாணவியாக வரும் உறன்சிகாவின் பருவக்கோளாறால் வரும் காதலில் சிக்கி விடாமல் தனது பணிக்களுக்கும் அவரை பயன்படுத்திக்கொண்டு அதன் விளைவால் கடைசியில் கொல்லப்படுகிறார். இருப்பினும் படத்தில் அனுஷ்காவைவிட தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் உறன்சிகா…
t1
முன்னால் காதலி காவ்யா (அனுஷ்கா) பம்மி பம்மி நூல் விட்டாலும், பட்டம் கடைசியில் நிச்சயத்தார்த்தம் முடிந்து கல்யாணம் வரைக்கும் போய் கிளைமாக்ஸ்ஸில் அம்போ.
வில்லன்கள் மூவரில் சகாயம், ஒரே மாதிரி வசனம் பேசுவதும், பாய் எதற்கெடுத்தாலும் சீறுவதும், ரகுமான் அமைதியாக கார்ப்பரேட் ஆசாமியாக இருந்து டிரக்ஸ் கடத்துவதும் இவர்கள் அனைவரும் ஒரே நெட்வொர்க்காக பணிபுரிவதும், இடையே ஒரு ஜாதிக்கலவரம் ( பெண்ணை இவர்களே கடத்திக்கொண்டுபோய் வைத்துவிட்டு ) தூண்டிவிடுவதும், மொத்த போலிஸ் வில்லன்களுக்கு உதவி செய்வதைக் கண்டு மனம் வெம்பிய சூர்யா, உள்துறை அமைச்சர் விஜயகுமார் மூலமாக ஆப்பரேஷன் டி ( டேனியை கைதுசெய்தல் ) ஆரம்பிக்க ரணகளம் ஆரம்பிக்கிறது நமக்குத்தான். கேமரா சடார் சடார்ன்னு அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி தூத்துக்குடி, சென்னை, கடல், கப்பல், படகு, கேரளா, டர்பன் ( தென்னாப்பிரிக்கா)ன்னு மின்னல் வேகத்தில் பறந்து பறந்து நம்மை கதிகலங்கவைத்து கப்பலில் செல்லும் டேனியை வானத்தில் பறந்து போய் ( ஆப்பரேஷன் டி கைவிடப்படுவதாகத் தெரிவித்தும்) கைது செய்தவுடன் தான் நமக்கு மூச்சே வருகிறது. ஆனாலும், ரொம்ப ரொம்ப ஸ்பீடாக பூக்களை காதில் வைத்து சுத்தோ சுத்தோன்னு சுத்தினா நாம என்னாதான் செய்கிறது. கொஞ்சமாக பூவில் இருந்து வாசனை வருவதால் நாம் தப்பித்தோம்.
t2
டெக்னிக்கலாக செல்போன், சிம், ஐஎம்ஆர்ஐ, டேப்லெட், ஜிபிஆர்எஸ்ன்னு நிறைய பயன்படுத்தியிருக்கிறார்கள். சிங்கம் 3 வேற வருவதற்கான முன்னேற்பாடுகளுடன் படம் முடிகிறது. மசாலா கொஞ்சமாகத் தடவி, காரம் ( வன்முறை ) அதிகமாக தெரிந்தாலும், நம்ம போலீஸ்காரங்கள்ல இன்னமும் இதுபோல ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறாங்கன்னு நம்ம வைக்குது படம். நன்றி, (இன்றைய பேப்பரில் ஊழலலில் முதல் இடம் காவல்துறைன்னு போட்டு செய்தி வந்திருக்கு) இந்நிலை மாறும்ன்னு அனைவரும் நினைப்போம்…
t3

—————————————————————————————————————————————-
You Can Try : Net Coins…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator

Advertisements

8 thoughts on “சிங்கம்..2 (சீறிக்கிட்டே இருக்கும்) .. திரை விமர்சனம்

  1. வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/cinema-reviews.html) சென்று பார்க்கவும்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s