பனிமலருக்காக மரியாண்.. திரை விமர்சனம்.

பனிமலருக்காக மரியாண்.. திரை விமர்சனம்.
mariyaan .. Tamil Film Review
தமிழ் திரையுலகில் பலமுறை கடல், படகு, கடற்கரை, குப்பம் மற்றும் அங்கே வசிக்கும் மீனவர்கள் என பதிவுகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த படத்தில் ஒரு வித்தியாசமாக அதாவது எளிமையான வாழ்க்கை வாழும் மீனவர்கள், அவர்களின் பணப்பிரச்சினை அதனால் ஏற்படும் வாழ்வை சிதைக்கும் பிரச்சினைகள் என (ஏற்கனவே வந்த கடலோரக்கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, ரோஜா, கடல் போன்றவைகளின் பாதிப்பு இருந்தாலும்), அதனிடைய காதலில் சிக்கித்தவிக்கும் இரண்டு உள்ளங்களின் பிரதிபலிப்பு என நன்றாகவே வந்திருக்கிறது.
t0
தனுஷ் .. ரியலி கிரேட் பாடி லாங்வேஜ், நட்பை வெளிப்படுத்துதல், உழைப்பை காட்டுதல், திறமையை வெளிப்படுத்தல், வெறுப்பை அளவோடு கையாளுதல், சூழ்நிலையை ஏற்று அதிலிருந்து விடுபடுதல் என நடிப்பை அளவோடு இயல்பாக வெளிப்படுத்தி செவாலியே சிவாஜி போன்று மற்றுமொறு நடிகர் நமக்கு கிடைத்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ஜோடியாக நடிக்கும் புதுமுகம் பார்வதி ( பனிமலர் ) நல்லத் தேர்வு, கேரளா பாணியில் உடையணிந்திருந்தாலும், கேமரா மாமா வேற அடிக்கடி டாப் ஆங்கிளில் கோணம் வைத்து படம் எடுத்திருப்பதால் முக பாவணையை பார்க்கவிடாமல் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. காதல் வருவதும் அதனை வளர்த்தெடுப்பதும், தொடர்ந்து பிரிவு ஏற்படும் போது ஏங்குவதும், டெலிபதி மூலம் பேசுவதாக, முடிவில் எதிர்பாராத சந்திப்பும், அவசியமான உதட்டோடு ஒட்டும் முத்தம் என சிறப்பாக செய்திருக்கிறார்.
t1
கதை என்ன, கடல் ராசாவாக வலம் வரும் மரியானுக்கு அதே குப்பத்தில் சிறுவயதில் இருந்தே ஈர்ப்புடன் இருக்கும் பனிமலர் மீது ஆரம்பத்தில் காதல் எதுவும் இல்லை காலப்போக்கில் ஈர்ப்பு வருகிறது, எப்பொழுதோ பண உதவி செய்த காரணத்தால் வில்லன் பனிமலரை பொன்னு கேட்டுவர, நடுவில் புகுந்த தனுஷ் பணத்தை செட்டில் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி 2 வருட ஒப்பந்தத்தில் சூடானுக்கு கிளம்புகிறார். அங்கே, பல கஷ்டத்திற்கிடையே காதலுடன் வாழ்ந்து, வீடு திரும்பும் சூழ்நிலையில் கொடூர தீவிரவாதிகளால் கடத்தப்பெற்று அலைகழிக்கப்பட்டு உயிரை கையில்பிடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பி காதலியுடன் சேர்ந்தாரா என்பதே கதை.
t2
பாலைவனத்தில் அலைக்கழிக்கப்படும் தனுஷ், அவர் நண்பர், சிறிய வயது கொடூர தீவிரவாதிகள் என சித்தரிக்கப்படுவதும், உணவே இல்லாமல் 9 நாட்கள் தவிப்பதும், விருந்து வைப்பது போலவும் அதை உண்பது போலவும் உருவகமாக நடிப்பது நல்ல காட்சிகள். காதலில் உருகி, மனதாலேயே (டெலிபதி) பேசி தொடர்ந்து தனுஷ்யை உற்சாகப்படுத்துவதும், சூடானுக்கு கிளம்பி செல்லும்வரை படம் கொஞ்சம் இழுவையாகத் தெரிந்தாலும் இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக செல்கிறது. இசை ஏஆர்.ரகுமான், ஒரு சில பாடல்கள் மட்டுமே நன்று, பேக்கிரவுண்ட் இசை கூட பழைய தபேலே சத்தமே அதிகம் கேட்கிறது.
நல்லவொரு திரைப்படம்தான்…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

One thought on “பனிமலருக்காக மரியாண்.. திரை விமர்சனம்.

  1. வருகைக்கு நன்றி பிரித்திக் கணேசன்…

    // எண்ணெய் வளத்தை சுரண்டும் கம்பெனியிடம் பணம் திரட்டவே, 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துக் கொண்டு செல்கிறார்கள் இருப்பினும் காரணமே இல்லாமல், பிணைக்கைதிகளை சுட்டுக் கொல்வதும், உண்ண உணவு தண்ணீர் தராமல் இருப்பதே அவ்வாறு குறிப்பிடக் காரணம்… பொதுவாக உங்களைப் போலவே நியாயத்தினை ஆதரிப்பவர்கள்தாம்… வணக்கம். //

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s