பெண்களுக்கா…இவ்வளவு கேள்வி?
Girls are worst in habits..
இணையத்தை மேயும் பொழுது http://www.ampalam.com/2013/08 கீழ்க்கண்ட பிளாக்கில் பல கேள்விகளைக் கேட்டு பெண்களே இதற்கு பொறுப்பு என்ற ரீதியில் எழுதப்பட்ட கட்டுரைக்கான பதில்கள் கீழ்க்கண்டவாறு… அங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளையும் கீழே உள்ளது. நன்றி. அம்பலம் .. ( ஒரு பதிவு எழுத வாய்ப்பளித்தற்காக )

அறைக்கு கும்பலாக செல்வது
பெண்கள் அறைக்கு, பெண்கள் கும்பலாக சென்று அப்படி என்ன தான் செய்கிறார்கள்? இந்த கேள்வி பல ஆண்களின் மனதில் ஓடுவதோடு மட்டுமல்லாமல், திடீரென்று இப்படி எழுந்து போய் பெண்கள் அறைக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும் அளவிற்கு செல்வோம். நம்மை போல் பலபேர், பெண்களின் இந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இன்று வரை அந்த மர்ம முடிச்சு கழற்றப்படாமலே இருக்கின்றன.
பதில். 1) கும்பலாக ரெஸ்ட் ரூம் செல்வது ஒரு பாதுகாப்புக்காக, இயற்கையில் பெண்கள் எங்கு சென்றாலும் பயம்.. இருக்கிறது.. குறிப்பாக ரெஸ்ட் ரூம் போன்ற தனியான இடங்களில்… மேலும் ரகசியமாக பேசுவதற்காகவும்
இங்கே கொஞ்சம் பவுடர்; அங்கே கொஞ்சம் லிப்ஸ்டிக்
பல பெண்கள் ஒரு சின்ன அழகு சாதன கடையையே தங்கள் பைகளில் வைத்திருப்பார்கள். ஒரு பார்டிக்கு செல்லும் போது, வீட்டிலேயே நல்ல மேக்-கப் போட்டு விட்டு தான் பெண்கள் கிளம்புவார்கள். ஒரு 15 நிமிடம் காரில் பயணம் மேற்கொண்ட பிறகு, பார்ட்டி நடக்கும் வளாகத்திற்குள் நுழையும் முன் அங்கே இங்கே என்று மறுபடியும் தங்கள் முகத்தினை சரிசெய்து கொள்வார்கள். இந்த தருணம் தான் ஆண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வீட்டில் தான் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மேக்-கப் போட்டு கொண்டார்களே, பின் ஏன் மறுபடியும் இதை செய்கிறார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை எழுப்பும்.
பதில். 2) மேக்கப் கலைந்து விட்டதாகவே மனதில் நினைத்துக் கொண்டே இருப்பதால்
சிரிப்பது
எல்லா பெண்களும் கெக்கபுக்கவென சிரிப்பது வழக்கமே. சொல்லப்போனால் அதை அவர்கள் விரும்பவே செய்வார்கள். படபடப்பு, அதீத மகிழ்ச்சி, ரகசியத்தை மறைக்கும் தோரணை இப்படி பல வகையான நேரத்தில், அதற்கேற்ப சிரிப்பார்கள். இதை ஒரு பழக்கமாக்கியதால் அவர்கள் சிரிப்பது வழக்கமாகி இருக்கலாம். ஆனால் காரணம் இல்லாமல் சிரிக்க மாட்டார்கள். இருப்பினும், அந்த காரணம் தான் என்றுமே ஒரு ஆணுக்கு புரிவதில்லை.
பதில். 3) சிரிப்பு, உங்களுக்கே தெரியும் சரியான இடத்தில் சரியான ஆள்களுக்கு முன்னால் தவறாகத் சிரித்துவிட்டால்அவ்வளவுதான் அதுக்காகத்தான் இப்படி

நான் குண்டாக இருக்கிறேனா?
உண்மையை சொன்னால், இப்படி கேட்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர் பெண்கள். தங்கள் உடல் எடை மீதும், அழகின் மீதும், அதிக கவனம் இருப்பது வாஸ்தவம் தான். ஆனால் தங்களின் ஆழ் மனது கூறிக் கொண்டே இருப்பதால், இக்கேள்வியை ஒரு ஆணிடம் பல முறை கேட்க முற்படுவர். ஆகவே அடுத்த முறை உங்களிடம் இந்த கேள்வியை கேட்கும் போது, அது அவர்களிடம் நன்கு பதியும் படியான பதிலை கூறுங்கள்.
பதில். 4) உண்மையில் குண்டாக ஆகிவிடுவதால், சும்மா மனதளவில் கொஞ்சம் தேற்றிக்கொள்ளவே அடிக்கடி இந்தக்கேள்வி
பேஸ் பேக்
முகத்திற்கு பொலிவு மற்றும் மினுமினுப்பை அதிகரித்து, ஈரப்பசையுள்ள சருமத்தை பெற பெண்கள் பேஸ் பேக் பயன்படுத்துவது ஆண்களுக்கு தெரியும். ஆனால் உண்மையிலேயே தங்கள் மனைவி இதனை பயன்படுத்துவதால் பெறப் போகும் மாற்றத்தை ஒரு ஆண் கூட உணர்வதில்லை. சொல்லப்போனால், தங்கள் சருமத்தை பேஸ் பேக் தான் முழுமையாக மேம்படுத்தியது என்று 100% நம்பும் எந்த ஒரு பெண்ணும் கிடையாது.
பதில். 5) இதுவும் மனம் சம்மந்தமானதே
5 ஆடைகளை அணிந்து பார்த்து விட்டு, புதுசு வாங்க முடிவு செய்வது
அனைத்து பெண்களும் இதனை கண்டிப்பாக செய்வார்கள். ஒரு பார்ட்டிக்கு செல்லும் முன்பு, தங்கள் அலமாரியில் இருந்து அனைத்து ஆடைகளையும் போட்டு பார்த்து விட்டு, எதுவும் சரியில்லை என்று கூறி விட்டு, உடனடியாக புதிய ஆடை வாங்க முடிவு செய்வார்கள். இரண்டு செட் ஆடைகளை வைத்து, வாரம் முழுவதும் சமாளிக்கும் ஆண்களுக்கு, இந்த விஷயம் ஆச்சரியமாக தான் இருக்கும்.
பதில் 6) திருப்தி இல்லாத குணம்
பர்ஸ்
பொதுவாக பெண்களின் பர்சில் ஒரு சாவி கொத்து மற்றும் ஒரு லிப்ஸ்டிக் வைக்கும் அளவிற்கு தான் இடம் இருக்கும். இதர பொருட்களான சீப்பு, மொபைல் போன், டிஷ்யூ பேப்பர்கள், பவுடர் போன்றவைகள் எல்லாம் அவர்களின் கார் டேஷ்போர்டு அல்லது தங்கள் கணவனின் பேண்ட் பையில் தான் வைப்பார்கள். இப்படி ஒரு சிறிய கைப்பை எந்த வகையிலும் பயன் அளிக்காத போது, அதனை ஏன் சுமக்க வேண்டும்?
பதில். 7) பர்ஸ் .. பழக்கம்
பெரிய ஹேன்ட் பேக்
கண்டிப்பாக வெளியில் செல்லும் போது, பெண்கள் ஹேன்ட் பேக் வைத்திருக்க வேண்டும். ஆனால் தாஜ் மகாலையே வைக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய பையை எதற்காக எடுத்துச் செல்ல எண்டும்?
பதில். 8) பெரிய உறாண்ட்பேக் .. அதிக பொருள்களை உள்ளடக்க ஆனால், எதையும் உள்ளே வைக்காமல் காலியாகவே பெரும்பாலும் இருக்கும்
பாதம்/நகங்களுக்கு லோஷன்
முகம், தலைமுடி, உடல் போன்றவைகளுக்கு க்ரீம் பயன்படுத்துவது என்பது ஒரு ரகம். ஆனால் பாதம், கால் விரல்கள், நகங்கள் என ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித் தனியாக க்ரீம் வாங்கும் பழக்கம் பெண்களிடம் ஏன் இருக்கிறது என்பது ஆண்களுக்கு புரிவதில்லை. நகமும் விரல்களும் உடம்பில் உள்ள பகுதிகள் தான். பின் எதற்காக தனித்தனி க்ரீம் தேவை என்பது தான் ஆண்களின் விடை தெரியாத கேள்வியாகும்.
பதில். 9) இதெல்லாம் பெண்களோட குணாதியங்கள்.. ஆண்கள் எப்படி எங்கே சென்றாலும் டீக்கடையை தேடுகீறீர்களோ அதுபோல
ரிப்பன்கள்
ரிப்பன்கள் என்றால் பொதுவாக பெண்களுக்கு பிரியமான ஒன்று. தங்கள் தலை முடியில் கட்டவோ, பேப்பர்களை ஒன்றாக கட்டவோ, பரிசு பொருளின் மேல் கட்டவோ அல்லது ஒரு தொப்பியை அலங்கரிக்கவோ அதை பயன்படுத்துகின்றனர். அதனால் ஒவ்வொரு பெண்ணும் ரிப்பன்களை வைத்திருப்பார்கள். அது இல்லாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. இது பிறப்பினால் வந்ததா அல்லது பழக்கத்தினால் ஏற்பட்டதா?
பதில். 10) சிறுவயதில் முதல் முதலில் ரிப்பன்களே தங்கள் கூந்தல் அழகை சரிசெய்ய பயன்படுத்துவதால் அதற்கென தனி மரியாதைதான்.. ரிப்பன் இல்லாமல் முடியை கட்டுப்படுத்த முடியாது.. அப்புறம் சொர்னாக்கா மாதிரி தோற்றம் தான்… அதுக்காகவே…
சுத்தப்படுத்துதலும் சீரமைப்பதும்
பல பெண்களுக்கு தங்கள் பொருட்களை சுத்தப்படுத்தி, அதை சீரமைப்பது என்பது ஒரு பொழுது போக்காக உள்ளது. ஆனால் அதோடு நின்றால் பரவாயில்லை. சுத்தமான கண்ணாடி மேலும் சுத்தமாகும் வரை, குஷன்களெல்லாம் நல்ல பார்வையுடன் வைக்கப்படும் வரை; இப்படி நுணுக்கமாக சீரமைக்கும் வரை அவர்கள் ஓயப் போவதில்லை.
பதில். சுத்தம் செய்வது ஒருமாதிரியான மனபிராந்திதான்.. கேள்வி 4க்கான பதில் போல, சுத்தத்தைப்பற்றி கண்டுகொள்ளாத பல பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு பெண்களிடம் ஒரு மாதிரியான வாசனை இருக்கிறது.. அது அவர்களின் பழக்கவழக்கம், இருப்பிடம், பயன்படுத்தும் வாசனைதிரவியங்களைப் பொருத்துள்ளது



