சொன்னா புரியாது … திரைவிமர்சனம்.

சொன்னா புரியாது … திரைவிமர்சனம்.
sonna puriyathu … tamil film review

சிவா… சிவா.. ன்னு படத்தில் சுமார் 300 தடவையாவது சொல்லப்படுது, வாங்க இப்போவந்த காமெடி சீரிஸ் சொன்னா புரியாதைப் பற்றி பேசுவோம். செம யூத் சிவா (?-) சேட் பார்ட்டியில் நண்பன் தமிழ்பாட்டை பாடி செம டோஸ் வாங்க, அதே தமிழ்பாட்டை இந்தியில் சும்மா உல்டாலக்கடி அடிக்க, சேட் ஜோடியை சேர்ந்த ஒரு பொண்ணே மயங்கி சிவா பக்கட்டு வந்துடுச்சுன்னா பார்த்துங்க அவ்வளவு காமெடி…
t1
சிவாக்கு கல்யாணம் பண்ணீக்கிற பிடிக்காது, அவங்க அம்மா மீரா வற்புறுத்தலால், வேண்டா வெறுப்பாக பொன்னு பார்க்க போய், மற்றவர்களால் நிச்சியிக்கப்படுகிறது.. பொன்னு ரொம்ப கட்டுபெட்டியாக இருப்பதாலும், கல்யாணத்தை நிறுத்த பிளான் செய்கிறார்.. கிராமத்தில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் வைத்து பிரச்சினை தீர முடிவு செய்கிறார். பேஸ்புக்கில் பார்த்தத ஒரு வீடியோ அட்வான்ஸ் ஆக பிரச்சினை தீர்த்துவைக்க, போலியாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணத்தை நிறுத்த வந்த ஆட்களால் ஒரே காமெடி (அதிலேயும் அந்த பஞ்சாயத்து ரொம்ப அருமை… இங்கே சொல்ல வில்லை நீங்களே பார்த்து சிரிங்க) இடையில் கால்கட்டு.காம் ஓனர் மனோ பிரச்சினை பண்ண, மாப்பிள்ளையும் பொண்னும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவங்க வீட்டில் பீலா உட, அதுவே பிரச்சினை பெரிதாகி பெரியவர்களால் திருமணம் நின்றுவிடுகிறது.
t2
ஒரு சந்தர்பத்தில் தமிழ்.டிவி நிகழ்ச்சிக்காக 50 லட்சம் பரிசை வெல்ல நின்றுவிட்ட திருமணப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஜோடி சேரும் சிவா, போட்டியில் வென்றுவிடுகிறார்… இருப்பினும் அவருடைய சிறுவயதில் இருந்தே கனவான கார் வாங்குவதைப்பற்றி ஏங்குவதை தப்பாக பெண்ணிடம் போட்டுக் கொடுக்க, அப்பென்னும் நம்பி இவரைப்பார்த்து உருகுகிறார். பழைய படங்கள் போல, பொண்ணை தூக்க ஏற்பாடு செய்ய, மாற்று கல்யாண ஏற்பாடு, மாப்பிள்ளையை தூக்குவது, காமெடி வில்லன் என்ட்ரி என ஒரே கலாட்டா காமெடியாகி ஒருவழியாக எண்ட் கார்டு விழுகிறது.
t3
சிறப்பான அம்சங்கள்

1. படம் முழுக்க யூத் டிரண்ட்தான், தற்கால இளசுகள் தங்கள் திருமணம் மற்றும் தங்கள் இணையை எவ்வாறு தேர்தெடுக்கிறார்கள் என்பதை அலசி ஆய்திருக்கிறது. இளசுகள் ஒருமுறை இந்தப்படத்தை பார்த்து வைத்துக் கொள்வது நல்லது.
2. சிவாவும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஆங்கிலப்படங்கள் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு டப்பிங் செய்யும் புரெபெஸனலாக இருக்கிறார்கள். அவர்கள சாம்பிலுக்காக காண்பிக்கும் பிட் அருமை…
3. சிவாவின் பாட்டி, டேப்லெட்டில் ஆங்கிரி பேர்ட் விளையாடிக் கொண்டே இருப்பது,
4. சிவாவின் வீடு இருக்கும் தெரு, ஒரே மாதிரியான தனி வீடுகள், இன்னர் டெக்கரேஷன் என மெனக்கெட்டு விஷீவல் செய்திருக்கிறார்கள்
5. கிரியேட்டிவ் ஒர்க் செய்யறவங்க கண்டிப்பா லிக்கர் சாப்பிடனுங்கறது கொஞ்சம் ஓவர்.
6. சிவாவின் தன்னம்பிக்கை….
7. சிவாவின் வில்லிங் பவர்… ஒரு கார் வாங்க 20 வருடமாக முயற்சித்து கனவை வளர்ப்பதும், திடீரென கனவில் வயதாகியும் கார் வாங்க முடியாதை எண்ணி திடுக்கிடுவதும் நல்ல பாசிட்டிவ் திங்கிங்
8. காமெரா, இசை, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல்,
9. டிஆர்ரின் சோக கீதத்தை இடத்திற்கு தகுந்தவாறு ( இளையராஜாவின் பாட்டையும் தான்) பயன்படுத்தியிருப்பது
10. கரண்ட் டிரண்ட் (டிவி ஷோ, மூலிகை ரெஸ்டாரெண்ட்) என இயக்குனர் ரொம்பவே யோசித்து யோசித்து படத்தை கொடுத்திருக்கிறார்.
11. பையனுக்கு ஆண்மை இல்லை என்பதும், பெண்ணிற்கு மூன்று முறை அபார்ஷன் ஆகிவிட்டது என்பதும் கொங்சம் இல்லை ரொம்பவே ஓவர்.
12. விளம்பரங்கள் ஓல்டு மாடலாக இருப்பதால் மக்களை படம் பார்க்க தூண்டவில்லையெனத் தெரிகிறது.

இதுவும் சிறந்த பொழுதுபோக்கு காமெடி யூத் ஸ்பெஷல் படம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

2 thoughts on “சொன்னா புரியாது … திரைவிமர்சனம்.

 1. /// நன்றிண்ணா… நன்றி….நெட் அர்பணிப்பு வாழ்வை வாழும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு ஒரு பூச்செண்டு ஆர்டர்….///

  ஏதோ கொடுக்கணும்… கையில் ஏதும் கிடைக்கவில்லை…

  says:
  7:27 முப இல் ஜூலை 12, 2013
  ///நெட் அர்பணிப்பு வாழ்வை வாழும்// haa haa haa …!

  J..subbu..! அவர்களுக்கும்…

  சொன்னா புரியாது………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s