மூடர் கூடம் …. திரை விமர்சனம். MOODAR KOODAM TAMIL FILM REVIEW
ஜாலியான படங்களின் வரிசையில் அடுத்த படைப்பு மூடர்கள் கூடம். நளன் என்பவர் குறும்படங்களில் இருந்து பெரும் படமாக உருவாக்கி தானும் நடித்திருக்கிறார். சென்றாயன் என்பவர் ஒரு மூடர் அவரை சுற்றி மூன்று வேலையில்லாத, முரட்டுத்தனமான, பணத்தை தேடும் 3 இளைஞர்கள் சந்தேக கேஸில் போலீசால் பிடிக்கப்பட்டு பின்பு ஒன்றாக விடுவிடுக்கப்படுவதால் ஒன்று சேர்கிறார்கள்.
நால்வர் அணி சேர்ந்து, கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒருவரின் பணக்கார உறவினர் வீட்டில் திருட செல்கிறார்கள். முதல் நாள் அவரே நோட்டமிட்டு உறவினர் குடும்பம் 3 மணிக்கு வெளியூர் செல்கிறார்கள் என்பதால், காலை 6 மணிக்கு கொள்ளையடிக்க சென்று கதவைத்திறந்தால் உறவினரே கதலை திறக்கிறார்.. என்னவென்றால் மதியம் 3 மணிக்கு ஊருக்கு போவதை தவறாக இரவு 3 மணிக்கு செல்வதாக நினைத்துக்கொள்வது. பின்பு, அவர்களை ஒரு ரூமில் போட்டு (பலே, ஆர்டிஸ்ட் ரூம் சிறப்பாக அமைத்துள்ளதற்காக) அடைக்க, வேலைக்காரன், நாய், கூடுதலாக திருட வரும் நபர், உதவிக்கேட்டு வரும் பெண்மணி, துன்புறுத்த வரும் பேட்டை ரவுடி என ஒரு கூட்டமே அந்த ரூமில் அடைபடுகிறார்கள்.
மாற்றி, மாற்றி ஒவ்வொரு நிகழ்வு மற்றும் கேரக்டர்களுக்கு சின்னதாக பிளாஷ்பேக் போட்டு நம்மை தெளியவைப்பது இந்தப்படத்தின் சிறப்பு. படத்தின் நாய், பொம்மை போன்றவைகளை கூட விட்டுவைக்காமல் கதைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கடைசியில், தான் திருட வந்த வீட்டில் ஒரு பைசா கூட இல்லை என்பதும், அவர்களே திவாலாகி துபாய் ஒட போவது தெரிந்து நொந்து நூலாவதும், அப்படி இப்படி கதை நகர்ந்து ஒரு தாதா, பேட்டை ரவுடி தலைவனை போலீஸ் போட்டுத்தள்ள இவர்கள் உதவி செய்ய, காரில் தப்பி எங்கோ சென்று விடுகிறார்கள்… பொம்மையில் உள்ள வைரம் இவர்களுக்கு கிடைத்தா என படம் பார்த்த யாருக்குமே தெரியவில்லை என்பதே உண்மை.
கேமரா, இசை, அனைவரின் நடிப்பு, சிறந்த டைரக்ஷன் என நாமேளே அந்த டீமுக்கு விருதை அளிக்கலாம். நல்ல டைம்பாஸ் படம் பாஸீ……
Month: செப்ரெம்பர் 2013
வருத்தமில்லா வாலிபர் சங்கம் .. பார்த்தியா / பார்க்கனுமா?
வருத்தமில்லா வாலிபர் சங்கம் .. பார்த்தியா / பார்க்கனுமா?
varuthamilla valibar sangam .. tamil film review
சிவகார்த்திகேயனின் இயல்பான நடிப்பிற்கு ரீஜண்டாக இரையாகி இருப்பது இந்த சங்கம். தொடர்ந்து வெற்றிமுகமாக கண்டு கொண்டிருப்பது, நடிப்பு கிராப் எகிறவும் செய்கிறது. ஒரு நடுத்தர கிராமமாக இருந்து 4 வழி சாலைகளின் வரவால் ஆரம்ப கட்ட நகர ரேஞ்சுக்கு ஆகிவிடும் கிராமம் ஒன்றில் வேலை வெட்டி இல்லாமல், சும்மா சுற்றிக் கொண்டிருந்தாலும், தம்மை சீண்டுபவர்களை அரசாங்க அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து புரோட்டா சூரியுடன் இணைந்து வருத்தமில்லா வாலிபர் சங்கம் என அமைத்து கிராமத்து திண்டில் படுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பவரை பிந்து மாதவி ஸ்கூல் டீச்சராக வந்து கனவை கலைக்க, காதலிக்கிறேன் பேர்வழி, காதல் லெட்டர் கொடுக்கிறேன்னு அந்த வகுப்பில் படிக்கும் மாணவியிடம் கொடுத்தனுப்ப, ஒரு கட்டத்தில் பிந்துமாதவி கல்யாண பத்திரிகையை கொடுத்து விட, இடையில் திருவிழாவில் அந்த மாணவியின் கவர்ச்சியில் மயங்கி காதல் திசைமாறி மாணவியை காதலிக்க, மாணவியும் இவரை காதலிக்க, அவங்க அப்பா ( சத்யராஜ், சாரை தலைவாவில் பயங்கர பில்டப்பில் சமீபத்தில்தான் பார்த்தால், அப்பாவி வேஷம் எடுபடவில்லை என்பதே உண்மை ) மற்றும் 4 அல்லக்கைகளின் வழிகாட்டுதலால் எகிற, வில்லன் ரேஞ்சுக்கு காதல் கைகூடாதாதோன்னு படம் முழுக்க கொண்டுபோய், சரேல்ன்னு யூ டர்ன் அடித்து சுபம் போடுகிறார்கள்.
படத்தின் உறலைட்டுன்னு சொன்னா, சிவகார்த்திகேயன்/சூரியின் இயல்பான கிராமத்து குசும்பு, 2 வயதில் அம்மாவை இழந்தும், அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளாமல் தடுப்பதாகட்டும், கோவில் திருவிழாவில் தானே பில்டப் கொடுத்து தலைவராக வருவாதாகட்டும், பசுமாடு கிணற்றில் விழுந்தவுடன் உயிரைக்கொடுத்து காப்பாற்றுவதாகட்டும், கதாநாயகியுடன் சீண்டுவது/கொஞ்சுவது அனைத்திலும் உயிரோட்டம் இருப்பது உண்மை. இன்ஸ்பெக்டர் மற்றும் சத்யராஜின் மனைவி, கிராமத்து பூசாரி ( எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று விலாவாரியாக இந்தப் படத்தில் நகைச்சுவையுடன் சேர்த்து நம்மை தெளிய வைக்கிறார்கள்.. அவசியம் இந்த காட்சியை பார்த்து ரசியுங்கள் )
சிவகார்த்திகேயனின் அப்பா, 4 அல்லக்கைகள் என நிறைய கேரக்டர்கள் இடையே, சொல்லிக்கொள்ளும் அளவில் நன்றாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். பாடல்கள் நிறைய, அதனால் படமும் நீண்ட நேரம் இழுக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்தப் படம் ஒரு சின்னத்திரையின் ஷார்ட் பிலிம் பார்முலாவில், பெரிய திரையில் பெரிய படமாக எடுத்திருக்கிறார்கள். தலைவர், செயலாளர் இடையே சண்டை மூள, போட்டி சங்கம் உருவாவது அரசியலை கொஞ்சம் ரீவைண்ட் செய்திருக்கிறார்கள். சங்கத்திற்கு அவசியம் சென்று வரலாம்..
மிஸ்டர்… வயிறு காலிங்…..
பிளாகர்கள் எல்லாருக்கும் கண்டிப்பாக வயிறு இருக்கும் அப்படி வயிறு இருக்கறவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு கண்டிப்பா ஒரு நாளாவது மக்கர் செய்து வலி கிலி வந்து அவஸ்தை பட்டிருப்பீங்க… அப்படி அவஸ்தை படாமா ரொம்ப நாளைக்கு அதாவது மண்டையை போடற வரைக்குன்னு வச்சுங்களேன்… கீழே தரப்பட்ட தகவலை கொஞ்சம் தெரிஞ்சு மட்டும் அல்லாமல் அதனை பாலோ செய்யவும் வேனும்னு சமூகம் சார்பாக வேண்டிக்கிறேனுங்க…
1. வாயையும், பற்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு காலையும், இரவிலும் (சாப்பிட்ட பிறகு, படுப்பதற்கு முன்பு) பற்களை துலக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் வாயை நன்றாக கொப்பளித்து சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறையும் உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
2. சுத்தமான தண்ணீர் மற்றும் தண்ணீர் ஆகாராங்ளை நிறைய குடிக்க வேண்டும்.
3. சாப்பிடும்போது அவசரப்படாமல் போதிய நேரம் எடுத்து, நன்றாக மென்று மெதுவாக விழுங்க வேண்டும்.
4. காய்கறிகளும், பழங்களும் நிறைய சாப்பிட வேண்டும். தினமும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிடுவது நன்று. வேகவைத்த காய்கறிகள் மட்டுமல்லாமல் பச்சையாகவும் காய்கறிகளை சாப்பிடலாம். (உதாரணமாக கேரட்)
5. நாம் சாப்பிடும் உணவில் நார் சத்து அதிகமாக இருக்க வேண்டும். நார்ச்சத்து காய்கறிகளிலும், பழங்களிலும் அதிகமாக உள்ளது. பழங்கள் சாறு பிழிந்து சாப்பிடாமல் பழமாகவே சாப்பிட வேண்டும். தோலோடு சாப்பிடக்கூடிய பழங்களை தோல் உறிக்காமல் ஆப்பிள், ஆரஞ்சு சுளையின் தோல் அப்படியே சாப்பிட வேண்டும். இந்த நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் புற்று நோய் போன்ற பிரச்சினைகள் வருவதை தடுக்கும்.
6. அசைவம் அளவோடு சாப்பிடுவதால் கெடுதல் இல்லை. நாம் சாப்பிடும் உணவு பரிபூரண உணவாக இருக்க வேண்டும் (balanced died) அதாவது மாவுச்சத்து (carbohydrate), புரதச்சத்து (protein) மற்றும் குறைவான கொழுப்புச்சத்து (fat) ( எண்ணெய் வகைகள், நெய், வனஸ்பதி, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுகொழுப்பு, கோழிகறி தோல் போன்றைவை) கொண்ட உணவாக இருக்க வேண்டும்.
7. இனிப்பு வகைகள், சாக்லெட் மற்றும் ஐஸ்கீரீம், போன்றவை அதிக மாவுச்சத்தும், கொழுப்பும் (fat) நிறைந்தவை. இவைகளை அறவே தவிர்ப்பது நல்லது.
8. பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் மிளகு இவையெல்லாம் ஜீரண மண்டலத்தில் அமிலத்தன்மையை அதிகப்படுத்துவதால் குறைவாக பயன்படுத்துவது நன்று.
9. குளிர்பானங்கள் ( முக்கியமாக carbonated drinks ) காபி , டீ, முடிந்தளவு குறைத்துக் கொள்வது நல்லது.
10. மதுபானம் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை அறவே நிறுத்த வேண்டும்.
11. துரித உணவு வகைகள் ( fast foods), நொறுக்குத்தீனி (Junk Foods) இவைகளை தவிர்க்க வேண்டும்.
12. காய்கறியாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் எண்ணெய்யில் பொறிக்காமல் வேக வைத்து சாப்பிடவும்,
13. தினமும் நேரம் தவறாமல், உண்ண வேண்டும். இரவில் சாப்பிட்டு விட்டு உடனே படுக்கக் கூடாது. இரவில் படுப்பதற்கு முன் 1 அல்லது 2 மணி நேரம் முன்னதாகவே சாப்பிட வேண்டும். முழு வயிற்றுடன் படுக்கக்கூடாது.
14. கழிவறையை உபயோகித்தப் பின்பு கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
15. தினந்தோறும் உடல்தூய்மை முக்கியமானது.