பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 1)
Visit to Bangalore .. Part I
காலை 6.50க்கு மடிவாலாவில் காலை வைத்தவுடன் சில்லென்ற காற்று முகத்தில் அடித்தது. நடுங்கிக்கொண்டே அல்சூர்க்கு செல்ல ஆட்டோ விசாரித்தால், 300 ரூபாயாம்… முடியாது என கூறியவுடன் ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லவர் போல, 7 மணி வரைக்கும் அந்த சார்ஜ், பிறகு 150தான் என்று சொன்னார். உடனே மணியைப் பார்க்க இன்னும் 10 நிமிடம்தான் இருக்கு நாங்க இப்படியே கொஞ்சநேரம் நின்னுட்டு அப்புறம் ஆட்டோ கூப்பிடுறோம்னோம். ( எப்படி? )
சரியா 7 மணிஆனவுடன், ஆட்டோபிடித்து போனாக்கா ஆட்டோ சும்மா பிளேன் கணக்கா ரோட்ல பறக்கிறாரு, இதுல ஒவ்வொரு ரோட்டிலேயும் 500 மீட்டருக்கு ஒரு பள்ளம் கண்டிப்பா இருக்கு… உயிரை கையிலபிடித்துக்கிட்டு போக வேண்டிய இடத்துக்கு போனவுடன், ஆட்டோ சார்ஜ் 200 ரூபாயாம், ஒருவழியா 180 கொடுத்து உறவினர் வீட்டுக்குசென்றோம். புறாக்கூண்டு போன்று ஒவ்வொரு வீடு அடுக்கடுக்காக கட்டப்பட்டிருக்கு, ரூ.10000 வாடகை சாதரணமாம்.
டிபன்லாம் சாப்பிட்டு, இன்னொரு ஆட்டோ பிடித்து விஸ்வேஸ்வரய்யா சயின்ஸ் இன்ஸ்டியூட்க்கு வந்தோம். வாட்ச்மேன் உள்ளேயே விடல, 10 மணிக்குதானாம்… நாங்க போனப்ப 9.20.. அப்புறம் ஒருவழியா 10 ஆனவுடன் உள்ளே சென்றால் செக்யூரிட்டிங்க எல்லாம் சேர்ந்து ஒரு டிரில் செய்து காண்பித்தார்கள்.. டிக்கட் கொடுக்க ஆடிஅசைந்து 10.25க்கு வந்தாரு, டிக்கட் ரூ.30 தான். 3 தளங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 3வது தளம் ஏன்னா, அங்கே தான் கேன்டீன் இருக்கு.. பசங்க இஷ்டத்துக்கு ஒவ்வொன்னையும் ஒர்க் பண்றேன் பேர்வழின்னு உடைக்கமுடியுமான்னு டிரைபண்றாங்க… பெரும்பாலான கருவிகள் வேலை செய்யவில்லை… மற்றும் ஓல்டு (not updated to latest trends).
மாடியில் ஒரு கேண்டீன், அங்கிருந்து பார்த்தா விஜய் மல்லையாவின் யூபி குரூப் பில்டிங் சும்மா அமெரிக்கா கணக்கா இருக்கு … இவராலாய அரசுக்கு வரி கட்ட முடியவில்லைன்னு ஆச்சரியா இருந்தது. அங்கே விஜய் மல்லையாவிற்கு சொந்தமா ஒரு உறாஸ்பிடல் இருக்காம்… கொஞ்சம் நடந்து வந்து மீன்காட்சியகத்திற்கு சென்றோம். நுழைவு 5 மட்டும்தான் சும்மா சொல்லக்கூடாது, நாங்கள் பார்த்த மீன்காட்சியகங்கிளேயே ரொம்ப திருப்தியா இருந்தது இங்கதான்.
அடுத்து கப்பன் பார்க், உள்ளே நுழைந்து, கார பொரி சாப்பிட்டுக்கிட்டே விதான் சவுதா வரைக்கும் நடந்தோம். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து, கமர்சியல் தெருவிற்கு சென்றோம் உண்மையில் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது… பின்னே everything started from 2000 thousand… நம்மால் முடிந்தது நிலக்கடலை 10 ரூபாய்க்கு வாங்கி கொறித்துகொண்டே மற்றொரு மாலுக்குள் நுழைந்து டைம்பாஸ் செய்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு அவசியம் வரனும் என உறவினர் அழைத்ததால் மீண்டும் ஆட்டோவில் ஏறி மதிய விருந்தை சாப்பிட்டு 3 மணிபோல் விடைபெற்றோம்.
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி http://www.employmentnews.gov.in/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய http://www.tamilcube.com/
6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி http://www.way2sms.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம் http://www.justdial.com/
9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம் http://www.dinamalar.com/
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம். http://www.indiapost.gov.in/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம் http://www.filehippo.com/