பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 1)

பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 1)
Visit to Bangalore .. Part I
காலை 6.50க்கு மடிவாலாவில் காலை வைத்தவுடன் சில்லென்ற காற்று முகத்தில் அடித்தது. நடுங்கிக்கொண்டே அல்சூர்க்கு செல்ல ஆட்டோ விசாரித்தால், 300 ரூபாயாம்… முடியாது என கூறியவுடன் ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லவர் போல, 7 மணி வரைக்கும் அந்த சார்ஜ், பிறகு 150தான் என்று சொன்னார். உடனே மணியைப் பார்க்க இன்னும் 10 நிமிடம்தான் இருக்கு நாங்க இப்படியே கொஞ்சநேரம் நின்னுட்டு அப்புறம் ஆட்டோ கூப்பிடுறோம்னோம். ( எப்படி? )
சரியா 7 மணிஆனவுடன், ஆட்டோபிடித்து போனாக்கா ஆட்டோ சும்மா பிளேன் கணக்கா ரோட்ல பறக்கிறாரு, இதுல ஒவ்வொரு ரோட்டிலேயும் 500 மீட்டருக்கு ஒரு பள்ளம் கண்டிப்பா இருக்கு… உயிரை கையிலபிடித்துக்கிட்டு போக வேண்டிய இடத்துக்கு போனவுடன், ஆட்டோ சார்ஜ் 200 ரூபாயாம், ஒருவழியா 180 கொடுத்து உறவினர் வீட்டுக்குசென்றோம். புறாக்கூண்டு போன்று ஒவ்வொரு வீடு அடுக்கடுக்காக கட்டப்பட்டிருக்கு, ரூ.10000 வாடகை சாதரணமாம்.
t1
டிபன்லாம் சாப்பிட்டு, இன்னொரு ஆட்டோ பிடித்து விஸ்வேஸ்வரய்யா சயின்ஸ் இன்ஸ்டியூட்க்கு வந்தோம். வாட்ச்மேன் உள்ளேயே விடல, 10 மணிக்குதானாம்… நாங்க போனப்ப 9.20.. அப்புறம் ஒருவழியா 10 ஆனவுடன் உள்ளே சென்றால் செக்யூரிட்டிங்க எல்லாம் சேர்ந்து ஒரு டிரில் செய்து காண்பித்தார்கள்.. டிக்கட் கொடுக்க ஆடிஅசைந்து 10.25க்கு வந்தாரு, டிக்கட் ரூ.30 தான். 3 தளங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 3வது தளம் ஏன்னா, அங்கே தான் கேன்டீன் இருக்கு.. பசங்க இஷ்டத்துக்கு ஒவ்வொன்னையும் ஒர்க் பண்றேன் பேர்வழின்னு உடைக்கமுடியுமான்னு டிரைபண்றாங்க… பெரும்பாலான கருவிகள் வேலை செய்யவில்லை… மற்றும் ஓல்டு (not updated to latest trends).
மாடியில் ஒரு கேண்டீன், அங்கிருந்து பார்த்தா விஜய் மல்லையாவின் யூபி குரூப் பில்டிங் சும்மா அமெரிக்கா கணக்கா இருக்கு … இவராலாய அரசுக்கு வரி கட்ட முடியவில்லைன்னு ஆச்சரியா இருந்தது. அங்கே விஜய் மல்லையாவிற்கு சொந்தமா ஒரு உறாஸ்பிடல் இருக்காம்… கொஞ்சம் நடந்து வந்து மீன்காட்சியகத்திற்கு சென்றோம். நுழைவு 5 மட்டும்தான் சும்மா சொல்லக்கூடாது, நாங்கள் பார்த்த மீன்காட்சியகங்கிளேயே ரொம்ப திருப்தியா இருந்தது இங்கதான்.
t2

அடுத்து கப்பன் பார்க், உள்ளே நுழைந்து, கார பொரி சாப்பிட்டுக்கிட்டே விதான் சவுதா வரைக்கும் நடந்தோம். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து, கமர்சியல் தெருவிற்கு சென்றோம் உண்மையில் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது… பின்னே everything started from 2000 thousand… நம்மால் முடிந்தது நிலக்கடலை 10 ரூபாய்க்கு வாங்கி கொறித்துகொண்டே மற்றொரு மாலுக்குள் நுழைந்து டைம்பாஸ் செய்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு அவசியம் வரனும் என உறவினர் அழைத்ததால் மீண்டும் ஆட்டோவில் ஏறி மதிய விருந்தை சாப்பிட்டு 3 மணிபோல் விடைபெற்றோம்.

இப்போதான் எங்களுக்கு சனி ஆரம்பம்…. (பகுதி 2…)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

5 thoughts on “பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 1)

  1. நானும் அடிக்கடி பெங்களூர்
    வருகிறவன் என்கிற வகையில்
    நீங்கள் சொல்லிச் செல்வது விஷுவலாக
    என்னுள் ஓடுகிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  2. ஒரேநாளில் பெங்களூரை வீட்டாருக்கு சுற்றிக் காட்ட நினைத்த் விட்டீர்கள் போலிருக்கிரது. அதனால்தான் விஸ்வேஸ்வரய்யா சயின்ஸ் இன்ஸ்டியூட்க்கு சீக்கிரமாகவே வந்து ,சீக்கிரமாகவே கப்பன் பார்க், கமர்சியல் தெரு என்று, வந்தது தெரியாமல் போய் வந்து போய் விட்டீர்கள். அடுத்த தடவை வரும்போது ஒவ்வொரு இடத்திற்கும் அரைநாள் ஒதுக்கி ரசியுங்கள். பதிவுக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s