காசியை காணோம்… தேடுங்க பீளீஸ்…

இந்துக்களின் புனிதத்தலம் காசியை காணவில்லை?
KASI MISSING…
காலையில் இருந்தே டாபிக் சிக்கமாமல் காத்திருந்தேன், அலுவலக உதவியாளர் காசி கொண்டுவந்த டீயை சாப்பிட்டவுடன் தான், இந்த காசி மேட்டர் கிளிக் ஆச்சு. கொஞ்சம் வருடங்களுக்கு முன்னால், எனது உறவினர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார், எப்பொழுது வந்தாலும் எங்கள் வீட்டிலேயே தங்கும் பழக்கம் உடையவர், என்னை அழைத்து, நான் காசிக்கு போலாம்ன்னு இருக்கேன் அதற்கான ஏற்பாடுகளை செய்து தரமுடியுமான்னு கேட்டார்? நான் சரி சரி மண்டைய ஆட்டிவிட்டு வெளியில் வந்து யோசித்தேன், முன்னே பின்னே காசிக்கு போயிருந்தானே அதைப்பற்றித்தெரியும். உடனே, நண்பர் வீட்டில் இருந்த ( அப்போ இண்டர்நெட் அவ்வளவா பிரபலம் இல்லை ) மேப்பை எடுத்து அலசிஅலசிப் பார்த்தோம், ஒரு மணி நேரம் ஆகியும் எங்களால் காசியை கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியை வெளியில் காண்பித்து கொள்ளாமல், இன்னொரு ஆல்இன்ஆல் நண்பரின் உதவியை நாடினோம், அவருக்கு முதலில் பிடிபடவில்லை, ஆனால் சிறிது நேரத்திலேயே, கங்கை, அலகாபாத் போன்ற இடங்களைவைத்து அருகில் உள்ள வாரணாசி தான் காசின்னு கண்டுபிடித்துக் கொடுத்தார். அதற்கப்புறம் ஒரு பழுத்த பழத்தைபிடித்து, காசிக்கு போவதை பற்றி விசாரித்தோம். அவர், முதலில் இராமேஸ்வரத்திற்கு செல்லவேண்டும் என்றும், அங்கே கடலில் குளித்து ஒரு பிடி மண் எடுத்துக்கொண்டு, பிறகு காசிக்கு சென்று கங்கையில் குளிக்கும்போது அந்த மண்ணை அங்கே விடவேண்டும் எனவும், பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் கங்கை நீரை பிடித்துக் கொண்டுவந்து, திரும்பவும் இராமேஸ்வரம் சென்று கடலில் கங்கைநீரை கலக்கவும்ன்னு ஆரம்பித்தார்.
T1
ஒருவழியா தேவையான ரயில்டிக்கட்கள், பிரயாண விபரங்கள் அனைத்தும் சொல்லி உறவினரை அனுப்பிவைத்தோம். அவரும், நிம்மதியா 10 நாட்கள் சுற்றிவிட்டு பத்திரமா திரும்பி வந்தார். அப்போதிலிருந்து காசிக்கு போயே ஆகனும்னு மண்டையின் ஓரத்தில் ஒரு புள்ளிவைக்கப்பட்டது. சென்னைக்கு செல்லும் போது காசி தியேட்டரில் படம் பார்க்கனும்ன்னு சின்ன வயதிலேயே நினைத்துக்கொள்வோம்… ஆனால், சந்தர்ப்பம் இதுவரை வரவில்லை. வடசென்னை காசி மேடு பகுதியில் நடக்கும் கோஷ்டிமோதல்களைப்பற்றி அவ்வப்போது டிவியில் பார்ப்பது.. அய்யர் ஊட்டு கல்யாணத்தில் மாப்பிள்ளை காசி யாத்திரை போகிறார்ன்னு.. பழக்கம் தெரியாதவங்களை முழிக்க வைப்பாங்க… வயதானவங்க தோளில் போட்டுக் கொள்ள ஒரு காசித்துண்டு கொடுப்பான்னு கேட்டு வாங்குவதைப் பார்த்திருககிறேன். தீபாவளியன்று காசித்தீர்த்தம்ன்னு ஒரு சிறிய குடுவையில் ஊற்றிய நீரை ( பத்திரிகை வாங்கினா இது இலவசம் ) சிறுது தலையில் தெளித்து கங்காதீர்த்தம் நமஸ்துன்னு வாழ்த்தியும்… மண்டையப் போடப்போகும் கிழங்களுக்கு அக்கம்பக்கம் உள்ளவர்கள் காசித்தீர்த்தம் சிறிய குடுவையில் உள்ள நீரை (உபயம் யாரேனும்) ஊற்றி பரலோகம் அனுப்பி வைப்பார்கள். (போதுமா டீடெய்லு…)
t4
சமீபத்தில் வெளிவந்த தனுஷ் நடித்த அம்பிகாபதியில் (இந்தி) (டப்பிங் தமிழ்) முழுக்க முழுக்க காசியை வெளுத்து வாங்கியிருப்பாங்க, பாலா சார்கூட டிரை பண்ணியும் முழுமையாகன்னு சொல்ல முடியாது. நான் கேள்விபட்ட வரையில் காசியில் பல கட்டங்கள் உள்ளதாகவும், ஒரு சில கட்டங்களில்தான் பிணங்களை எரியவிட்டு அப்படியே தண்ணீரில் இழுத்து விடுவதாகவும் தெரிகிறது. அங்கே உள்ள அனைத்து கோவில்களிலும் நாமே நேரடியாக மூலஸ்தானத்திற்கு சென்று சாமியைத் தொட்டு பூஜைசெய்ய அனுமதி உண்டாம். பண்டா (அய்யர்)விடம் சிக்கி பலஆயிரங்களைத் தொலைக்கவும் வாய்ப்புண்டாம். ஒரு இடத்தில் உள்ள கிணற்றில் காசிக்கு வந்ததிற்கு அடையாளமாக ஒருரூபாய் நாணயத்தைப் கட்டாயம் போட வேண்டுமாம் அப்போதான் காசியை காக்கும் பூதகணங்கள் நமது வரவை கணக்கில் ஏற்றுவார்களாம்…(பீ. கேர்புல் ஒருரூபாய் சில்லறையாக கொண்டு செல்ல வேண்டும்)
T3
அண்ணபூரணி, உணவளிக்கும் தெய்வம் உறைவிடம் காசிதான்.. மேலும், காசிவிஸ்வநாதர் கோவில், அழுக்கடைந்த தெருக்களில் உலவும் மாடுகள், குரங்குகள் அழுக்கான கங்கைநீர் ( கோலாபார்ம் அதிகமாம்.. மனிதகழிவில் இருப்பது ) கங்கையில் பயணிக்கும் பொழுது ( ஓட்டை போட்டாக இருந்தால் அவ்வளவுதான் சாமி.. ) ஆபத்து என ஒரு டேஞ்சரஸ் பட் அவசியம் சென்றுவர வேண்டிய இடமாக காசி என்னுள் பதிந்துள்ளது…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

குமுதம் வெர்சஸ் ஆனந்தவிகடன்…

குமுதம் வெர்சஸ் ஆனந்தவிகடன்…
kumudam Vs. Anantha Vikadan

சின்னவயதில் 90 பைசாவிற்கு குமுதம் விற்றபோது, சனிக்கிழமை தோறும் ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் எப்போடா குமுதம் வரும் படிக்கலாம்ன்னு… வெள்ளிதோறும் ஆனந்தவிகடன் 1.50 ரூபாய்க்கு விற்றாலும், கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அது அவ்வளவாக ஆர்வத்தை தூண்டாது என்றே தோனுகிறது.. ஏனெனில், அப்போதெல்லாம் சினிமா செய்திகள் அதிகமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் காலகட்டம். இண்டர்நெட், எப்எம், கேபிள், சாட்டிலைட்தொலைக்காட்கிகள், டிடி போன்றவைகள், வீடியோ போன்றவைகள் வராதிருந்த காலம்.. 80 களில் குமுதமும் ஆனந்தவிகடனும் தமிழகத்தில் கொடிகட்டி பறந்த நாட்கள்… குமுதத்தில் வெளிவரும் லைட்ஸ்ஆன் வினோத் பக்கங்களை படித்தே கிசுகிசுக்கள் பிரபலமாகும்.
t1
ஆனந்தவிகடன் அப்பொழுதே புதிதுபுதிதாக 3டி படம் அட்டையில் வெளியிடுவது, முழுஅட்டையில் தொடர்கதையின் கதாபாத்திரங்களை ஓவியங்களுடன் புகைப்படத்தை இணைத்து புரட்சிசெய்வது, ஆடையில்லாமல் முதலிரவில் பால் கொடுத்து (ஜோக்ஸ்..), சட்டசபையைப்பற்றி ஜோக் எழுதி ஆசிரியரை ஜெயிலுக்கு போகவைத்தது என பிரபலமாகி கொண்டிருந்தாலும், குமுதமோ ஒரு படி மேல போய் வாரம் தோறும் ஒவ்வொரு விஜபி களை பிடித்து அந்த வார குமுதத்தை தயார் செய்ய சொல்லி (சிலது நன்றாக இருக்கும் சிலது குடும்பத்தைப்பற்றியே புராணம் படித்ததாக ஞாபகம்) ஜல்லி அடிப்பார்கள். கொஞ்சம் செக்ஸ் வாசம் அதிகம் வீசுமாறு குமுதத்தை தயாரிப்பார்கள், ஆவியோ கொஞ்சம் பழங்காலம், கர்நாடக இசை போன்றவைகளுடன் காலந்தள்ளுவார்கள்.
விற்பனை எகிற அவ்வப்பொழுது பரபரப்பான டாப்பிக்கை எடுத்துவிட்டு இரண்டு வாரந்தரிகளுமே வேடிக்கைப் பார்ப்பார்கள்.
இந்த வாராந்தரிகள் வெளியிடும் சினிமா விமர்சனங்களால் பல படங்கள் ஊத்திக்கொண்டதும், ஊரே கொண்டாடியதும் தனித்தனிக்கதைகள்
t2
அப்பொழுது அவ்வளவாக போட்டி வாராந்தரிகள் இல்லாத காலம்… தினமலருடன், வாரமலர் இணைப்பு கொடுத்து அதற்காகவே தினமலர் பேப்பர் வாங்கும்படி செய்த காலகட்டம். திணமணியும், தனி இதழான திணமணிக்கதிரை இணைப்பாக 84 முதல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனந்தவிகடனும் சலைக்காமல் ஜோக்ஸ் (மதன் கைவண்ணம்) வெளியிட்டு வாசகர்கள் தன்பக்கம் இழுத்தாலும், அவர்கள் விற்பனை அவரவர்களுக்கே என்றே இருக்கும். இப்படி அப்படி காலம் போய், தற்சமயம் இரண்டு வாராந்தரிகளும் ஏகப்பட்ட துணை புத்தகங்கள் வெளியிட்டும், தனித்தனியாக தொடராக வந்தவைகளை அப்படியே புத்தகமாக்கி தனியாக விற்பதும் நடந்தேறிவருகிறது.
t3
வரலாற்றை ஒரு கை பார்த்த ஆனந்தவிகடன் இருக்க, சாதிசமயங்களை ஒரு கை பார்த்தது குமுதம். அங்கே ஐக்கி வாசுதேவ்ன்னா, இங்கே நித்தியானந்தா, ஆவிக்கு அஜித்னா, குமுதத்திற்க்கு விஜய், அப்புறம் ரெகுலராக ரஜினியைப் பற்றி டாபிக் 10 வாரத்திற்கு ஒருமுறை ஆவி குழும இதழ்களில் வந்துவிடும். அங்கே, கமலை வைத்து போனி… இப்போ மு.க. ஸ்டாலின் 10 வாரத்திற்கு ஒரு முறை ஆவியிலும், குமுவிலும் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறார்கள்.

அவ்வப்பொழுது, இலவசங்களாக சோப்பு, ஷாம்பு, தைலங்களையும் கொடுத்து கவரபார்த்தாலும விற்பனை எகிறாத நிலையே தொடர்கிறது. என்னசெய்வது இது இண்டர்நெட் காலம்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

அப்பாடக்கரா இந்த தாரு கபோதிகா…

அப்பாடக்கரா இந்த தாரு கபோதிகா…
APPATUCKER …
இந்த நாடு அதுவும் தமிழ் என்பதே ஒரு பழமையான குடி தோன்றாமுன் தோன்றி வளர்ந்தோங்கி வரும் ஒரு மொழி என்பது தமிழர்கள் அனைவரும் பெருமைபடத்தக்க விஷயமே… ஆனால், சமீப காலமாக ஒன்றிரண்டு நாவல்களை எழுதியும், சில கட்டுரைகளை எழுதியும் பிரபலமான சில எழுத்தாளர்கள் ( தாரு கபோதிகா போல் ) என்னமோ, எழுத்தாளர்கள்னா பெரிய கொம்பு முளைத்தவர்கள் மாதிரியும் மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது இவர்கள் எழுத்தில் புதிதாக கண்டுபிடித்தது போல் தற்பெருமைபிடித்தும், தான் எழுதினால் மற்றவர்கள் காசு கொட்ட வேண்டும் என செயல்படுவது கண்டு காதில் புஸ் என்று புகை வருகிறது.
t0
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி உண்மையான எழுத்தாளர்கள் தங்கள் எண்ணத்தில் தோன்றியதை எழுத்தில் வடித்து அதனை பிறர் பயன்படட்டும் என்றுதான் செயல்படுகிறார்கள்… பாரதியார் இல்லையா, திருவள்ளுவர் இல்லையா… புலவர்கள் இல்லையா, எழுத்தாளர்கள்னாவே செல்வம் சேர்ப்பது அவர்கள் நோக்கமாயிராது. தற்காலத்தில் கூட இணையத்தில் எவ்வளவு கட்டுரைகள், பிளாக்குகள், ஜோக்குகள், கதைகள், சொந்த அனுபவங்கள், விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்கள் என எந்தவிதமாக பிரதி உபகாரங்கள் எதுவும் எதிர்பாராமல் நேரம் காலம் பார்க்காமல் எழுதி வருகிறார்கள்…
t1
ஆனால், இந்த தாரு இருக்காரே, அவருடைய இணையதளத்தில் சமீபத்தில் ஒரு பதிவில் ஒரு ரசிகர் அவரை ரசித்து கடிதம் எழுதியிருக்கிறார்.. அதற்கு இவர் பதிலுக்கு என்னமோ சொல்லிவிட்டு ஆக்ஸிஸ் பேங்க் அக்கவுண்ட், ஐசிஐசிஐ பேங்க அக்கவுண்ட் இதுல பணம் போடறதுன்னா போடுங்கன்னு சொல்றாரு… அதே போல இவரை பார்க்க ஆசையுடன் வந்த ஒரு ஐடி தொழிலாளியை பகட்டுவீசும் நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்துவிட்டு எந்தவிதமான முன்னெச்சிரிக்கையும் இல்லாமல், 12000 பில்லை அவரை கட்ட சொல்ல பயந்துபோன நபர் எஸ்கேப்… அதற்கு இவர் அவரை கேவலமாக திட்டுவது… கொஞ்சம் காலம் முன்னால், விஜய் டிவியில் நீயா நானாவில் கருத்து சொல்ல அழைத்தற்கு காசுகொடுன்னு அவர்களை டார்ச்சர் செய்யப்போக இப்பொதெல்லாம் பிரபலங்களை அழைப்பதற்கே நீயாநானா அஞ்சுகிறது.. மற்றுமொரு நபரை இரவு 11.30 மணிக்கு ரொம்ப ரொம்ப கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்ட அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து இன்னொருவர் இணையத்தில் வெளியிடுகிறார். எதற்கெடுத்தாலும் தன்னுடைய நாவலைப்படித்தாயா? வெறும் இணையத்தை பார்த்து என்னை இப்படி திட்டுகிறார்கள் என சொல்கிறார்… உண்மையில், நடந்துகொள்வதை வைத்துதானே விமர்சனங்களும் வரும்… பிரபலங்கள் கண்டிப்பாக பிரச்சினை எழுப்பாமல் இருப்பதற்கு முயல வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பு.
t2
நிறைய பேர், அர்ப்பணிப்புடன் இந்த இணையத்தில் தமிழை வளர்க்கிறார்கள்.. உதரணத்திற்கு நிதர்சனம் போன்ற தளங்கள்.. இவர்களைவிட பலர் பலரும் பல துறைகளில் வெற்றிகொடி நாட்டியும் பிரமாதமான அறிவுடன் திகழ்வது உண்மை. ஒரு சிலருக்கு தான் சொல்லவேண்டிய விஷயத்தை எழுத்தில் சொல்லும் திறமை இருக்காது அவ்வளவுதான்… அதற்காக இப்படியா.. இந்த குறையை சுட்டிக்காட்டிய ஒரு பிரபல ஓவியர், ஆவியில் பேட்டியளித்ததையும் கேவலமாக திட்டுகிறார்… இவரைப்போலவே எல்லாரும் இருந்தால் தமிழ் சீக்கிரம் முக்காடு போட்டுவிடும்…
DISCLAIMER.. தமிழார்வம் காரணமாகஎழுதப்பட்ட கட்டுரை.. தனிப்பட்ட நபர் எவரையும் தவறாக சித்தரிக்க எழுதப்பட்டவை அல்ல இக்கட்டுரை குறித்து எந்தவிதமான எதிர்விளைவையும் ஏற்க முடியாது…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

பீஸ்சா….கிட்ட சிக்கிகிட்ட பக்கிகள்….

பீஸ்சா….கிட்ட சிக்கிகிட்ட பக்கிகள்….
PIZZA … HUTTING BY TEENS
சும்மா இருந்த சங்கை ஊதி ஊதிக் கெடுத்தாங்களாம்.. அதுபோலத்தான் நேற்று ஆனது. விடுமுறைநாள்… சாயங்காலம் ஆக ஆக பசங்க நச்சரிப்பு தாங்க முடியல… இன்றைக்கு பீஸ்சா வாங்கித்தந்தே ஆகனும்… சரி ரொம்ப நாளாகவே கேட்டுக்கிட்டே இருப்பதால், தவிர்க்க இயலவில்லை. இணையத்தில் ஆர்டர் செய்தால் 50 சதவீதம் தள்ளுபடின்னு பையன் சொல்ல, வேண்டாண்டா, இப்போ ஆர்டர் செய்தால் நாளைக்குத்தான் வரும்ன்னு பொன்னு சொல்ல ஒரே கலாட்டா, கடைசியில் நேரடியாகவே கடைக்கு போய் வாங்கிவந்துடலாம்ன்னு கிளம்பிட்டோம்.
t1
கடையில் நுழைய முடியாத அளவிற்கு டூவீலர்/போர் வீலர்களை கண்டபடி பார்க் செய்து, உள்ளே நுழைய வழிகண்டு பிடிப்பதே ஒரு பிரமம்மத்தனம் செய்யவேண்டி இருந்தது. உள்ளே போனதும், ஏற்கனவே அமர்ந்திருந்தவர்கள் யார் இது புதுசான்னு ஒர கண்ணால் பார்த்துட்டு தங்கள் வேலையை (சாப்பிடுவதுதான்) செய்கிறார்கள். குழு குழுவாக பெரும்பாலும் 30 வயதுக்குள் இருப்பவர்கள் அதிகம் உட்கார்ந்து டப்பா டப்பாவாக வரவழைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
t2
ஆர்டர் செய்ய சொல்லும் இளவயது நங்கை, கொடுத்த விளம்பர பேப்பரை தலைகீழாகப் படித்தும், நமக்கு ஏது பெஸ்ட்ன்னு கண்டுபிடிக்க முடியலை. அப்படி இப்படி தலையை திருப்பி யார் என்ன சாப்பிடுகிறார்கள் என பார்த்தும் பெயர் சொல்ல முடியல.. ஒரு வழியா, டபுள் நான்வெஜ் / டபுள் வெஜ் பீஸ்சாவும், சிக்கன் கால் 2 / கேக் வகைகளில் இரண்டும் ஆர்டர் செய்தார்கள்.. அதை சாப்பிடுவதற்கே தனியாக டிரையினிங் எடுக்கனும் போல… ஒரே சீஸ்.. மிளகாய்த்தூள் காம்பினேஷன் இல்லைனா சாப்பிடவே முடியாது போலிருக்கு… ஆனா, அதைத்தான் இந்த பக்கிகள் விரும்பி விரும்பி சாப்பிடுகிறார்கள்.. இதுல வேற… எல்லா அடிக் ஆகும் பழக்கமும் கெட்டது இல்லைன்னு போஸ்டர்…
t3
காத்திருந்தோம்.. காத்திருந்தோம் அரைமணிக்குமேல் தான் வருகிறது… வெளியே மழைச்சாரல் அடித்தாலும், உள்ளே ஏசி கும்னுஅடிக்குது… ஒருபக்கம் எல்இடியில் ஸ்போர்ட்ஸ் சானல் ஓடிக்கொண்டிருக்க யாருமே சட்டை செய்யவில்லை… அருகில் அமர்ந்திருந்த பேமிலி ( அம்மா / அப்பா / மகன் (10வயது)) ஒரே ஒரு பீஸ்சா வாங்கி பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.. இளவட்டங்கள் அதிலும் இளமங்கைகள் அதிகளவில் விரும்பி இந்த பதார்த்தத்தை வாங்கி சாப்பிடுகிறார்கள்… அடிக்கடி தமது கைப்பேசி காலக்ஸியில் போட்டோ வீடியோவை எடுத்துக்கொள்கிறார்கள். பசங்க வந்ததை சாப்பிட்டுட்டு அடுத்த ரவுண்டுக்கு ஆர்டர் செய்ய சென்று விட்டார்கள்… ஒருவழியா போதும்ன்னு முடிக்கிறப்ப கிட்டத்தட்ட 1200 ரூபா காலி…
வீட்ல சும்மா இருந்தாலே டிவியை பார்த்து நேரத்தை கடத்தியிருக்கலாம்… சும்மா இருந்த சங்கை ஊதி ஊதிக் கெடுத்தாங்களாம்.. அதுபோலத்தான் நேற்று ஆனது.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 3)

பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 3)
One Day at Bangalore … Part 3
நேற்று வேர்டுபிரஸ் காரங்களிடருந்து ஒரு பரிசு வந்தது.. பிளாக் ஆரம்பித்து சக்ஸஸ்புல்லா 2 வருடம் தாக்கு பிடித்தற்காக.. இந்தாங்க பிடிங்கன்னு சின்னதா டீ கப் சைஸில் ஒரு கப் அனுப்பப்பட்டது (டிஜிட்டலில்தான்)
மேலும், வா. மணிகண்டன் (கோபி பக்கம் செட்டில் @ பெங்களூர்) அவர்களின் http://www.nisaptham.com/ வலைப்பூவில் மனுஷன் சும்மா சுஜாதா கணக்காக பொளந்து கட்டுறாரு.. கிட்டத்தட்ட தினம்தினம் ஒரு பக்கம் படிக்க படிக்க ஜோராக இருக்குது நீங்களும் டிரை பண்னுங்க.. அதிலேயும் ஒரு பக்கத்தில் சின்னவீடு பெரியவீடு பற்றியும், கிள்ளு பாட்டி பற்றியும் எழுதியிருக்காரு பாருங்க.. பிரமாதம்…கவிதை… சரிசரி பெங்களுர் கதை என்னாச்சு…? காதில் விழுது… மக்களே..
t2
அங்கிட்டு இங்கிட்டு சும்மா கொஞ்சம் வாக் செய்ததில் கண்ணில் பட்டவர்கள் … ஒரிஜினல் விலைமாதர்கள்…தியேட்டார் வாசலிலும், ஒயின்ஷாப் வாசலிலும் அதிகப்படியான லிப்ஸ்டிக் உடன் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார்கள். வேடிக்கைப்பாத்துக் கொண்டே, ஒரு காம்ப்ளெக்ஸ் அடித்தளத்தில் புகுந்து மெயின்ரோட்டைத்தாண்டி ஒருவழியா மெஜஸ்டிக் உள்ள வந்தா பாதி பஸ்ஸ்டாண்டை இடித்துவிட்டு மெட்ரோ காரங்க வேலை பார்த்துக் கொண்டிருக்காங்க..
t1
சேட்டிலைட் பஸ்ஸ்டாண்ட் போக பஸ்பிடிக்க தேடிகண்டுபிடிச்சு பஸ்ஸை பிடிக்க போனா பஸ் கிளம்பிடுச்சு … சர்தான்னு ஓடிப்போய் ஏறிக்கொண்டோம்.. ஆனால், முன்னால் போன பஸ் (முன்னாடி கண்ணாடி போட்ட ஒரு ஊழியர் வந்து ஏதோ சொல்ல உடனே) சர்ன்னு பின்னால் வந்து ஸ்டேண்டிலேயே 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
t3
பஸ்கிளம்பி வெளியே வந்ததும் செம டிராபிக், ரோடு ஓரம் பிளாட்பார்மில் கூட்டம் கூட்டமா அரவாணிகள் எதற்காகவோ யாருக்காகவோ ஜீன்ஸ், மாடர்ன் டிரஸ்ஸில் (?) காத்திருக்காங்க, எப்படியோ தத்தளச்சு பஸ்ஸ்டாண்டுக்கு வரவே 1 மணிநேரம் ஆச்சு.. லால் பார்க் பஸ்ஸில் இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டோம். துர்கா பூஜையையொட்டி இருப்பதால் நகரமே ஆங்காங்கு சீரியல்பல்பு தோரணத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. பஸ்ஸ்டாண்டுக்கு வந்தவுடன் தான் தெரிந்தது.. தொலைதூர பேருந்துகள் எல்லாம் இரவு 9 மணிக்கு மேல்தான்.. 2 மணிநேரம் இருந்தது.. சரின்னு அங்கேயே சாப்பிட்டு சும்மா சேர்ல உட்காந்து ரெஸ்ட் எடுப்போம்ன்னு காத்திருந்தோம்.. அதற்குள், சேலம் போகும் பஸ்ஸின் கண்டக்டர், கையை பிடித்து இழுத்துட்டு போகாத குறையா, கட்டாயப்படுத்தி தன்னுடைய பஸ்ஸில் ஏற்றிக்கிட்டார். கிட்டத்தட்ட 30 இடத்திலாவது பேருந்தை நிறுத்தி லோக்கல் பயணிகளை ஏற்றி இறக்கி இம்சை அரசனாகவே மாறி எங்களை 6 ½ மணிநேரத்திற்கு அப்புறம் சேலத்தில் இறக்கிவிட்டார் மனுசன்.. அரைத்தூக்கத்தில் இருந்தாலும் வேகம்குறைவாலும் செம கடுப்பு என்னசெய்வது… அடப்போங்கப்பானு சேலத்தில் இருந்து கிளம்பிய அடுத்த அரைமணிநேரம் 4 பஸ்களை தவறவிட்டோம். நல்லவேளை, வேளாங்கண்ணிக்கு செல்லும் நெடுந்தொலைவு பேருந்து உள்ளே வரவும், சர்ன்னு நுழைந்து இடத்தை பிடித்துக் கொண்டோம், கண்டக்டர் டிக்கட் எல்லாம் போட்டு முடிச்சுட்டு அவரே டிரைவரானார், பஸ் வாயு வேகமாக மாறியது அடுத்து 45 நிமிடத்தில் நாமக்கல்லும், அடுத்த 1.30 மணி நேரத்தில் திருச்சியிலும் இறக்கிவிட்டு பறந்து போனார்கள்… வீட்டிற்கு வந்து 4.45 க்கு படுத்தோம்.. அடுத்த நாள் விடுமுறைநாளானாதால், பெங்களூர் உறவினர் காலை 11 மணியளவில் போன் செய்து சுகமாக போய்சேர்ந்தீர்களா என விசாரிக்கும் வரை உறக்கம் நீண்டது… ( முடிந்தது )

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 2)

பெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 2)
One day at Bangalore … Part 2
ராஜாராணி, நய்யாண்டி, அம்பிகாபதி (கொஞ்சம் பழசு), ஆரம்பம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஆல்இன்ஆல் அழகுராஜா என வரிசையாக படங்களைப் பார்த்தும்…. விமர்சனம் எழுதவில்லையே ஏன்… அவ்வளவு பிஸி… வீட்ல விசேஷங்க… ஆபிஸ்லே அதைவிட பிஸி … நடுவுல தீபாவளி வேற… அப்புறம் பேஸ்புக் அடிக் ஆக சில வாரங்கள் என கடந்து போய்ட்டுது…
t1
வீட்டைவிட்டு வெளியே வந்து 40அடி சிவன் கோயிலுக்கு போங்கன்னு ஒரு ஆட்டோவைப்பிடித்தோம், அவர் அந்த தெருவையே ஒரு சுற்றிவந்துவிட்டு ஒரு லோக்கல் கோயில்ல எறக்கிவிட்டு கறாராக 40 ரூவா வாங்கிகிட்டாரு.
நாங்க ஐஸ்ட் 0.25 கிமீ நடந்தால் நாங்க எங்க ஆட்டோ பிடித்தோமா அந்த இடமே வந்துடுச்சு.. சரின்னு மெட்ரோ ரயில் ஏறிப்பார்க்கனும்னு ஆசையை அடக்க முடியாமா.. உள்ளே போனாம் பயணிகளை விட செக்யூரிட்டிகளே அதிகம்.. கிட்டத்தட்ட பல இடங்கள்ல செக் செய்யுறாங்க பைகளை ஸ்கேன் செய்து அனுப்புறாங்க… பயணிக்க டோக்கன் தர்றாங்க அதை கண்டிப்பா வெளியில் வரும்போது பாதையில் உள்ள உண்டியலில் போட்டாதான் வழிதிறக்கும்.. ( காணாமல் போய்ட்டா என்ன செய்யறது?) மேலே போய் காத்திருந்தோம்.. சும்மா பிளாட்பார்ம் பார்க்க எட்டிப்பார்க்க போனா ஒரே விசில் சத்தம் தட தடன்னு 5 செக்யூரிட்டிங்க சுற்றி வளைக்கிறாங்க என்ன செய்றீங்கன்னு இந்தியில் ஒரே காச்மூச்… அப்படியே பம்பிக்கிட்டு ஒரமா சேர்ல உட்கார்ந்த நிமிடங்கள் துல்லியமாக டிரெய்ன் வந்து விட்டது. ஏறி உட்கார்ந்தா ஏஸி காத்து சில்லுன்னு தூக்குது… செம பாஸ்டா 5 நிமிடத்தில் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.
t2
இறங்கி நடந்தா, நாங்க போக வேண்டிய திசைக்கு எதிர் திசையில் ரொம்ப தூரம் வந்தபுறம்தான் தெரியுது.. மெட்ரோ ரெயில் காரங்க கீழே ரோடு ஓரத்தில் பூங்காங்கள், டீஷாப், காலரிகள், சுத்தமான டாய்லெட் என உருப்படியா செய்திருக்காங்க, நாங்க போனப்ப துணிகளாலயே செய்த பொம்மைகளை வைத்து ஒரு கொலு கண்காட்சி நடைபெற்றது.. சூப்பர் அரேஞ்மெண்ட் 10 ரூபாய்க்கு செம மெனக்கெடல் செய்திருக்கிறார்கள்..
t3
நேரம் போய்ட்டே இருந்ததாலே ஒரு இடத்தில் வந்து நின்னோம், அருகே ஒரு பிச்சைகாரியும் (எங்களைப்போலவே நின்று கொண்டு வருவோர் போவோரை மறித்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தார்) ஆட்டோவில் போகலாம் என ஆட்டோவிற்கு கைகாண்பித்தால் யாருமே நிறுத்தவில்லை… கொஞ்சநேரம் கழித்துதான் தெரிந்தது… நாங்களும் பிச்சைக்காகத்தான் கைகாட்டுகிறோம்ன்னு நினைத்துக்கொள்கிறார்கள். அப்புறம் என்ன, இடத்தை கொஞ்சம் மாற்ற கொஞ்ச தூரம் நடந்து போனாம்… அங்கே பார்த்தால் ரோட்டையே பிளாக் செய்து இருக்கிறார்கள்.. என்னடா சோதனை அப்படின்னு யோசிக்கும் பொழுதே சர்ன்னு ஒரு ஆட்டோ எங்களிடம் நின்று எங்கே போகனும்னு கேட்டது… அப்பாடா ஒரு ஆட்டோ சிக்கியதுன்னு ஏறி மெஜஸ்டிக் போகனும்பா என்றோம்.. கொஞ்சதூரம் போனதும் ஆட்டோகாரர் எங்களில் பேச்சிலிருந்து வெளியூர் பார்ட்டி என புரிந்து கொண்டு, வாங்களேன் மல்லையா வீட்டிற்கு கூட்டிபோகிறேன் ( யூபி குரூப் ) என சொல்லவும் தூக்கி வாரி போட்டது.. அதெல்லாம் வேணாம்… அட்லீஸ்ட் மெஜஸ்டிக் பஸ் போற ஸ்டாப்லாயாவது இறக்கிவிடுப்பா என கூறியும் கேட்காமல்.. அதெல்லாம் முடியாது எங்கூட வாங்க நான் ஒரு இடத்திற்கு கூட்டிபோகிறேன்னு.. ஒரு சந்து பொந்து தெருவில் வேகமாக சென்று ஒரு கடை முன்னால் நிறுத்தினார்.. இது தான் மைசூர்சில்க் தயாரிக்கும் கம்பெனி ரொம்ப சீப்.. நீங்க எதுவும் வாங்கவேணாம் ஐஸ்ட் பார்த்துவிட்டு வாங்க நான் கொஞ்சம் ஆயில் ஊத்திட்டு வரேன் போய்ட்டார். அய்யோடான்னு, கடைக்குள் புகுந்தால், நம்மூரில் 150 ரூபாய்க்கு விற்பதெல்லாம் அங்கே 900 ரேஞ்சுக்கு போட்டிருக்கிறார்கள்.. தலைசுற்றியது போன வேகத்தில் வெளியே வந்தோம் ( நல்லவேளை கடைக்காரர் ரவுடிகுரூப் நாங்க எதுவும் வாங்கமாட்டோம் என முடிவுசெய்து கண்டுகொள்ளவில்லை). அதே ஆட்டோகாரர் ஓடி வந்து என்னது எதுவும் வாங்கலையா…அப்படின்னு கோபமாக கத்தினார்… பின்னர் 100 ரூபா கொடுன்னு கிட்டத்தட்ட பிடுங்கிட்டு இப்படியே போனாக்கா (நடந்துதான் மெஜஸ்டிக் வந்துடும்ன்னு சொல்லிட்டு) எஸ்கேப் ஆனார்.

தலைசுற்றியதில் கொஞ்சதூரம் நடந்து வந்து டீகுடித்துக்கொண்டே விசாரித்தோம். அங்கே வரும் பேருந்தில் ஏறி 9 ரூபா கொடுத்து ஒரு வழியா மெஜஸ்டிக் வந்தோம்.. அப்பா, ஒரே டிராபிக் சாமி, ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விட வழியில்லை… எனத்தெரிந்தது. மெஜஸ்டிக் வந்தவுடன் கொஞ்சம் சூ/செருப்புகள் என்னசெய்வது பெங்களுரில் வாங்கியது என பெருமைஅடிக்க வேணாமா…? அங்கிட்டு இங்கிட்டு சும்மா கொஞ்சம் வாக் செய்ததில் கண்ணில் பட்டவர்கள் … யார் தெரியுமா? (பகுதி 3…)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu