குமுதம் வெர்சஸ் ஆனந்தவிகடன்…

குமுதம் வெர்சஸ் ஆனந்தவிகடன்…
kumudam Vs. Anantha Vikadan

சின்னவயதில் 90 பைசாவிற்கு குமுதம் விற்றபோது, சனிக்கிழமை தோறும் ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் எப்போடா குமுதம் வரும் படிக்கலாம்ன்னு… வெள்ளிதோறும் ஆனந்தவிகடன் 1.50 ரூபாய்க்கு விற்றாலும், கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அது அவ்வளவாக ஆர்வத்தை தூண்டாது என்றே தோனுகிறது.. ஏனெனில், அப்போதெல்லாம் சினிமா செய்திகள் அதிகமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் காலகட்டம். இண்டர்நெட், எப்எம், கேபிள், சாட்டிலைட்தொலைக்காட்கிகள், டிடி போன்றவைகள், வீடியோ போன்றவைகள் வராதிருந்த காலம்.. 80 களில் குமுதமும் ஆனந்தவிகடனும் தமிழகத்தில் கொடிகட்டி பறந்த நாட்கள்… குமுதத்தில் வெளிவரும் லைட்ஸ்ஆன் வினோத் பக்கங்களை படித்தே கிசுகிசுக்கள் பிரபலமாகும்.
t1
ஆனந்தவிகடன் அப்பொழுதே புதிதுபுதிதாக 3டி படம் அட்டையில் வெளியிடுவது, முழுஅட்டையில் தொடர்கதையின் கதாபாத்திரங்களை ஓவியங்களுடன் புகைப்படத்தை இணைத்து புரட்சிசெய்வது, ஆடையில்லாமல் முதலிரவில் பால் கொடுத்து (ஜோக்ஸ்..), சட்டசபையைப்பற்றி ஜோக் எழுதி ஆசிரியரை ஜெயிலுக்கு போகவைத்தது என பிரபலமாகி கொண்டிருந்தாலும், குமுதமோ ஒரு படி மேல போய் வாரம் தோறும் ஒவ்வொரு விஜபி களை பிடித்து அந்த வார குமுதத்தை தயார் செய்ய சொல்லி (சிலது நன்றாக இருக்கும் சிலது குடும்பத்தைப்பற்றியே புராணம் படித்ததாக ஞாபகம்) ஜல்லி அடிப்பார்கள். கொஞ்சம் செக்ஸ் வாசம் அதிகம் வீசுமாறு குமுதத்தை தயாரிப்பார்கள், ஆவியோ கொஞ்சம் பழங்காலம், கர்நாடக இசை போன்றவைகளுடன் காலந்தள்ளுவார்கள்.
விற்பனை எகிற அவ்வப்பொழுது பரபரப்பான டாப்பிக்கை எடுத்துவிட்டு இரண்டு வாரந்தரிகளுமே வேடிக்கைப் பார்ப்பார்கள்.
இந்த வாராந்தரிகள் வெளியிடும் சினிமா விமர்சனங்களால் பல படங்கள் ஊத்திக்கொண்டதும், ஊரே கொண்டாடியதும் தனித்தனிக்கதைகள்
t2
அப்பொழுது அவ்வளவாக போட்டி வாராந்தரிகள் இல்லாத காலம்… தினமலருடன், வாரமலர் இணைப்பு கொடுத்து அதற்காகவே தினமலர் பேப்பர் வாங்கும்படி செய்த காலகட்டம். திணமணியும், தனி இதழான திணமணிக்கதிரை இணைப்பாக 84 முதல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனந்தவிகடனும் சலைக்காமல் ஜோக்ஸ் (மதன் கைவண்ணம்) வெளியிட்டு வாசகர்கள் தன்பக்கம் இழுத்தாலும், அவர்கள் விற்பனை அவரவர்களுக்கே என்றே இருக்கும். இப்படி அப்படி காலம் போய், தற்சமயம் இரண்டு வாராந்தரிகளும் ஏகப்பட்ட துணை புத்தகங்கள் வெளியிட்டும், தனித்தனியாக தொடராக வந்தவைகளை அப்படியே புத்தகமாக்கி தனியாக விற்பதும் நடந்தேறிவருகிறது.
t3
வரலாற்றை ஒரு கை பார்த்த ஆனந்தவிகடன் இருக்க, சாதிசமயங்களை ஒரு கை பார்த்தது குமுதம். அங்கே ஐக்கி வாசுதேவ்ன்னா, இங்கே நித்தியானந்தா, ஆவிக்கு அஜித்னா, குமுதத்திற்க்கு விஜய், அப்புறம் ரெகுலராக ரஜினியைப் பற்றி டாபிக் 10 வாரத்திற்கு ஒருமுறை ஆவி குழும இதழ்களில் வந்துவிடும். அங்கே, கமலை வைத்து போனி… இப்போ மு.க. ஸ்டாலின் 10 வாரத்திற்கு ஒரு முறை ஆவியிலும், குமுவிலும் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறார்கள்.

அவ்வப்பொழுது, இலவசங்களாக சோப்பு, ஷாம்பு, தைலங்களையும் கொடுத்து கவரபார்த்தாலும விற்பனை எகிறாத நிலையே தொடர்கிறது. என்னசெய்வது இது இண்டர்நெட் காலம்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

One thought on “குமுதம் வெர்சஸ் ஆனந்தவிகடன்…

  1. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s