தூம் 3 … திரைவிமர்சனம்.
Dhoom 3 .. Tamil Film Review
படம் பார்க்க செல்லும்பொழுது அவசியம் இரண்டு காதுகளுக்கும் பொருந்துமாறு 2 பூக்களையாவது வாங்கி சென்று விடுங்கள். ஏனெனில், மும்பை நகரின் ஓட்டுவீடுகளின் மேல் ஆட்டோக்களில் போலீஸ் ஆபீஸர்கள் பறந்து வருவார்கள். சண்டை போடுவார்கள், பலே வில்லனை வீழ்த்திவிட்டு மோட்டார் பைக்கில் சிறிய சந்தில் புகுந்து சென்று விடுவார்கள். உறீரோ ஒருபடி மேலே, தெருவில் உள்ள இரண்டு பில்டிங் இடையே கட்டப்பட்ட கயிறில் 250 கிலோ எடையுள்ள பைக் ஒட்டிசென்று பறந்து விடுவார்.
சிக்காக்கோ நகரில் நடத்தும் சர்க்கஸ் ( உண்மையில் மேஜிக் செய்து காண்பிக்கிறார்கள், ஆனால் சர்க்கஸ் என படத்தில் கூறுகிறார்கள், தவறாக மொழிபெயர்த்திருப்பார்களோ)
நடத்தும் ஜாக்கிசெரப் கட்டவேண்டிய வங்கி பாக்கிக்காக மேஜிக் கூடாரத்தை காலிசெய்ய சொல்லும் வங்கி அதிகாரிகளின் முன்னிலையே தற்கொலை செய்துகொள்கிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சின்ன அமீர்கான், வஞ்சம் கொண்டு அந்த குறிப்பிட்ட பேங்கை மட்டும் மீண்டும் மீண்டும் கொள்ளை அடிக்கிறார். ( கொள்ளையை விவரமாக காண்பிக்கவில்லை, தப்பிப்பதை மட்டும்தான் )
தண்ணிகுடிக்கும் சிக்காக்கோ போலிஸ்க்கு உதவ மும்பையில் இருந்து அபிசேக் பச்சனும், ஒரு சிரிப்பு போலீசும் சிக்காக்கோ வருகிறார்கள். நல்லவேளை கதாநாயகி இவர்களை சுற்றாமல், அமீர்கானுடன் செட்டிலாகிவிடுகிறார். மேஜிக் ஷோவை தொடர்ந்து நடத்த ஆரம்பிக்கும் அமீர்கான், அபிஷேக்குடன் தொடர்பு கொண்டு கொள்ளையனை பற்றி தெரிவித்து, மேலும் விபரங்களை திரட்டி, மற்றுமொரு கொள்ளையில் ஈடுபட, சிக்காககோ போலீஸ், நீங்களும் உங்க கண்டுபிடிப்பும், போதும் என்று மும்பைக்கே திருப்பி அனுப்ப, இதனை வைராக்கியமாக ஏற்று, கொள்ளையர்களின் மர்மத்தை கண்டுபிடிக்க அமீரின் கூடாரத்தில் ஊடுவி, கதாநாயகி காத்ரினா கைப் உதவியுடன் காதலை விதைத்து, கொள்ளையர்களை (கவனிக்க கொள்ளையன் அல்ல கொள்ளையர்கள் ) பிரிக்க சூழ்ச்சிசெய்தும், மற்றுமொரு பேங்க் கொள்ளையை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பும் வழியில் வூவர் டேமில் மாட்டிக்கொண்டு கொள்ளையர்கள் உயிரை விடுகிறார்கள்.
அமீர்கான் தான் படத்தின் நாடி, சில இடங்களில் அவதார் படத்தில் வருவதைப்போன்று காதுகள் விடைத்து காட்சிகளில் தோன்றுகிறது. படம்முழுக்க பைக் ஸ்டண்ட், திடீரென பைக் தண்ணீரில் மூழ்கி படகுபோல் ஆவது, தேவைப்படும்பொழுது இரண்டு பைக்கை இணைத்து வானத்தில் பறப்பது, சிரிப்பு போலீஸ் லோக்கல் தாதாவிடம் மாட்டிக்கொள்ளும்பொழுது, ஆட்டோவில் பறந்து வந்து காப்பாற்றும் போலீஸ்ஆபிஸர் (டெலிபதி உண்டா) ( ?) போன்ற அதிசய காட்சிகள் நிறைந்தது. இருப்பினும், பிரம்மாண்டமான பொழுதுபோக்கு சித்திரமாக உருவாக்க படக்குழுவினர் பயங்கரமாக முயன்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
Month: திசெம்பர் 2013
ல்யாண சமையல் சாதம்.. திரைவிமர்சனம்
கல்யாண சமையல் சாதம்.. திரைவிமர்சனம்
Kalayana Samaiyal Sadam … Tamil Film Review
[ 150th Post … 2 Years Completed .. 66666 visitors …. 106 Coutries…of Blogging Your Wishes My pride.. ]
ஐடி புரெபைல்… வைத்து செம ஈசியாக ஒரு மாடர்ன் பெண்ணின் பெற்றோரை கன்வின்ஸ் செய்து ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமண நிச்சயித்த பிறகு மாப்பிள்ளைக்கு பெண்ணை திருப்திகரமாக செக்ஸ் வைத்துக்கொள்ள இயலுமா என சந்தேகம் எழ, நண்பர்களின் உதவியுடன் லேகியம் விற்பவர் முதல், றைடெக் டாக்டர் வரை நாடுகிறார். இதே மனக்குழப்பத்தில் இருப்பவரை பெண்ணின் அப்பா மோப்பம் பிடித்து, அறிவுரை வழங்கியும், கடைசி நேரத்தில் டாக்டரின் அறிவுரைப்படியும் படிப்படியாக கான்பிடென்ட் உருவாகிறது பிரசன்னாவிடம் ( மாப்பிள்ளை ).
டென்ஷனை குறைக்க மஞ்சள் பந்தை வைத்து அமுக்க சொல்ல, பீரோவில் இருந்த பந்து பாக்கெட்டில் இருந்து குட்டீஸ்கள் அள்ளிச்சென்று விளையாட, டென்ஷனாகும் காட்சிகள் பிரமாதம். அதன்பிறகு தான் பெண்ணின் விருப்பம் மற்றும் பிள்ளையின் விருப்பத்தின்படி நடந்து கொள்ள இயலாமல், பெற்றோரும் சுற்றத்தாரும் தன்னிச்சையாக திருமண வைபவங்களை திசைதிருப்புவதைக் கண்டு மணம் வெம்பி மணப்பெண் ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையை திட்டிவிட, மாப்பிள்ளையும் டென்ஷன் ஆகாமல், அதனை பாஸிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு திருமணத்தன்று இரவு பெண்ணை தனியே நண்பர்களின் உதவியுடன் தனியே அழைத்துச் சென்று தனக்கே தனக்காக ஒரு இரவு படகு பயணத்தில் பெண்ணின் மணத்தை சாந்தப்படுத்தி தன்வயப் படுத்திக்கொள்கிறார்.
முகூர்த்தம் அன்று காலை பெண்ணையும், மாப்பிள்ளையும் காணாமல் இரண்டு தரப்பினரும் அதனை மறைத்து எதிர் தரப்பினரை குறைகூற, இரண்டு தரப்பினரும் பிரச்சினையை வளர்த்துக் கொண்டிருக்க, பெண்னும் பிள்ளையும் கூலாக காரில் வந்து இறங்கி பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறார்கள்.
தற்கால வாழ்க்கை முறையில், திருமணம் ஒரு மாடர்ன் பெண் மற்றும் பையனின் வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக அரங்கேறுகிறது என்பதனை அனைத்து துணை நடிகர்களின் உதவியுடன் மிகச்சிறப்பாக டைரக்ட் செய்திருக்கிறார். அதிலும், திருமணத்தன்று படிப்படியாக பெண் காணாமல் போவதை திகலுடன் அமர்ந்து யாருடனோ ஓடிப்போக போகிறாள் என்பது போல் திரைக்கதை அமைத்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.
பெற்றோர்களாக நடித்திருப்பவர்களும், பிரசன்னாவின் நண்பர்களாக நடித்தவர்களும் பிரமாதமாக ஆக்ட் செதிருக்கிறார்கள். கதாநாயகியும், தன்னால் இயன்ற அளவிற்கு பிரசன்னாவுடன் இணைந்து ஈசிக்கொண்டு நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில், நமக்கே பெண் ஏன் இப்படி ஓவரா ஒட்டிக்கொள்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணோட பிரண்ட் பிடிக்கிறது அவ்வளவு கஷ்டம்ன்னு மாப்பிள்ளைக்கு பேஸ்புக் கோரிக்கையை ஏற்காமல் இழுக்கடித்து லெக்சர் கொடுக்கிறார் அழகான கதாநாயகி.. ஒரு நடுத்தரமான பொழுதுபோக்கு சித்திரம்…
மனைவின்னா, கொம்பா முளைத்திருக்கு?….சிரிங்க பாஸ்….
மனைவின்னா, கொம்பா முளைத்திருக்கு?….சிரிங்க பாஸ்….
Wife is not a Terror … Relax
நானும் ஆபிஸ்ல தீயா வேலை செய்யனும்னு தான் பாக்கறேன்.
ஆனா.. ஆபிஸ் எரிஞ்சிடுமேன்னுதான் பயமா இருக்கு…!!
————
ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்.. டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு ‘ஹலோ’ சொன்னான்.. ‘என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…’ ‘எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…’ ‘இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…’ ‘ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..’ ‘சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…’ ‘ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்… சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்… ‘என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட… நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க… கிரேட் மச்சி…’ என்றார்கள்… ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,’ எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது…?
….
மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : ஆமா…ஆமா….எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க…சொல்லுங்க…
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் ஷேவ் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.
……….
கடலை டிப்ஸ்….
ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ… எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..
பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்…
ஆண் : வாவ்… சேம் பிஞ்ச்…நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..
பெண் : ஹா ஹா… என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??
ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்… உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,
பெண் : ஸ்மார்ட்…. ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..
ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க…
பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??
ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.
பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..
ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..
(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )
………………….
நர்ஸ் : டாக்டர் அந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே?
மருத்துவர் : ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா…????
……………………
சிஸ்டர், அந்த நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தாச்சா?
அதற்கு அவசியம் ஏற்படவில்லை டாக்டர், என்னைப்
பார்த்தவுடன் மயக்கமாகிட்டார்..!
–
அதெப்படி..?
நான்தான் அவர் மாஜி மனைவி..!
……………..
“இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க மனைவிக்கு பேச்சே வராது…!”
“நீங்க இவ்வளவு கைராசியானவர்னு முன்னாலயே தெரியாமப் போச்சே டாக்டர்…!”
…………………………
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்
டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.
வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று ” டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற” என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான்.
மனைவி திரும்பி ” இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
உருப்படுமா……?
…………………………………….
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.. அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.. ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.. இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே
என்று பாய.. அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா…
என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.. உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை…
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ முடியும்…
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..
……………..
ஆக்கியவர்களுக்கும், பரிமாரியவர்களுக்கும் நன்றி .. சிவபார்க்கவி
தகராறு பண்ணாத இவன் வேறமாதிரி…..விமர்சனம்
தகராறு பண்ணாத இவன் வேறமாதிரி…..விமர்சனம்
Takararu and Evan Vera mathiri Tamil Film Review
முதலில் தகராறு… 4 ரவுடி + 1 பிக்பாக்கெட் மதுரையில் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறார்கள். அருள்நிதி திருடிவிட்டு ஓடும்பொழுது கதாநாயகி ஆக்ஸிடெண்ட் ஆகி லாரிக்கடியில் கிடப்பதைப் பார்த்து மக்களைக் கூட்டி காப்பாற்றுகிறார். கடைசியில் அதேபோல லாரிக்கடியில் சாகக்கிடக்கும் கதாநாயகியை காப்பாற்ற முடியாமல் தவிர்ப்பதுபோல் படம் முடிகிறது.
ரவுடிகளின் அலப்பறை அதிகம்தான் அதிலும் பீரோ புல்லிங் திருடுவது, இரண்டு வில்லன்களிடம் ரவுடித்தனத்தைப் போட்டுக் காண்பிப்பது அதனால் விளையும் பிரச்சினைகளைச் சந்திப்பது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே ஆட்டையபோட்டு பிரச்சினையை சந்திப்பது. ஆரம்பம் முதலே, கதாநாயகி கட்டை குரலில்பேசுவதும், திடீர் என சொர்னாக்காவாக மாறி நண்பர்களில் ஒருவரைப் போட்டுத்தள்ளுவது என்பது படத்தின் மிகப்பெரிய டிவிஸ்ட்.
அருள்நிதி வழக்கம்போல் வழியும் காரக்டர், சிகப்பு பேண்ட் மஞ்சள் சட்டைன்னு ராமராஜன் பாட்டு, கவுண்டமணியின் வசனம் மொபைலின் ரிங்டோன் என மக்களை கவர படாதபாடு படுகிறார்.
விறுவிறுப்பான திரைக்கதைதான், இருப்பினும் தொடர்ந்து நட்பிற்காக நண்பர்களின் இருக்கத்தை தொடர்ந்து காண்பிப்பது விரைவில் அலுப்பைத் தட்டுகிறது.
இவன் வேறமாதிரி….
எங்கேயும் எப்போதும் சரவணனின் படம் என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்க ஆரம்பித்தாலும், கொஞ்சம் திரைக்கதையில் தொய்வாகவே தென்படுகிறது. கதாநாயகி பார்க்க அழகாயிருந்தாலும், இப்படியாகவா அப்பாவி போல் நடந்து கொள்வார் என சந்தேகம் வருகிறது. இந்தகாலத்தில் இப்படி பஸ்ஸில் பார்த்தஉடனே கதாநாயகி காதலிக்கத் தோன்றுவது கொஞ்சம் ஓவர்.
உறீரோ, உறீரோயின் என இருவரும் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். வீட்டில் படிபடின்னு தொடர்ந்து டார்ச்சர் செய்தாலும், தன்போக்கிலேயே கதாநாயகி இருப்பதும் 18 அரியர்ஸ் (பி.இ.) வைத்திருப்பதும் கொஞ்சம் யதார்த்தம்.
சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பிரச்சினையில் மாணவர்களைப் போட்டு உதைப்பதில் சட்ட அமைச்ச்சருக்கும் தொடர்பிருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார் நாயகன், அமைச்சரின் தம்பி பெயிலில் வெளிவந்து ஒருவரை போட்டுத்தள்ளி ( டிராபிக் ராமசாமி மாதிரி ) முடித்தவுடன், அமைச்சரின் தம்பியைத் தூக்கி 13 மாடிக்கட்டடத்தின் ஒரு இடத்தில் ரூமில் அடைக்கிறார். இதனால், சட்டஅமைச்சரின் பதவிபறிபோய் ஜெயிலில் அடைத்தவுடன் அனாவசியமாக, கடத்தியவரை வெளியே விட, வெறிஅடைந்த தம்பி கடத்தியவனை டிரேஸ்பண்ண, காதலி மாட்டிக்கொள்ள, அலக்காக அதே மாடியில் திருஸ்டி பொம்மைக்கு பதிலாக கதாநாயகியை மாட்டிவைக்க, போலீஸ் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் அல்லாடி, கடைசியில் அமைச்சரையும், தம்பியையும் போட்டுத்தள்ள, போலிஸ் தான்தான் போட்டேன் என்று சொல்லி நாயகனை விடுவிக்கிறது தாங்க கதை.
இரண்டு படத்தையும், நாங்க பார்த்துட்டோம் நீங்க பார்க்கிறதுன்னா பாருங்க… இல்லைன்னா உங்க இஷ்டம்ண்ணா….
கவர்ச்சியாக அவர் மட்டுமே பார்க்கும்படி
கவர்ச்சியாக அவர் மட்டுமே பார்க்கும்படி
ஸ்ரீரங்கம் டூ சென்னை ….Srirangam to Chennai …. Part 2
சடார்ன்னு பயங்கரசத்தம் எழுந்தது, பக்கத்து தண்டவாளத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கிராஸ் செய்தததில் எழுந்த சத்தமே அது. திடீர்ன்னு அந்த சந்தத்தால் பெரும்பான்மையோர் திடுக்கிட்டது உண்மையே… கிராஸிங்கை பயன்படுத்தி பிரைவேட் வெண்டார்கள் இடம் மாறிக்கொள்கிறார்கள். இப்பொழுது புதியதாக திண்பண்டங்களும், விளையாட்டுப்பொருள்களும் வாங்க/விற்பனைக்கு கிடைக்கிறது. மேல்மருவத்தூரில் வண்டி நின்றவுடன் எங்கும் சிகப்புவண்ண ஆடைகளில் மனிதர்கள் முண்டியடித்து ஏறிக்கொள்கிறார்கள்.
இடைஇடையே மானே தேனேன்னு போட்டுக்கிறமாதிரி அனைத்து வயதிலும் ஆண்களும் பெண்களும் பலவித கலர் காம்பினேஷன்களில் நம்மை கடந்து போகிறார்கள். அதில் நமக்கு சிலரை மீண்டும் பார்க்கத் தூண்டவோ / மீண்டும் பார்க்காமலேயோ இருக்கவோ கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் நால்வர் சேர்ந்தால் கதை களைக்கட்டுகிறது. ஆண்கள் வெறுமையாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தம்மடிக்க எழுந்தால் இடம்போயிடுமோன்னு அங்கே இங்கே கிராக் பார்த்துக்கொண்டோ, தூங்கிக்கொண்டோ நேரம்போக்கிறார்கள். அருகே ஒருவர் எஸ்3 சாம்சங்கில் துப்பாக்கிகொண்டு எதிரிகளை சுட்டுவீழ்த்திக்கொண்டே வந்தார் ( உறல்க் மாதிரி எதிரி ). இளம்வயதினர் மட்டும் மொபைலை விடாமல் வேலைவாங்கிக்கொண்டே வருகிறார்கள்.
நடுவே அரவாணிகள் இருவரோ, மூவரோ எல்லாரிடம் வந்து உதவிக் கேட்கிறார்கள். ( இங்கே நிற்க… இதேபோல் பலமுறை பணிநிமித்தமாக சென்னை சென்றுவருவதுண்டு அதில் பலவருடங்களுக்கு முன்னால் ஒருமுறை செல்லும்போது ஏதோமூடில் அவர்களுக்கு பணம் வழங்கவில்லை. அப்பொழுது ஒரு அரவாணி திட்ட ஆரம்பித்து ரொம்பநேரம் திட்டிக்கொண்டே வந்தார். சென்னைக்கு சென்றால் பயங்கர அலுவலகப் பிரச்சினை.. அதிலிருந்து அரவாணிக்காகவே ரூ.10 தயாராகவே பாக்கெட்டில் வைத்துக் கொள்வது வழக்கமாயிருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு ரூ.10 கொடுத்தால் மனம் லோசாகிவிடுவதும் போகும்வேலை சுலபமாக ஆகிவிடுவதும் எனது மனதளவில் ஒரு ஏற்பாடு ஆகிவிட்டது ) பணத்தைப் பெற்றுக்கொண்டு காட்பிளஸ்யூ என்றோ, வாழ்க வளமுடன் என்றோ வாழ்த்துகிறார்கள். அதிலும், ஒருசிலர் தயக்கமாக பணம் கொடுக்க தயாராகும்பொழுது, சில அரவாணிகள் கவர்ச்சியாக அவர் மட்டுமே பார்க்கும்படி தனது உடலை காண்பிக்கிறார்கள் என கூறுவது சிலநேரங்களில் உண்மைதான் எனத் தெரிகிறது.
சென்னையில் இறங்கினால், வழக்கம்போல் ஆட்டோகாரர்களின் வாங்க வாங்க வரவேற்பு.. ஆனால், சில இடங்களை சொன்னால் அங்கே எல்லாம் வராது என்று கூறுவது தொடர்கிறது. மீட்டர் பொருத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட தொகையை கூறி பேரம் படிந்தே 90 சதவீத ஆட்டோக்கள் பயணிக்கின்றன. வழக்கம்போல், பேருந்துகளும் சாதரணம், எக்ஸ்பிரஸ், சொகுசு, ஏசி டவுன்பஸ் என பலவாறாக ஒரே இடத்திற்கு பலவித கட்டண விகிதத்தில் ஆட்களை திணித்துக்கொண்டு செல்கிறது. ( சுமார் 4 ரூபாய், 9 ரூபாய், 18 ரூபாய், 40 ரூபாய் என கட்டணம்). மாநகரப் பேருந்தில் ரூ.50க்கு டிக்கட் எடுத்துக்கொண்டு நாள்முழுவதும எங்கும்ஏறி எங்கும் இறங்கலாம் என திட்டம் இருக்கிறது போல, ஒருவர் 50 ரூபாய் டிக்கட் எடுத்தார்.
கடற்கரை சாலை, இரு ஓரங்களிலும், பிளக்ஸ்களில் அம்மா தொடர்ந்து வருகிறார். அதிலும், அனைத்து பிளக்ஸ்களையும் ஒன்றிரண்டு மந்திரிகளே வைத்திருக்கிறார்கள். கல்லூரிகள் விடும் நேரமாகியாகியதால், பசங்க பேருந்துகளில் ஜன்னல் ஓரம் உட்காந்து கொண்டு சுமார் 6 அல்லது 7 பசங்க பக்கவாட்டின் தகரத்தை ஒரே ஓசையுடன் ஒலிக்குமாறு தட்டிக்கொண்டே செல்கிறார்கள். பார்க்க நன்றாக இருந்தாலும், இதனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை (போலீஸ் உட்பட). காலேஜில் படிக்கும் மாணவிகள் ஒரு அணியாகவோ, அல்லது 4 பசங்க 4 பெண்கள் என குரூப்பாகவே கடற்கரைக்கு வருகிறார்கள், பேருந்துநிலையங்களில் அமர்ந்து லேட்டாப்பில் உள்ள திரைப்படம்/பாடல்களை பெண்டிரைவ்களிலும், மொபைல்களிலும் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களில் பலரும், சரியான அளவிலோ, ரெகுலர் உடையிலோ காணப்படவில்லை. உடலும் மெலிந்து சத்தான சாப்பாடு என்பது அவர்களுக்கு எட்டாதோ, அல்லது சமச்சீர் உணவை தவிர்த்து, பீட்சா பர்கர் பொறித்த உணவு என திண்பண்டகளையே மெயின் உணவாகவே உண்டு வந்திருப்பார்களோ என சந்தேகம் எழுகிறது.
தனியார் எல்கேஜி கிண்டர் கார்டன் கூட டை, கழுத்தில் ஐடி, நீட்டான டிரஸ்கோட் என இருக்கையில், இங்கே மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பலரும் அழுக்கான, ஒழுங்கற்ற உடைகளையும், ஒரு ஐடி கார்டுகூட கழுத்தில் அணியாமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல், தான்தோன்றித்தனமாகவே கல்லூரி மாணவர்களும்/பணியாளர்களும் நம்மை கிராஸ் செய்து போகிறார்கள். (… Part 3)
ஸ்ரீரங்கம் டூ சென்னை …. பகுதி 1
ஸ்ரீரங்கம் டூ சென்னை ….
Srirangam to Chennai …. Part 1
காலை வழக்கத்தைவிட மேகம் மூட்டமாக இருக்கும்போதே, காலை 6.20க்கே திருவரங்கம் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன். செம கூட்டம், அதிலும் மேல்மருவத்தூரில் ஏதோ விஷேசம் போலிருக்கிறது ஆண்களும், பெண்களும் சிவப்புஉடையுடன் கும்பல் கும்பலாக வந்தவண்ணமிருந்தனர். ஆங்காங்கே நாமம் போட்ட தாத்தாக்களும், மாமிகளும் கூட்டத்திலிருந்தனர். ரயில் நிலையத்தில் உள்ளே, சூடாகவும் தரமாகவும் ( ரயில் இன்ஜின் டிரைவர்களே வண்டியில் இருந்து குதித்து டிபன் வாங்கிகொண்டு மீண்டும் ஓடிப்போய் ரயிலில் ஏறிக்கொள்வார்கள் ) விலை குறைவாகவும் 3 இட்லி 1 வடை ரூ.15 என்ற ரேஞ்சில் இருக்கும். நானும் காலை உணவிற்காக வாங்கிக்கொண்டு (தமிழ் இந்துவுடன்) காத்திருந்தேன். நெட் மூலம் ரிசர்வ் செய்திருந்தால் எஸ்எம்எஸ் மூலம் வரப்பெற்றதை பார்த்து டி3 கோச் நிற்கும் இடத்தில் காத்திருந்தேன்.
ரயிலும் சரியான நேரத்திற்கு வந்தது. ஓடிப்போய் எனது சீட்டைப் பார்த்தால் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். சரி எஸ்எம்எஸ்ஸை சரிபார்க்கலாம் எனஎடுத்து பார்த்தால் டி13 கோச் எனப் போட்டிருந்தது. ஆகா, சிக்கிட்டோம்டான்னு, இறங்கி ஓடுனேன் ஓடுனேன் கடைசியில் இருந்தது. நடுவில் பல பெட்டிகள் எஸ்1 எஸ்2 என இணைத்திருந்தனர். டி10 வரும்பொழுதே வண்டி நகர ஆரம்பிக்க, ஜெர்க் ஆகி கொஞ்சம் வேகமாக ஓடி ஒருவழியாக டி12ல் ஏறி டி13க்கு சென்றால், அப்பவும் 101 சீட்டில் யாரோ உட்கார்ந்திருந்தார்கள் என்னடா வம்பு இன்றைக்குன்னு நினைத்து சார் இது ரிசர்வ் செய்திருக்கிறேன் என கூறியவுடன் அந்தநபர் எழுந்து கொண்டார். அப்புறம்தான் தெரிந்தது 100ல் ஒரு குண்டான கணவானும், 102ல் ஒரு செம குண்டான பெண்னும் அமர்ந்திருந்தார்கள்.. கொஞ்சம் கூட இடம் தரவில்லை எப்படியோ சமாளித்து பார்த்தும் முடியல சாமி… அப்படி ஒரு நெருக்கடி தருகிறார்கள் இருபுறமும். அரியலூர் வந்தவுடன், குண்டு ஆசாமி இறங்கிக் கொண்டார். அப்பாடா பிரீன்னு அடுத்த 45 நிமிடத்தில் விருத்தாசலம் வந்தவுடன் பார்த்தால், அதைவிட குண்டாக ஏறி அருகே அமர்ந்தார் பாருங்கள்.. ஒரே இடிதாங்கல்தான்….
இந்து பேப்பர் படித்துவிட்டு சுற்றுக்கு விட்டதுதான் எக்மோரில் இறங்கும்போது கசங்கி கிழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது. வழியில் ரயில் பணியாளர்கள் 50 முறையாவது காபி குடிக்கவோ, சம்சா சாப்பிடவோ கூவிக்கொண்டே இருக்கிறார்கள். இதைத்தவிர பிரைவேட் வெண்டார்கள் கடலை, சுண்டல், வாழைப்பழம், பேணா, பொம்மை என சகலமும் விற்பனை செய்து வருகிறார்கள். டிடிஆர் வந்து செக் செய்யும் பொழுது, மொபைலை காண்பித்தால், உடனே வேண்டாவெறுப்பாக பார்த்தும் பார்க்கமலும் திருப்பிக் கொடுத்தார்.
பயணிகளை நோட்டமிட்டதில், பெரும்பாலும் தங்கள் அலுவல்/பிஸினஸ் விஷயமாகவோ, வயதானவர்கள் தங்கள் பெண்னோ/பையன் வீட்டிற்கோ செல்வது தெரிகிறது. குழந்தைகள் தங்கள் பாட்டி/தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பிசெல்வது தெரிகிறது. ரயில் அதிகமாக இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருப்பதாலும், படுகேவலாமாக பராமரிக்கப்படுகிறது. ஒரே அழுக்கு, அதுவும் டாய்லெட் படுமோசம். ஆனாலும், ஏழைஎளியவர்களுக்கு பயணிக்க இந்த ரயிலை விட்டால் வேற வழியில்லை.. விழுப்புரம்த்தில் கும்பலாக இறங்கி சாப்பிட தேவையானவைகளை வேட்டையாடுவதுபோல் சேகரித்துக் கொள்கிறார்கள்.
திண்டிவணம் தாண்டியதும் வண்டி மெதுவாக பயணித்து ஒரு இடத்தில் நின்றுவிட்டது.. பயணிகள் அயர்ச்சியுடன் காத்திருக்க சடார்ன்னு பயங்கர சத்தம்… ஒருநிமிடம் பயணிகள் அதிர்ச்சியுடன் பார்க்க.. ( பாகம் 2.. தொடரும்)
தமிழ்லே திட்டனும்னா இப்படித்திட்டுங்க !
தமிழ்லே திட்டனும்னா இப்படித்திட்டுங்க !
scroll in Tamil
பேச்சு வழக்கில் உள்ள அந்தக்காலத்திய டீஸன்டான தமிழ்த் திட்டுக்கள் உங்கள் பார்வைக்கு.
1. அழிஞ்சு போவானே
2. ஆனை ஆடிப்பானே
3. உன்னை முனி அடிக்காதோ
4. ஊரெல்லாம் நக்கிறவனுக்கு இது கசக்குதோ
5. எட முடிறவானே
6. குறுக்காலை முறிவானே
7. கொள்ளையிலை போவானே
8. கொள்ளைநோய் பிடிக்குமடா
9. கோட்டை முனியப்பர் உன் கழுத்தைத் திருகாரோ
10. சிதறிப்போவானே
11. சுடலைக்குப் போவானே
12. தாயைக்கொல்லி மொட்டையா
13. தாலியைக் கட்டுவானே
14. நரகத்து முள்ளு
15. நாயிலும் கேடுகெட்ட நாயே
16. நாசமாய்ப் போவானே
17. பாழ்பட்டுப் போவானே
18. பாடையிலே போவானே
19. பேய் அடிப்பானே
20. போக்கணங்கெட்ட போக்கிரியே
21. முழுவியளத்துக் ஆகாத மூதேவி
22. முறிஞ்சு போவானே
23. மொக்கு மூதேசி
24. பரதேசி
25. தண்டச் சோறு
26. காடேறி
27. புழுக்கையன்
28. கந்தறுந்த காவடி
29. வேசை மோனே
30. தெருப்பொறுக்கி
31. தூங்குமூஞ்சி
32. சுடலைமாடன்
33. பச்சோந்தி
34. அம்மாள் அடிப்பானே
35. இடிவிழுந்து போவானே
36. உன்னைப் பேய் அடிக்காதோ
37. களிசறை நாயே
38. கட்டையிலை போறவனே
39. குறுக்காலை போவானே
40. கொள்ளை கொண்டு போகாதோ
41. கோதாரியிலை போவானே
42. சீரழிஞ்சு போனவனே
43. தண்டல் சோறு தின்னி
44. தாலி அறுப்பானே
45. தாயைத்தின்னி
46. நரகத்துக்கு போவானே
47. பாயிலைக் கிடந்து அழுந்தப் போறாய்
48. நாகந்தீண்டிச் சாகானோ
49. பாம்பு கொத்திச் சாகானோ
50. பாழ்பட்ட பாவியே
51. போக்கிரி நாயே
52. போக்கறுந்து போவானே
53. முனி அடிக்காதோ
54. மூச்சுத் திணறிச் சாகானோ
55. எரிஞ்ச குறங்கொள்ளி
56. ஓட்டுண்ணி
57. கொள்ளிவாய்ப் பேய்
58. வீடு தூங்கி
59. வம்பிலை பிறந்தவனே
60. கருங்காலிக் கட்டை
61. வேசை மோனே
மேற்கண்டவைகள் ஆண்பாலரையே குறிப்பனவாக உள்ளன. பெண்பாலரைக் குறிக்கும்போது, சொல்லின் கடைசி எழுத்தை மாற்றியமைத்து வாசிக்கவும். உதாரணமாக ன என்ற எழுத்துக்கு ள யும், டா என்ற எழுத்துக்கு டி யும் சேர்க்கவும்.
.. நன்றி. கலைவளன் சிசு. நாகேந்திரன்@ஆஸ்திரேலியா
மனைவி பெட்ரூமில் நுழைய…4 ஜோடி கால்கள்
ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு மறு நாள் காலை வர வேண்டிய மனைவி இரவிலேயே வந்துவிடுகிறாள் . வீட்டு கதவை திறந்து பெட்ரூம் விளக்கை போட்டதும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்வைக்கு அடியில் இரண்டு ஜோடி கால்கள் . உருட்டு கட்டையை எடுத்து இரண்டு பேரையும் சாத்து சாத்து என்று சாத்தி தள்ளுகிறாள். நிதானமாக சமையல் கட்டுக்கு போனால் அங்கே அவள் கணவன் அமர்ந்து பால் குடித்து கொண்டிருக்கிறான் … ” உங்க அப்பாவும் அம்மாவும் ஊரிலேருந்து திடீர்ன்னு வந்துருக்காங்க – நம்ம பெட் ரூம்ல தான் படுக்க வச்சிருக்கேன்”…..
இது கொஞ்சம் நம்ம நெஞ்சநக்கிற விஷயம்தான்….
• இன்று நம்வீடுகள் பெரியதாக இருக்கின்றன ஆனால், உறவுகளைத் தொலைத்து குடும்பங்கள் சிறியதாகி விட்டன.
• வசதிகள் பெருகிவிட்டன, ஆனால் எதையும் அனுபவகிகத்தான் நமக்கு நேரம் இல்லை.
• சிந்தனை விரிந்து விட்டதாகச் சொல்கிறோம். ஆனால், தவறான முடிவுகளையே எடுக்கிறோம்.
• ஏராளமான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் ஆரோக்கியத்தைத் தொலைத்து விட்டோம்.
• நமது சொத்து பல மடங்காகப் பெருகியிருக்கிறது. ஆனால் வாழ்க்கையின் மதிப்பு குறைந்திருந்க்கிறது.
• எப்படி பிழைப்பது என்பதைக் கற்றுக் கொண்டோம். ஆனால், எது வாழ்க்கை என்று தெரியவில்லை.
• நமது ஆயுள் கூடியிருக்கிறது, ஆனால் வாழ்வின் தரம் குறைந்துவிட்டது.
• தாறுமாறாக செலவழிக்கிறோம். கொஞ்சமாகவே சிரிக்கிறோம். எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது, சீக்கிரமே களைத்துப் போகிறோம். கொஞ்சமாகப் படிக்கிறோம், நிறை நேரம் டி.வி. பார்க்கிறோம். வழிபடும் நேரத்திலும் சுயநல வேண்டுதல்கள்.
• நிறைய பொருட்களை வாங்குகிறோம், ஆனால் அவற்றை கொஞ்சமாகவே அனுபவிக்கிறோம்.
• நிலவுக்கு சென்று வரும் அற்புதத்தை சாதித்து விட்டோம், ஆனால் பக்கத்து வீட்டுக்கு புதிதாகக் குடிவந்தவருடன் நேசம் காட்ட மறந்து விட்டோம்.
• விண்வெளியை வசப்படுத்தி விட்டோம், ஆனால் நம் மனவெளி நம் வசம் இல்லை.
• தறிகெட்ட வேகத்தில் எதையும் செய்வது சாத்தியமாகிறது, ஆனால் காத்திருக்கும் பொறுமைதான் இல்லை.
• வருமானம் பெருகிவிட்டது, ஆனால் வாழ்க்கையில் அறம் குறைந்துவிட்டது,
• துரித உணவு சாப்பிடுகிறோம். அது மெதுவாக செரிக்கிறது உயர்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் குறுகிய மனத்தோடு வாழ்கிறார்கள்.
… எங்கோயோ படித்தது