ஸ்ரீரங்கம் டூ சென்னை ….
Srirangam to Chennai …. Part 1
காலை வழக்கத்தைவிட மேகம் மூட்டமாக இருக்கும்போதே, காலை 6.20க்கே திருவரங்கம் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன். செம கூட்டம், அதிலும் மேல்மருவத்தூரில் ஏதோ விஷேசம் போலிருக்கிறது ஆண்களும், பெண்களும் சிவப்புஉடையுடன் கும்பல் கும்பலாக வந்தவண்ணமிருந்தனர். ஆங்காங்கே நாமம் போட்ட தாத்தாக்களும், மாமிகளும் கூட்டத்திலிருந்தனர். ரயில் நிலையத்தில் உள்ளே, சூடாகவும் தரமாகவும் ( ரயில் இன்ஜின் டிரைவர்களே வண்டியில் இருந்து குதித்து டிபன் வாங்கிகொண்டு மீண்டும் ஓடிப்போய் ரயிலில் ஏறிக்கொள்வார்கள் ) விலை குறைவாகவும் 3 இட்லி 1 வடை ரூ.15 என்ற ரேஞ்சில் இருக்கும். நானும் காலை உணவிற்காக வாங்கிக்கொண்டு (தமிழ் இந்துவுடன்) காத்திருந்தேன். நெட் மூலம் ரிசர்வ் செய்திருந்தால் எஸ்எம்எஸ் மூலம் வரப்பெற்றதை பார்த்து டி3 கோச் நிற்கும் இடத்தில் காத்திருந்தேன்.
ரயிலும் சரியான நேரத்திற்கு வந்தது. ஓடிப்போய் எனது சீட்டைப் பார்த்தால் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். சரி எஸ்எம்எஸ்ஸை சரிபார்க்கலாம் எனஎடுத்து பார்த்தால் டி13 கோச் எனப் போட்டிருந்தது. ஆகா, சிக்கிட்டோம்டான்னு, இறங்கி ஓடுனேன் ஓடுனேன் கடைசியில் இருந்தது. நடுவில் பல பெட்டிகள் எஸ்1 எஸ்2 என இணைத்திருந்தனர். டி10 வரும்பொழுதே வண்டி நகர ஆரம்பிக்க, ஜெர்க் ஆகி கொஞ்சம் வேகமாக ஓடி ஒருவழியாக டி12ல் ஏறி டி13க்கு சென்றால், அப்பவும் 101 சீட்டில் யாரோ உட்கார்ந்திருந்தார்கள் என்னடா வம்பு இன்றைக்குன்னு நினைத்து சார் இது ரிசர்வ் செய்திருக்கிறேன் என கூறியவுடன் அந்தநபர் எழுந்து கொண்டார். அப்புறம்தான் தெரிந்தது 100ல் ஒரு குண்டான கணவானும், 102ல் ஒரு செம குண்டான பெண்னும் அமர்ந்திருந்தார்கள்.. கொஞ்சம் கூட இடம் தரவில்லை எப்படியோ சமாளித்து பார்த்தும் முடியல சாமி… அப்படி ஒரு நெருக்கடி தருகிறார்கள் இருபுறமும். அரியலூர் வந்தவுடன், குண்டு ஆசாமி இறங்கிக் கொண்டார். அப்பாடா பிரீன்னு அடுத்த 45 நிமிடத்தில் விருத்தாசலம் வந்தவுடன் பார்த்தால், அதைவிட குண்டாக ஏறி அருகே அமர்ந்தார் பாருங்கள்.. ஒரே இடிதாங்கல்தான்….
இந்து பேப்பர் படித்துவிட்டு சுற்றுக்கு விட்டதுதான் எக்மோரில் இறங்கும்போது கசங்கி கிழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது. வழியில் ரயில் பணியாளர்கள் 50 முறையாவது காபி குடிக்கவோ, சம்சா சாப்பிடவோ கூவிக்கொண்டே இருக்கிறார்கள். இதைத்தவிர பிரைவேட் வெண்டார்கள் கடலை, சுண்டல், வாழைப்பழம், பேணா, பொம்மை என சகலமும் விற்பனை செய்து வருகிறார்கள். டிடிஆர் வந்து செக் செய்யும் பொழுது, மொபைலை காண்பித்தால், உடனே வேண்டாவெறுப்பாக பார்த்தும் பார்க்கமலும் திருப்பிக் கொடுத்தார்.
பயணிகளை நோட்டமிட்டதில், பெரும்பாலும் தங்கள் அலுவல்/பிஸினஸ் விஷயமாகவோ, வயதானவர்கள் தங்கள் பெண்னோ/பையன் வீட்டிற்கோ செல்வது தெரிகிறது. குழந்தைகள் தங்கள் பாட்டி/தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பிசெல்வது தெரிகிறது. ரயில் அதிகமாக இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருப்பதாலும், படுகேவலாமாக பராமரிக்கப்படுகிறது. ஒரே அழுக்கு, அதுவும் டாய்லெட் படுமோசம். ஆனாலும், ஏழைஎளியவர்களுக்கு பயணிக்க இந்த ரயிலை விட்டால் வேற வழியில்லை.. விழுப்புரம்த்தில் கும்பலாக இறங்கி சாப்பிட தேவையானவைகளை வேட்டையாடுவதுபோல் சேகரித்துக் கொள்கிறார்கள்.
திண்டிவணம் தாண்டியதும் வண்டி மெதுவாக பயணித்து ஒரு இடத்தில் நின்றுவிட்டது.. பயணிகள் அயர்ச்சியுடன் காத்திருக்க சடார்ன்னு பயங்கர சத்தம்… ஒருநிமிடம் பயணிகள் அதிர்ச்சியுடன் பார்க்க.. ( பாகம் 2.. தொடரும்)
தொடர்கின்றேன்.
ஒரு சில எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள்.
எ.கா: பேணா = பேனா
Thanks. Madam…
sivaparkavi