கவர்ச்சியாக அவர் மட்டுமே பார்க்கும்படி

கவர்ச்சியாக அவர் மட்டுமே பார்க்கும்படி
ஸ்ரீரங்கம் டூ சென்னை ….Srirangam to Chennai …. Part 2

சடார்ன்னு பயங்கரசத்தம் எழுந்தது, பக்கத்து தண்டவாளத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கிராஸ் செய்தததில் எழுந்த சத்தமே அது. திடீர்ன்னு அந்த சந்தத்தால் பெரும்பான்மையோர் திடுக்கிட்டது உண்மையே… கிராஸிங்கை பயன்படுத்தி பிரைவேட் வெண்டார்கள் இடம் மாறிக்கொள்கிறார்கள். இப்பொழுது புதியதாக திண்பண்டங்களும், விளையாட்டுப்பொருள்களும் வாங்க/விற்பனைக்கு கிடைக்கிறது. மேல்மருவத்தூரில் வண்டி நின்றவுடன் எங்கும் சிகப்புவண்ண ஆடைகளில் மனிதர்கள் முண்டியடித்து ஏறிக்கொள்கிறார்கள்.
t1
இடைஇடையே மானே தேனேன்னு போட்டுக்கிறமாதிரி அனைத்து வயதிலும் ஆண்களும் பெண்களும் பலவித கலர் காம்பினேஷன்களில் நம்மை கடந்து போகிறார்கள். அதில் நமக்கு சிலரை மீண்டும் பார்க்கத் தூண்டவோ / மீண்டும் பார்க்காமலேயோ இருக்கவோ கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் நால்வர் சேர்ந்தால் கதை களைக்கட்டுகிறது. ஆண்கள் வெறுமையாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தம்மடிக்க எழுந்தால் இடம்போயிடுமோன்னு அங்கே இங்கே கிராக் பார்த்துக்கொண்டோ, தூங்கிக்கொண்டோ நேரம்போக்கிறார்கள். அருகே ஒருவர் எஸ்3 சாம்சங்கில் துப்பாக்கிகொண்டு எதிரிகளை சுட்டுவீழ்த்திக்கொண்டே வந்தார் ( உறல்க் மாதிரி எதிரி ). இளம்வயதினர் மட்டும் மொபைலை விடாமல் வேலைவாங்கிக்கொண்டே வருகிறார்கள்.
t2
நடுவே அரவாணிகள் இருவரோ, மூவரோ எல்லாரிடம் வந்து உதவிக் கேட்கிறார்கள். ( இங்கே நிற்க… இதேபோல் பலமுறை பணிநிமித்தமாக சென்னை சென்றுவருவதுண்டு அதில் பலவருடங்களுக்கு முன்னால் ஒருமுறை செல்லும்போது ஏதோமூடில் அவர்களுக்கு பணம் வழங்கவில்லை. அப்பொழுது ஒரு அரவாணி திட்ட ஆரம்பித்து ரொம்பநேரம் திட்டிக்கொண்டே வந்தார். சென்னைக்கு சென்றால் பயங்கர அலுவலகப் பிரச்சினை.. அதிலிருந்து அரவாணிக்காகவே ரூ.10 தயாராகவே பாக்கெட்டில் வைத்துக் கொள்வது வழக்கமாயிருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு ரூ.10 கொடுத்தால் மனம் லோசாகிவிடுவதும் போகும்வேலை சுலபமாக ஆகிவிடுவதும் எனது மனதளவில் ஒரு ஏற்பாடு ஆகிவிட்டது ) பணத்தைப் பெற்றுக்கொண்டு காட்பிளஸ்யூ என்றோ, வாழ்க வளமுடன் என்றோ வாழ்த்துகிறார்கள். அதிலும், ஒருசிலர் தயக்கமாக பணம் கொடுக்க தயாராகும்பொழுது, சில அரவாணிகள் கவர்ச்சியாக அவர் மட்டுமே பார்க்கும்படி தனது உடலை காண்பிக்கிறார்கள் என கூறுவது சிலநேரங்களில் உண்மைதான் எனத் தெரிகிறது.
சென்னையில் இறங்கினால், வழக்கம்போல் ஆட்டோகாரர்களின் வாங்க வாங்க வரவேற்பு.. ஆனால், சில இடங்களை சொன்னால் அங்கே எல்லாம் வராது என்று கூறுவது தொடர்கிறது. மீட்டர் பொருத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட தொகையை கூறி பேரம் படிந்தே 90 சதவீத ஆட்டோக்கள் பயணிக்கின்றன. வழக்கம்போல், பேருந்துகளும் சாதரணம், எக்ஸ்பிரஸ், சொகுசு, ஏசி டவுன்பஸ் என பலவாறாக ஒரே இடத்திற்கு பலவித கட்டண விகிதத்தில் ஆட்களை திணித்துக்கொண்டு செல்கிறது. ( சுமார் 4 ரூபாய், 9 ரூபாய், 18 ரூபாய், 40 ரூபாய் என கட்டணம்). மாநகரப் பேருந்தில் ரூ.50க்கு டிக்கட் எடுத்துக்கொண்டு நாள்முழுவதும எங்கும்ஏறி எங்கும் இறங்கலாம் என திட்டம் இருக்கிறது போல, ஒருவர் 50 ரூபாய் டிக்கட் எடுத்தார்.
கடற்கரை சாலை, இரு ஓரங்களிலும், பிளக்ஸ்களில் அம்மா தொடர்ந்து வருகிறார். அதிலும், அனைத்து பிளக்ஸ்களையும் ஒன்றிரண்டு மந்திரிகளே வைத்திருக்கிறார்கள். கல்லூரிகள் விடும் நேரமாகியாகியதால், பசங்க பேருந்துகளில் ஜன்னல் ஓரம் உட்காந்து கொண்டு சுமார் 6 அல்லது 7 பசங்க பக்கவாட்டின் தகரத்தை ஒரே ஓசையுடன் ஒலிக்குமாறு தட்டிக்கொண்டே செல்கிறார்கள். பார்க்க நன்றாக இருந்தாலும், இதனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை (போலீஸ் உட்பட). காலேஜில் படிக்கும் மாணவிகள் ஒரு அணியாகவோ, அல்லது 4 பசங்க 4 பெண்கள் என குரூப்பாகவே கடற்கரைக்கு வருகிறார்கள், பேருந்துநிலையங்களில் அமர்ந்து லேட்டாப்பில் உள்ள திரைப்படம்/பாடல்களை பெண்டிரைவ்களிலும், மொபைல்களிலும் மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களில் பலரும், சரியான அளவிலோ, ரெகுலர் உடையிலோ காணப்படவில்லை. உடலும் மெலிந்து சத்தான சாப்பாடு என்பது அவர்களுக்கு எட்டாதோ, அல்லது சமச்சீர் உணவை தவிர்த்து, பீட்சா பர்கர் பொறித்த உணவு என திண்பண்டகளையே மெயின் உணவாகவே உண்டு வந்திருப்பார்களோ என சந்தேகம் எழுகிறது.
தனியார் எல்கேஜி கிண்டர் கார்டன் கூட டை, கழுத்தில் ஐடி, நீட்டான டிரஸ்கோட் என இருக்கையில், இங்கே மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பலரும் அழுக்கான, ஒழுங்கற்ற உடைகளையும், ஒரு ஐடி கார்டுகூட கழுத்தில் அணியாமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல், தான்தோன்றித்தனமாகவே கல்லூரி மாணவர்களும்/பணியாளர்களும் நம்மை கிராஸ் செய்து போகிறார்கள். (… Part 3)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s