மனைவின்னா, கொம்பா முளைத்திருக்கு?….சிரிங்க பாஸ்….
Wife is not a Terror … Relax
நானும் ஆபிஸ்ல தீயா வேலை செய்யனும்னு தான் பாக்கறேன்.
ஆனா.. ஆபிஸ் எரிஞ்சிடுமேன்னுதான் பயமா இருக்கு…!!
————
ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்.. டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு ‘ஹலோ’ சொன்னான்.. ‘என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…’ ‘எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…’ ‘இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…’ ‘ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..’ ‘சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…’ ‘ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்… சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்… ‘என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட… நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க… கிரேட் மச்சி…’ என்றார்கள்… ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,’ எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது…?
….
மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : ஆமா…ஆமா….எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க…சொல்லுங்க…
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் ஷேவ் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.
……….
கடலை டிப்ஸ்….
ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ… எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..
பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்…
ஆண் : வாவ்… சேம் பிஞ்ச்…நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..
பெண் : ஹா ஹா… என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??
ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்… உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,
பெண் : ஸ்மார்ட்…. ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..
ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க…
பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??
ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.
பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..
ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..
(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )
………………….
நர்ஸ் : டாக்டர் அந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே?
மருத்துவர் : ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா…????
……………………
சிஸ்டர், அந்த நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தாச்சா?
அதற்கு அவசியம் ஏற்படவில்லை டாக்டர், என்னைப்
பார்த்தவுடன் மயக்கமாகிட்டார்..!
–
அதெப்படி..?
நான்தான் அவர் மாஜி மனைவி..!
……………..
“இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க மனைவிக்கு பேச்சே வராது…!”
“நீங்க இவ்வளவு கைராசியானவர்னு முன்னாலயே தெரியாமப் போச்சே டாக்டர்…!”
…………………………
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்
டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.
வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று ” டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற” என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான்.
மனைவி திரும்பி ” இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
உருப்படுமா……?
…………………………………….
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.. அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.. ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.. இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே
என்று பாய.. அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா…
என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.. உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை…
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ முடியும்…
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..
……………..
ஆக்கியவர்களுக்கும், பரிமாரியவர்களுக்கும் நன்றி .. சிவபார்க்கவி
வணக்கம்
நல்ல நகைச்சுவையாக உள்ளது.. பதிவு அருமை வாழ்த்துக்கள்
அனுபவம் நல்லா பேசுது போல….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ha…ha..thank u boss.
sivaparkavi
ரசித்தேன்.
thank u sir,
sivaparkavi