புருஷன் மண்டை உடைஞ்சு

புருஷன் மண்டை உடைஞ்சு
Husband head cracked ….

நான் பேங்க்ல கொள்ளையடிக்க வந்திருக்கேன்…!

காஷியர் : அதெல்லாம் எனக்குத் தெரியாது…உங்க டோக்கன் நம்பரைக் கூப்பிடும்போது வாங்க…!!??
…………..
t1
நீதிபதி: உன் முகத்தை இதுக்கு முன்னாடி எங்கேயோ
பார்த்த மாதிரி இருக்கே..?

குற்றவாளி: இருக்கும்ங்க ஐயா…நான்தான் உங்க புள்ளைக்கு
பாட்டு கத்துக்குடுத்தேன்…!

நீதிபதி: அவனா நீ…? உனக்கு இரட்டை ஆயுள் தண்டனை
விதிக்கிறேன்…!
…………..

பஸ்ல ஊருக்குப் போயிட்டு வந்ததினால, தலை சுத்துது…!

இருக்காதா பின்ன…பக்கத்துல இருக்கிற ‘பார்’க்குப் போயிட்டு
வந்த எனக்கே தலை சுத்துதே..!

…………….

ஏம்மா, உன் புருஷன் மண்டை உடைஞ்சு ரத்தம்
வர்ற வரைக்கும் நீ என்ன செஞ்சுகிட்டு இருந்தே?

அவரை அடிச்சிக்கிட்டே இருந்தேன் டாக்டர்..

………………..
t2
அஞ்சு வருஷமா எங்க தலைவரைத் தொகுதி மக்கள்
தேடினாங்க…!

இப்போ..?

போலீஸ் தேடிட்டு இருக்கு..!
…………………….
தலைவர் ரயில் மறியல் போராட்டத்துக்குப் போனாரா?

ஆமாம்..எதுக்கு கேட்கறே?

தண்டவாளத்துல ஒரு பகுதியைக் காணோம்னு புகார்
வந்திருக்கு…!
………………….

judge:jack why u r caught by police.
Jack:they caught me while shopping early
judge:shopping earlier is not a crime.when did u purchase.
Jack:i shop before opening….

………………
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

முதலிரவு .. வெட்கம் ….

முதலிரவு .. வெட்கம் ….
Who is there ?

“வாஸ்கோடாகாமா இந்தியா வை கண்டுபிடிச்சார்”-
என்ற வாக்கியமே தப்பு. அவர் கண்டுபிடிக்கிறதுக்கு
முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம்,
‘வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்’-
என்பதே சரி..
# அந்த வென்ன
என்னடா நம்மள
கண்டுபிடிக்கிறது?
………..
t1
கணவனுக்கும்
நல்ல கணவனுக்கும்
என்ன வித்தியாசம்?

கணவன் என்பவன் செய்த தவறை ஒத்து கொண்டு
மனைவியிடம் திட்டு வாங்குபவன்.

நல்ல கணவன் என்பவன் தவறே செய்யாமல் மனைவியிடம் திட்டு வாங்குபவன்!!!
…………………
(முதலிரவு அறையில்…பெண்ணிடம் )

“”என்னது? அங்கேயே வெட்கப்பட்டுகிட்டு நிக்கிறே?
உனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலையா?”

“அதெல்லாம் சொல்லித் தந்துட்டாங்க. மொதல்ல அஞ்சு நிமிடம் வெட்கப்படணும்னு சொன்னாங்க. அதான்….”
……………………
t2
கணவன்: டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.

மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.

கணவன்: ஹூம்…. கார் எல்லாம் கவரிங்ல வராதே டார்லிங்….
………………………..

மதுக்கடையில் இரு குடிமக்கள்.

குடிமகன் 1 : இந்த பீர்ல நிறம் இல்லை.

குடிமகன் 2 : இந்த பீர்ல சுவை இல்லை.

குடிமகன் 1 : இந்த பீர்ல திடம் இல்லை.

பார் அட்டெண்டர் : ங்கொய்யாலே!!!!! இது சோடா டா…
………………….

என்னய்யா வெறும் டீ மட்டும்தானா? கடிக்க எதுவம்
இல்லையா?

நாய் இருக்கு, அவுத்து விடவா..!

……………………
t3
என் மகன்கிட்டே உனக்கு தம்பிப்பாப்பா வேணுமா, தங்கச்சிப்பாப்பா வேணுமான்னு கேட்டேன்…!

என்ன சொன்னான்?

ஏம்பா உனக்கு வேற வேலை இல்லையான்னு
கேட்டுட்டான்..!

நன்றி… உருவாக்கியவர்களுக்கும், பார்வையில் பட்ட எனது கண்களுக்கும்

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu