Shopa Husband….
உலகளந்த பெருமாள்…?
ஆசிரியர்: இப்போது நான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரப்பெருமைகளைச் சொன்னேன் அல்லவா? உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேஹமிருந்தால்,கேட்கலாம்..
மாணவன்: சார் எனக்கொரு சந்தேஹம்..?
உலகளந்த பெருமாள்… 10 அவதாரத்தையும் ஏன் இந்தியாவில் மட்டும் எடுத்தார்?
ஒன்று அமெரிக்காவிலும், மற்றொன்று அரபுனாட்டிலும், ஜப்பானிலும், கொரியாவிலும் எடுத்து அவரது சக்தியை வெளிப்படுத்தியிருக்கலாமே?
ஆசிரியர்: இப்படியெ ல்லாம் எடக்கு முடக்கு கேள்வி கேட்கப்படாது.. ஒழுங்கானதா கேளு, பதில் கிடைக்கும்..
…………………………
அரசியல்வாதி: மாணவர்களே! நீங்க யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்.
மாணவர்கள்: ஏன்?
அரசியல்வாதி: நாங்கள் யாரவது படிப்பில் ஈடுபடுகிறோமா?
……………………….
என்னடா உடம்பு பூரா கட்டோட வர்ற…?
ராத்திரி தூக்கம் வரலன்னு சோபா மேல படுத்திட்டேன் மாப்ல….
அதுக்கும் கட்டுக்கும் என்னடா சம்பந்தம்….?
சோபாவோட புருஷன் வந்திட்டாண்டா….!!!!
………………………..
ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார்.
ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சே! குய்யோ முறையோ என அலறி அழ ஆரம்பித்தார்..
இந்த ஆளின் கத்தல் தாங்காத டாய்லெட் தேவதை, அவர் முன்னே தோன்றி, “ஏன் இப்படி ஊளையிடுகிறாய்” என்றது?.
இவரும் கதையைச் சொன்னார்.
படக்கென மறைந்த தேவதை, ஒரு சில நிமிடங்களில் தகிக்கும் தங்க நிறத்தில் ஒரு ஃபோனைக்கொண்டு வந்து கொடுத்து.
இவர் ஏற்கனவே விறகுவெட்டி (தங்கக்கோடாரி) கதைகளை கேள்விப்பட்டிருந்ததால் மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பதற்காக
“தேவதையே, என்னுடையது சாதாரண ஃபோன் தான்.
தங்கத்தால் ஆனது அல்ல” என்றார் பவ்வியமாக!
உடனே அந்த தேவதை,”ஏ மூதேவி.. இது உன்னுடைய ஃபோன் தான், நன்றாக கழுவி விட்டு உபயோகப்படுத்து”என்று கூறிவிட்டு மறைந்தது.!!??
கதை கருத்து: யாரும்
டாய்லெட்ல mobile phone பயன்படுத்தாதீங்க ப்ளீஸ்.
…………………
வகுப்பறையில் ஏதோ துர்நாற்றம்.ஆராய்நது பார்த்த போது,
ஒரு மாணவனின் துவைக்காத சாக்ஸில் இருந்து நாற்றம்
வந்தது.
ஆசிரியர் அவனை திட்டி மறுநாள் புது சாக்ஸ் அணிந்து வரும்படி சொன்னார்.
மறுநாளும் அதே நாற்றம் அதே மாணவனிடம்.ஆசிரியருக்கு.
பயங்கர கோபம்.
“நேற்று உன்னிடம் என்ன சொன்னேன்”-என்று
கத்தினார்.
பையன் பணிவுடன் சொன்னான், சார் புது சாக்ஸ்தான் போடடு வந்திருக்கேன்.
“பொய் சொல்லாதே”- என்று இன்னும் அதிகமாகத் திட்டினார்.
பையன் சொன்னான்,தெரியும் சார் நீங்க நம்ப மாட்டிங்கன்னு
அதான் நேத்து போட்டிருந்த சாக்ஸையும் கூடவே எடுத்து வந்திருக்கேன்” – என்று பழைய சாக்ஸை எடுத்து நீட்டினான்.
…………………….
Man1: வெயிட்டான படிப்பு படிச்சும் என் பையனுக்கு வேலை கிடைக்கல
Man2: அப்படியா… என்ன படிப்பு படிச்சிருக்காரு….?
Man1: L(kg) U(kg)pre(kg).
……………………..
கோழி ஏன் முட்டை போடுது..?
அதுக்குத்தான் 1, 2, 3 தெரியாதே!
……………………..
அதான் ஆதார் கார்டுலருந்து உதார் கார்டு வரைக்கும் காட்டிட்டேனே…இன்னும் என்னா வேணும் நைனா??
TRAIN TTR : யோவ் டுபுக்கு டிக்கட் எங்கேயா..!!