குக்கூ …. திரைவிமர்சனம்.

again…

அமிர்தம் உதவிக்கரங்கள் ..திருச்சி சிவபார்கவி

குக்கூ …. திரைவிமர்சனம்.
Kukkoo… Tamil Film Review

ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார்.
t2
எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து, ஆசிரியர் பணி வாங்க உதவிசெய்தும், திருமணம் முடிக்கவும் ஏற்பாடாகிறது. இதனால், காதலர்களை சேரவிடாமல் துரத்தியடிக்க, விதிவசத்தால் அருகருகே இருக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டும், பல விபத்துக்களை சந்தித்துத்தும் இருவரும் இணைய முடியாத சூழ்நிலைகள்… பார்வையாளர்கள் நமக்கோ என்ன விதிடா இதுன்னு? நொந்துகொள்ள வேண்டி வருகிறது. காதலர்கள் இணைய 3 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், கண்ணில்லாதவர்கள் அனைவரும் உதவ, கண்னுள்ளவர்கள் உதவமாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் மாதிரி நடித்து, பணத்தை ஆட்டைய போட்டு, நாயகனையும் நடுரோட்டில் விட்டுச்செல்வதையும், ஒருசிலர் மனசாட்சி இல்லாமல்…

View original post 121 more words

குக்கூ …. திரைவிமர்சனம்.

குக்கூ …. திரைவிமர்சனம்.
Kukkoo… Tamil Film Review

ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார்.
t2
எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து, ஆசிரியர் பணி வாங்க உதவிசெய்தும், திருமணம் முடிக்கவும் ஏற்பாடாகிறது. இதனால், காதலர்களை சேரவிடாமல் துரத்தியடிக்க, விதிவசத்தால் அருகருகே இருக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டும், பல விபத்துக்களை சந்தித்துத்தும் இருவரும் இணைய முடியாத சூழ்நிலைகள்… பார்வையாளர்கள் நமக்கோ என்ன விதிடா இதுன்னு? நொந்துகொள்ள வேண்டி வருகிறது. காதலர்கள் இணைய 3 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், கண்ணில்லாதவர்கள் அனைவரும் உதவ, கண்னுள்ளவர்கள் உதவமாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் மாதிரி நடித்து, பணத்தை ஆட்டைய போட்டு, நாயகனையும் நடுரோட்டில் விட்டுச்செல்வதையும், ஒருசிலர் மனசாட்சி இல்லாமல் செல்வதும், அதில் ஒருவர் மிகவும் உதவி செய்து நாயகனைக் காப்பாற்றுவதும்.. அருமையான திரைக்கதை அமைப்பு. பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறார்கள். முடிவில், காதலர்கள் இருவரும் வேறு வேறு திசையில் இருக்க, ஆனந்த விகடன் உதவியுடன், நாயகி மும்மையில் இருக்கிறார் எனத் தெரியவர, நாயகன் ரயிலில் சென்று நாயகியை கண்டுபிடிக்கிறாரா என்பதே கிளைமாக்ஸ்.
t1
குக்கூ… ஒரு கவிதை…. சவுண்ட் எபக்ட்தான் படத்தின் சிறப்பான அம்சம். இளையராஜாவின் பாடல்களை சரியாக பயன்படுத்தியிருப்பது… ஆடல்பாடல் கலைஞர்களையும் கதாபாத்திரங்களாக உலாவவிட்டுருப்பது, வெறித்தனமான ரசிகனின் ரசிக்கத்தன்மையை வெளிப்படுத்துவது. கண்ணில்லாதவர்களின் உலகை கூடுமானவரை, உறவினர்களின் சுயநலத்தை, நல்இதயங்களின் செயல்களையும். கண்ணில்லாதவருக்கு பாடம் கற்பிப்பவரையே காதலானக தவறாக நினைத்து வாழும் கதாநாயகி, எதார்த்ததை புரிந்து கொள்வதும், பழைய துணிகளை அணிந்துகொள்ள கொடுத்ததை ஏற்காமல் தன்னுடைய கர்சீப்பை அதனில் வைத்துவிட்டு வருவது 100 சதவீதம் கௌரமாக வாழ கண் அவசியம் இல்லை என்பதை நிரூபிப்பது என… அனைத்து வகையிலும் குக்கூ.. ஒரு கவிதை. சல்யூட் ராஜீமுருகன் சார்.
t3
கண்களுடன் இந்த உலகை எதிர்கொள்ளும் நாம், கண்ணில்லாமலே நம்மிடையே வாழ்ந்து வரும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிய அனைத்து தொழில்நுப்ட கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

டிக்கெட் வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்கான்

டிக்கெட் வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்கான்
Ticket holding person…

“ஊருல train டிக்கெட், bus டிக்கெட், cinema டிக்கெட்…..
வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்கான்……..
*
*
இந்த ஒரே ஒரு Hall ticketa வச்சிக்கிட்டு நா படுற அவஸ்த இருக்கே………அய்ய ய்ய ய்ய யோ.”……
……………………………………………
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
”என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?”என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது,’சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.!”….
……………………………………………
T1
டாக்டர், எங்க தொட்டாலும் வலிக்குது”
“எங்கே தொட்டாலுமா?”
“ஆமாம், டாக்டர்”
“எங்கே, இடது காலைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“வலது கால்”
“வலிக்குது டாக்டர்”
“கன்ப்யூசிங் … கழுத்தைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“மர்மமா இருக்கே …. மாரைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“ஒண்ணும் புரியலையே… தலையைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“ம்ம்ம்ம்….இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும் … போய் ப்ள்ட், யூரின் எல்லாம் கொடுங்க … ஈசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுக்கணும்”
“சரி டாக்டர்”
இரண்டு நாட்கள் கடந்தன….
“என்ன டாக்டர் … என்ன பிராப்ளம்னு தெரிஞ்சுதா?”
“ஆமா , கண்டுபிடிச்சிட்டேன் … உங்க ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு”
……………………………………….
அடடா.. . உங்க மூக்குல ஏகப்பட்ட ஓட்டைகளா இருக்கே எப்படி.. .?
நான்தான் சொன்னேனே. .. என் மனைவி சாம்பார் வெச்சா மூக்கைத் துளைக்கும்னு…
…………………………………………
வக்கீலுக்கும் டாக்டருக்கும் என்ன வித்தியாசம்?
வக்கீல் சரியில்லைன்னா கேஸ் இழுத்துட்டே போகும்.
டாக்டர் சரியில்லைன்னா கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும்!
…………………………………………
T2
ஒருவர்; என்னங்க, உங்க மனைவி தூக்குல தொங்கப் போறேன்னு போறாங்க, நீங்க தடுக்காம பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க?
மற்றொருவர்; நான் என் மனைவியோட உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் ரொம்ப மதிப்பு கொடுக்குறவன் ,சார்.
………………………………………….
WITH THANKS.. BALAKRI. FB
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மேய்ந்தால் கோதுமைபுல் லை மேயவும்…

மேய்ந்தால் கோதுமைபுல் லை மேயவும்…
Wheat juice
கோதுமைபுல் சாறு: படத்தில் இருப்பது வளர்த்திருக்கும் கோதுமைப்புல் இந்த கோதுமைப்புல் சாறு அருந்துவது குறித்து இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்த்திருப்போம்,இது ஊட்டச்சத்து மிகுந்த பானம் என்று சொல்கிறார்கள். வட இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் கோதுமைப்புல் சாறு வெகுகாலமாக பிரபலமாம்,நம் பகுதிகளில் இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கோதுமைப்புல்லை பொடியாக தயார் செய்து 100கிராம் 500 ரூபாய் என்றெல்லாம் விற்பனை செய்கிறார்கள். இது தயாரிப்பது என்ன கஷ்டமான காரியமா?நாமே தயார் செய்து கொள்ளலாம்.பத்து தொட்டி இருந்தால் போதும். ஒரு கிலோ கோதுமை முப்பது ரூபாய்தான் இருக்கும்.ஒரு கிலோ வாங்கி அதில் நூறு கிராம் எடுத்துக் கொள்ளுங்கள்.எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறப் போடுங்கள். பின்னர் அதை ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்க விட்டால் அடுத்த நாள் முளை விட்டிருக்கும்,இதை தொட்டியில் விதைத்து ஒரு இன்ச் அளவுக்கு மண் போட்டு மூடி விடவும்.முளைத்து வெளியே வரும் வரை அவ்வப்போது தண்ணீர் தெளித்து வர வேண்டும்.அழகாக கோதுமை நாற்றுகள் முளைத்து வரும். இதைப்போல் ஒவ்வொரு நாளும் ஒரு தொட்டி என விதைத்து வர பத்தாவது நாள் முதல் தொட்டியில் சாறு தயாரிப்பதற்கான கோதுமைப்புல் தயாராக இருக்கும்.முதல் தொட்டி காலியான உடன் மண்ணைக் கிளறி விட்டு மீண்டும் கோதுமையை விதைத்து விடலாம். கோதுமைப்புல் சாறு அருந்துவதால்
wheat

பலன்கள்:(திரு.குப்புசாமி அவர்களின் பிளாக்கில் இருந்து)

கோதுமைப்புல்லின் மருத்துவப் பயன்கள் –: கோதுமைப்புல்லின் சாற்றைக் குடிப்பதால் அது இரத்தத்தை சுத்தம் செய்கிறது. ஈரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது. பெருங்குடலில் உள்ள (colon) என்ற பாகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. மலச்சிக்கலைப் போக்குகிறது. முகப்பரு, உடலில் உள்ள வடுக்களைப் போக்க உதவுகிறது. சாற்றைக் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும், தொண்டைப் புண்ணும் குணமாகும். பல் எகிரில் ஏற்படும் வீக்கம் சீள் பிடித்தலைக் குணப்படுத்தும். புற்று நோய் புதிய செல்கள் உண்டாவதை அழித்துக் குணப்படுத்தும். தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். முக்கியமாக வெண்புள்ளி தேமலைப் போக்க வல்லது.
50 கிராம் கோதுமைப் புல்லை எடுத்துக் கழுவி நன்கு அரைத்து 150 மில்லி நீர் கலந்து வடிகட்டியபின் அதில் தேன் கலந்து சாற்றைக் குடிக்கலாம். தயார் செய்தவுடன் குடித்து விட வேண்டும். இதனால் புற்று நோயை எதிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. கோதுமைப்புல் சாறு பல் வலி உண்டாகும் போது வாயில் ஊற்றிக் கொப்பளித்துக் குடித்தால் பல் வலி குறையும். எல்லா நாட்பட்ட நோய்களும் இதன் சாற்றால் குணமடையும். உடல் பருமன், நீரிழிவு நோய் குணமடைகிறது.

கோதுமைப் புல்லில் உள்ள சத்துக்கள் :-நீர் – 65%, புரதம் – 20% கொழுப்பு – 3% மாவு சத்து – 12% நார் சத்து – 1% கால்சியம் – 40 மி.கி. இரும்பு – 6 மி.கி. விட்டமின் – B1 – 1.4 யூனிட், B2 – 0.54 யூனில், நியாசின் – 2.90 யூனிட். மற்றும் A, B 1, 2, 3, 5, 6, 8 & 12 C, E & K ஆகியவை உள்ளன.
Thanks. Uuvan Suvang .. fb
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமா

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமா
Married since 5 Years … Jokes Collection

கூரியர்ல அனுப்பி வைச்ச கிஃப்ட் வந்து சேர்ந்துருச்சான்னு இன்னொரு தடவை கேட்டுராத ….

கூரியர் கிஃப்ட் எல்லாம் வந்து சேரனும்னா……
அதுக்கு கிஃப்ட் வாங்கி அனுப்பி வச்சிருக்கனும் மாப்ஸ்….

……………………………..

புருஷனும், பொண்டாட்டியும் எந்த வம்பு – சண்டை இல்லாம இருக்கிறார்கள் என்றால் அவங்கள்ள ஒருத்தர் அடிமையா இருக்காங்கன்னு அர்த்தம்!

# அவ்வ்வ்வ்வ்வ்வ்…..எந்தப் பக்கம் போனாலும் கேட்டைப் போடுறானுகளே….

……………………………………
a1
டாக்டர்! நான் ஒரு அனாதைங்கறது உங்களுக்குத் தெரியுமா…?

ஏன் தெரியாது…. உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் நான் தானே ஆபரேஷன் பண்ணினேன்….!

………………………………….

காதலி: உனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சா…?
இதை ஏன் நீ இவ்வளவு நாளா எங்கிட்ட சொல்லாம
இருந்த..?

காதலன்: ஹும்…என் கஷ்டம் என்னோடயே இருக்கட்டும்னுதான்….!

……………………………………

“என்ன வேலை கிடந்தாலும் முதல் வேலையாகக் காலையிலேயே காலண்டரில் தேதியைக் கிழிச்சுடுவேன்…”

“என்ன அப்படி அவசரம்?”

“தேதியைக் கூட கிழிக்காமல் அப்படி என்னதான் கிழிக்கிறீங்களோன்னு என் மனைவி திட்டுவாள்…”
a2
…………………………..

ஆசிரியர்:ராமு உன்கையில் நாலு மாம்பழங்கள் உள்ளன..அவற்றில் ஒன்றை நீ சாப்பிட்டு விட்டால் பாக்கி உன்னிடம் எவ்வளவு இருக்கும்!!

மாணவன்:மூன்று பழமும் ஒரு கொட்டையும் சார்..

………………………..

பேச்சாளர்:- விஸ்வரூபம் 2, கோச்சடையான் ஆகிய படங்களுடன்
எங்கள் தலைவரையும் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறேன்..!

…………………………
With Thanks. Iila.Bkn.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu