குக்கூ …. திரைவிமர்சனம்.

குக்கூ …. திரைவிமர்சனம்.
Kukkoo… Tamil Film Review

ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார்.
t2
எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து, ஆசிரியர் பணி வாங்க உதவிசெய்தும், திருமணம் முடிக்கவும் ஏற்பாடாகிறது. இதனால், காதலர்களை சேரவிடாமல் துரத்தியடிக்க, விதிவசத்தால் அருகருகே இருக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டும், பல விபத்துக்களை சந்தித்துத்தும் இருவரும் இணைய முடியாத சூழ்நிலைகள்… பார்வையாளர்கள் நமக்கோ என்ன விதிடா இதுன்னு? நொந்துகொள்ள வேண்டி வருகிறது. காதலர்கள் இணைய 3 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், கண்ணில்லாதவர்கள் அனைவரும் உதவ, கண்னுள்ளவர்கள் உதவமாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் மாதிரி நடித்து, பணத்தை ஆட்டைய போட்டு, நாயகனையும் நடுரோட்டில் விட்டுச்செல்வதையும், ஒருசிலர் மனசாட்சி இல்லாமல் செல்வதும், அதில் ஒருவர் மிகவும் உதவி செய்து நாயகனைக் காப்பாற்றுவதும்.. அருமையான திரைக்கதை அமைப்பு. பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறார்கள். முடிவில், காதலர்கள் இருவரும் வேறு வேறு திசையில் இருக்க, ஆனந்த விகடன் உதவியுடன், நாயகி மும்மையில் இருக்கிறார் எனத் தெரியவர, நாயகன் ரயிலில் சென்று நாயகியை கண்டுபிடிக்கிறாரா என்பதே கிளைமாக்ஸ்.
t1
குக்கூ… ஒரு கவிதை…. சவுண்ட் எபக்ட்தான் படத்தின் சிறப்பான அம்சம். இளையராஜாவின் பாடல்களை சரியாக பயன்படுத்தியிருப்பது… ஆடல்பாடல் கலைஞர்களையும் கதாபாத்திரங்களாக உலாவவிட்டுருப்பது, வெறித்தனமான ரசிகனின் ரசிக்கத்தன்மையை வெளிப்படுத்துவது. கண்ணில்லாதவர்களின் உலகை கூடுமானவரை, உறவினர்களின் சுயநலத்தை, நல்இதயங்களின் செயல்களையும். கண்ணில்லாதவருக்கு பாடம் கற்பிப்பவரையே காதலானக தவறாக நினைத்து வாழும் கதாநாயகி, எதார்த்ததை புரிந்து கொள்வதும், பழைய துணிகளை அணிந்துகொள்ள கொடுத்ததை ஏற்காமல் தன்னுடைய கர்சீப்பை அதனில் வைத்துவிட்டு வருவது 100 சதவீதம் கௌரமாக வாழ கண் அவசியம் இல்லை என்பதை நிரூபிப்பது என… அனைத்து வகையிலும் குக்கூ.. ஒரு கவிதை. சல்யூட் ராஜீமுருகன் சார்.
t3
கண்களுடன் இந்த உலகை எதிர்கொள்ளும் நாம், கண்ணில்லாமலே நம்மிடையே வாழ்ந்து வரும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிய அனைத்து தொழில்நுப்ட கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

2 thoughts on “குக்கூ …. திரைவிமர்சனம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s