சங்கி மங்கி இல்லை இது ராணா,சேணா (கோச்சடையாண்)
KOCHADAIYAN TAMIL FILM REVIEW
ஒரு ஊர்ல ஒரு ராஜா, அந்த ராஜாவிற்கு ஒரு சேனாதிபதி ரொம்ப நல்லவர், வல்லவர், இவரின் வளர்ச்சி பொறுக்காத மந்திரி ராஜாவிடம் போட்டுக்கொடுக்க, நேரம் பார்த்து நல்லது செய்தும், கெட்டதாக செய்ததாக சித்தரித்து சேனாதிபதி (அவர்jதான் கோச்சடையாண்) போட்டுத்தள்ள, சின்ன பசங்க ராணா, சேணா ( கோச்சடையாண் மகன்கள்) இருவரில் ராணா ஆற்றில் விழுந்து சேற்றில் விழுந்து தந்திரமாக எதிரி நாட்டு ராஜாவுடன் சேர்ந்து இந்த நாட்டுக்கு படையெடுத்துவந்தவுடன் எதிரி நாட்டு ராஜாவை கழட்டிவிட்டு சொந்த நாட்டின் ராஜாவை போட்டுத்தள்ள முயற்சி செய்ய, மந்திரியால் சிக்கிக்கொண்டு சிறை செல்லவும், இளவரசியை ஏற்கனவே உஷார் (காதல்) வசப்படுத்தியிருத்தால் உதவியுடன் தப்பிக்க, தனது தங்கையை இளவரசனுக்கு மணமுடிக்க எண கில்லாங்கடியாக திட்டமிட்டு வெற்றியும் பெறுகிறார். எல்லாம் முடிந்தவுடன் தம்பி சேணா வந்து சேர்கிறார், கதை தொடருமாம்.
சாதரணமான கதையாக இருந்தாலும், கார்டுன் படம் போல் தெரியமால் திறமையாக திரைக்கதை, இசை மற்றும் நடிப்பு எண அனைத்தும் கணகச்சிதமாக பொருந்துகிறது. ரஜினி ஏற்கனவே நடித்த படங்களைவிட இதில் சிறப்பாக நடித்திருப்பதாகவே படுகிறது ( உபயம். இயந்திரம்). இறந்துபோன நாகேஷ் அவர்களை மீண்டும் நடிக்கவைத்த மீடியாடெக்னாலஜி கிரேட். இனிவரும் படங்கள் இதுபோலத்தான் இருக்கும்போல. தொழிற்நுட்ப ரீதியாக சிறப்பாக அமைய மிகுந்த சிரமம்மேற்கொண்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது.
விசிலடிச்சான் குஞ்சுகள் (ரசிகர்கள்) ஏகமாய் விசிலடிக்க இடங்கள் குறைவு என்றாலும், அமைதியாக ரசிக்கிறார்கள். தீபிகா படுகோன் வேஸ்ட், அவருக்கு பதிலாக சும்மா ஒரு சிலையைக்கூட மாடுலேஷன் செய்திருக்கலாம். இருப்பினும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படம் ஓடனும் இல்ல. 3000 தியேட்டர்களில் வெளியீடு… நல்ல ஏசி, புரெஜெக்ஷன் வசதி உள்ள திரையரங்கில் பார்த்தால் மட்டுமே இத்திரைப்படம் நன்றாக ரசிக்க இயலும் மக்களே. 3டி படங்களில் அடிக்கடி பாம்பு, கத்தி, கபடா என பொருட்கள் கண்னுக்குகிட்ட வந்து அவஸ்தைபடுத்துவது போல் இதில் எந்த காட்சியும் இல்லை. கண்ணாடி அணியாமல் வெறும் கண்ணால் பார்த்தால் கண் வலிக்கிறது. 150 சதவீதம் வெற்றியை பெற்றிருக்கும் கோச்சடையாண் உருவாக்கிய ஒவ்வொருவருக்கும் இந்த தமிழ்தேசம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்.
அன்புடன், சிவபார்க்கவி
Month: மே 2014
ஆட்டையப்போடும் ஜோதிடங்கள்… பகுதி 2
ஆட்டையப்போடும் ஜோதிடங்கள்… பகுதி 2
JOTHIDAM
அனைத்துக் கட்டங்களையும் நிதானமாக பரிசோதித்தவர், ஒரு பிரச்சினையும் இல்லை என்கிற ரீதியில் தான் பதிலளித்துக் கொண்டிருந்தார். இடையில் நான் இந்த ஜாதகத்திற்கு கால சர்ப்தோஷ நிவர்த்தி செய்ய வேண்டுமா என வாய்கொடுக்க, ஒரு செகண்ட் நிறுத்தி நிதானமாக எங்களைப் பார்த்துவிட்டு, கண்டிப்பாக இந்த ஜாதகருக்கு காலசர்பதோஷ நிவ்ர்த்தி பரிகாரம் செய்யனும், அதுவும் நான் தான் செய்வேன்.. வெளியில் யாரிடமாவது செய்தீர்கள் என்றால் அது பலிக்காது. இப்படியே செய்யாமல் விட்டால் பையன் கெட்டுப்போய் பக்கா கிரிமினல் ஆக மாறிவிடுவான்.. போலீஸ், கோர்ட்ன்னு செலவு மேல் செலவு செய்தாலும் பையன் அவ்வளவுதான் என குண்டைத் தூக்கி போடவும், எனக்கு குலை நடுங்கிவிட்டது.
சரிங்க மேடம், இதை எப்படி சரிசெய்வது என கேட்டதற்கு. அவசரப்படாதீங்க கடைசியில் சொல்றேன்னு சொல்லிட்டு பொதுவாக பல டிப்ஸ்களை அள்ளி விட்டு நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் கழித்து நாங்களாகவே, பரிகாரம் செய்ய எவ்வளவு செய்யனும்னு கேட்டோம். அவரும் நிதானமாக, 50 வயது வரைக்கும் பையன் நல்லா இருக்கனும்னா, பரிகாரம் செய்துக்க, அனைவருக்கும் 40000 ( நாற்பதாயிரம் ) செலராகும், உங்களுக்கு 50000 செலவாகும் என்று எடுத்துவிட்டார். ஏன், எங்களுக்கு மட்டும்ன்னு கேட்டா, கட்டங்களில் ஒரே கட்டத்தில் நான்கு கிரகங்கள் இருக்கிறதாம் , அதனால் 50000 ஆகுமாம். அதாவது, பரிகாரம் செய்தவுடம், பையன் செய்வதெல்லாம் துலங்குமாம், அதிர்ஷ்டதேவதை கூடவே வந்திடுவாராம் என்கிற ரீதியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்புட்டுத் தொகையை பரிகாரமாக செய்வதற்கு என்னசெய்வது ? நாங்கள் இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டோம். இது அதுக்கு சரிப்பாடாதுன்னு முடிவுகட்டி கொங்சமா குறைக்கப்படாதன்னு கேட்டோம், அதெல்லாம் முடியாது என்று பதில் வரவே, பசியும் வயிற்றைக்கிள்ள, சரி நாங்க அப்புறம் வருகிறோம்ன்னு சாதரணமாக கூறிவிட்டு வெளியேறினோம். எங்களுக்கு அடுத்ததாக, இரண்டு ஜோடி பெற்றோர்கள் தலையைக் கொடுக்க உள்ளே நுழைந்தனர்.
பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் கூறியதுபோல், ஜோதிடம் பொய்யில்லை, ஆனால் அதனை வைத்து பொய்யாக காரணங்களை கூறி ஜோதிடர்கள் சம்பாதிப்பவராக இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றை கூற விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் என்து தம்பியின் நண்பர் பிராமினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார், ஜாதகங்கள் பார்ப்பார் என அறிமுகப்படுத்தப்பட்டார், (ஓசியின்னா விடுமோமா) உடனே எங்கள் ஜாதகங்களைக் காட்டி சில கருத்துக்களையும் கேட்டறிந்ததோம். கடைசியில் அதற்குண்டான கட்டணத்தை நாங்கள் கொடுக்க முன்வந்தபொழுது வாங்கமறுத்து, இதை நான் வாங்கினால், கிரகபீரித்தி கட்டாயம் செய்யவேண்டும், அதனால் நான் வாங்க மாட்டேன் என கூறிசென்றுவிட்டார்.
மேலேசொன்ன பிரபல டிவி ஜோதிடர்கள் கட்டணங்களை அதிகமாக வாங்குவது, தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக என்பது தெரிகிறது.. ஆனர்ல் இவர்கள் கிரக பீரீத்தி செய்கிறார்களா, அவர்களை கிரகங்கள் ஏதாவது செய்ததா என்ற தகவல்கள் இல்லை. எனது நண்பர் ஒருவர், அலுவலகத்தில் பணிசெய்து கொண்டே, இடையில் கணிணி மூலம் ஜாதக பிரிண்ட் எடுத்து கொடுத்துவந்தார், ஒருநாள் ஒருவரிடம் அதிகமான தொகை டிமாண்ட் செய்து வாங்கிவிட்டார், அடுத்த நாள், மிகவும் சோகமாக வந்தார், ஏன் என்று கேட்டோம், இல்ல வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு படுத்தோம், எனது பையன் தனது காலை பீரோக்கடியில் விட்டு நசுக்கி கொண்டான். அவசரமாக மருத்துவமணைக்கு எடுத்து சென்று காண்பித்தோம். நேற்று சம்பாதித்ததைவிட 10 மடங்கு அதிகமாக செலவாகியது. என வருத்தத்துடன் கூறி அன்றிலிருந்து ஜாதக நகல்கள் எடுத்து யாருக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.
ஆட்டையைப் போடும் ஜோசியங்கள்….
ஆட்டையைப் போடும் ஜோசியங்கள்….
Jothidam
அப்பப்பா… இப்போ நினைத்தாலும் குலை நடுங்கிறது…. நீண்ட நாட்களாகவே ஒரு பெண் ஜோதிடரின் நிகழ்ச்சியை அவ்வப்பொழுது லோக்கல் சானலில் கண்டுகளிப்பதுண்டு, அவரும் சிறப்பாகவே டிப்ஸ்களை அள்ளிவிடுவார்… நானும் அதைக்குறித்துக்கொண்டு இரண்டு மூன்று பதிவுகள் கூட எழுதி இருக்கிறேன். திடீர்ன்னு ராகு கேது க்குள் அடைப்பட்டுவிடும் அனைத்து கிரகங்களுக்காக காலசர்ப்தோஷம் நீக்கம் 16 வயதுக்குள் செய்யலைன்னா உங்க புள்ளை கையிலே கத்தியை தூக்கிகிட்டு யாரையாவது வெட்ட கிளம்பிவிடுவான் எடுத்துவிட, வயிற்றில் புளியைக்கரைக்க ஏன்னா எனது பையனுக்கு மேற்சொன்னமாதிரி ஜாதக அமைப்பு… மே கடைசிக்குள் 16 ஆரம்பம் வேற…. தூக்குடா மஞ்ச பையன்னு சொல்லி ஜாதகத்தை எடுத்துக்கிட்டு அந்தம்மாட்ட 6 மணி நேரம் டிராவல் செய்து ஈரோட்டிற்கு மேற்கே காலிபிளவர் ஊரில் (அதாங்க கோபி) பார்க்க காலையிலேயே கிளம்பிட்டோம், இதிலே இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் வேற வாங்கிட்டோம்.
அடிச்சு புடிச்சு அரைமணி முன்னதாகவே அங்கே போயிட்டோம். அவரது அலுவலகத்தில் ஒரே ஒருத்தர் மட்டும் காத்திருந்தார். காலையில் 9 மணி அப்பாயிண்ட்மெண்ட்க்கு வந்தவர்கள் இன்னும் வெளியேறவில்லை ஆகவே காத்திருக்கவும் என்று சொல்லி போயே போட்டார். இருந்த ஒரு பேனை போட்டு காத்திருந்தோம் நல்லவேளை வரும்போதே சாப்பிட்டுவிட்டு வந்ததால் தப்பித்தோம். மதியம் 2.40 க்கு வாங்க… சோதிடம் பார்க்கன்னு கூப்பிட்டாங்க… சும்மா சொல்லக்கூடாது, சும்மா வாசல் வராந்தவெல்லாம் காஸ்ட்லி கிரானைட் 2 கார் நிறுத்தியிருந்தது. நல்லவேளை நாய் இல்லை அதற்கு பதிலாக அவர் வேலைக்காரர் இருந்தார்.
சினிமா நடிகை போல கிலோகணக்கில் நகைகளை அணிந்துகொண்டு ஐம்புன்னு காஸ்ட்லி இருக்கையில் அமர்ந்திருந்தார், நாங்க போனபொழுது, அவருக்கு கண்லேசர் சிகிச்சை செய்திருந்ததால், கட்டம் பார்க்க முடியாமல் சமாளித்தார் இருந்தாலும், பொருமையாக அனைத்து கருத்துக்களையும் எடுத்து சொன்னார், ஆனால் கடைசியில் ஒரு பஞ்ச் வைத்தாரு பாருங்க… கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு நான் போய்ட்டேன்..
… அடுத்த பதிவில் தொடரும
ஏம்பா… ஏன்…?
பிளாக்கரின் வாசிப்பு ரசிகர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்….
WHY THIS BREAK…. TELL ME…
மன்னிக்கவும், கீழ்க்கண்ட காரணங்களால் கடந்த ஒரு மாதாமாக உங்களை வந்தடைய முடியவில்லை.
• கண்ணில் பழுது ஏற்பட்டு 15 நாட்கள் ஒன்னும் செய்ய இயலவில்லை, மானிட்டரைப் பார்ர்த்தால் மானிட்டர் டிரிங்க் அடித்தமாதிரி 3 அல்லது 4 பிம்பங்களாகத் தெரிந்தது.
• தேர்தல் பணி.. ரெர்ம்ப இல்லை என்றாலும் 5 நாட்கள் முழுமையாக செலவிட வேண்டி வந்தது.
• வெயில் … அப்பாடா கொளுத்தி எடுத்ததால், எழுதவும் வேணாம் ஒன்னும் வேணாம் சும்மா இரு என்ற சூழ்நிலை
எனவே, இனி வரும் நாட்களில் முன்னிலும் அதிக நெருக்கத்துடன் சந்திக்க தயாராக இருங்கள் என வேண்டி விரும்பி….
சிவபார்க்கவி.