ஆட்டையைப் போடும் ஜோசியங்கள்….

ஆட்டையைப் போடும் ஜோசியங்கள்….
Jothidam

அப்பப்பா… இப்போ நினைத்தாலும் குலை நடுங்கிறது…. நீண்ட நாட்களாகவே ஒரு பெண் ஜோதிடரின் நிகழ்ச்சியை அவ்வப்பொழுது லோக்கல் சானலில் கண்டுகளிப்பதுண்டு, அவரும் சிறப்பாகவே டிப்ஸ்களை அள்ளிவிடுவார்… நானும் அதைக்குறித்துக்கொண்டு இரண்டு மூன்று பதிவுகள் கூட எழுதி இருக்கிறேன். திடீர்ன்னு ராகு கேது க்குள் அடைப்பட்டுவிடும் அனைத்து கிரகங்களுக்காக காலசர்ப்தோஷம் நீக்கம் 16 வயதுக்குள் செய்யலைன்னா உங்க புள்ளை கையிலே கத்தியை தூக்கிகிட்டு யாரையாவது வெட்ட கிளம்பிவிடுவான் எடுத்துவிட, வயிற்றில் புளியைக்கரைக்க ஏன்னா எனது பையனுக்கு மேற்சொன்னமாதிரி ஜாதக அமைப்பு… மே கடைசிக்குள் 16 ஆரம்பம் வேற…. தூக்குடா மஞ்ச பையன்னு சொல்லி ஜாதகத்தை எடுத்துக்கிட்டு அந்தம்மாட்ட 6 மணி நேரம் டிராவல் செய்து ஈரோட்டிற்கு மேற்கே காலிபிளவர் ஊரில் (அதாங்க கோபி) பார்க்க காலையிலேயே கிளம்பிட்டோம், இதிலே இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் வேற வாங்கிட்டோம்.
t1
அடிச்சு புடிச்சு அரைமணி முன்னதாகவே அங்கே போயிட்டோம். அவரது அலுவலகத்தில் ஒரே ஒருத்தர் மட்டும் காத்திருந்தார். காலையில் 9 மணி அப்பாயிண்ட்மெண்ட்க்கு வந்தவர்கள் இன்னும் வெளியேறவில்லை ஆகவே காத்திருக்கவும் என்று சொல்லி போயே போட்டார். இருந்த ஒரு பேனை போட்டு காத்திருந்தோம் நல்லவேளை வரும்போதே சாப்பிட்டுவிட்டு வந்ததால் தப்பித்தோம். மதியம் 2.40 க்கு வாங்க… சோதிடம் பார்க்கன்னு கூப்பிட்டாங்க… சும்மா சொல்லக்கூடாது, சும்மா வாசல் வராந்தவெல்லாம் காஸ்ட்லி கிரானைட் 2 கார் நிறுத்தியிருந்தது. நல்லவேளை நாய் இல்லை அதற்கு பதிலாக அவர் வேலைக்காரர் இருந்தார்.
t2
சினிமா நடிகை போல கிலோகணக்கில் நகைகளை அணிந்துகொண்டு ஐம்புன்னு காஸ்ட்லி இருக்கையில் அமர்ந்திருந்தார், நாங்க போனபொழுது, அவருக்கு கண்லேசர் சிகிச்சை செய்திருந்ததால், கட்டம் பார்க்க முடியாமல் சமாளித்தார் இருந்தாலும், பொருமையாக அனைத்து கருத்துக்களையும் எடுத்து சொன்னார், ஆனால் கடைசியில் ஒரு பஞ்ச் வைத்தாரு பாருங்க… கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு நான் போய்ட்டேன்..
… அடுத்த பதிவில் தொடரும

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

2 thoughts on “ஆட்டையைப் போடும் ஜோசியங்கள்….

 1. வணக்கம்
  இது மூட நம்பிக்கைகள் … என்ன செய்வது நம்மட உறவுகளின் நம்பிக்கை…தொடருங்கள் அடுத்த பகுதியை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. ஜோதிடம் பொய்யில்லை, ஜோதிடர்களில் பொய்யர்கள் இருக்கிறார்கள். இது நான் கண்கூடாக கண்ட உண்மை.

  என்ன நடந்தது என அறியும் ஆவலில் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s