ஆட்டையப்போடும் ஜோதிடங்கள்… பகுதி 2

ஆட்டையப்போடும் ஜோதிடங்கள்… பகுதி 2
JOTHIDAM
அனைத்துக் கட்டங்களையும் நிதானமாக பரிசோதித்தவர், ஒரு பிரச்சினையும் இல்லை என்கிற ரீதியில் தான் பதிலளித்துக் கொண்டிருந்தார். இடையில் நான் இந்த ஜாதகத்திற்கு கால சர்ப்தோஷ நிவர்த்தி செய்ய வேண்டுமா என வாய்கொடுக்க, ஒரு செகண்ட் நிறுத்தி நிதானமாக எங்களைப் பார்த்துவிட்டு, கண்டிப்பாக இந்த ஜாதகருக்கு காலசர்பதோஷ நிவ்ர்த்தி பரிகாரம் செய்யனும், அதுவும் நான் தான் செய்வேன்.. வெளியில் யாரிடமாவது செய்தீர்கள் என்றால் அது பலிக்காது. இப்படியே செய்யாமல் விட்டால் பையன் கெட்டுப்போய் பக்கா கிரிமினல் ஆக மாறிவிடுவான்.. போலீஸ், கோர்ட்ன்னு செலவு மேல் செலவு செய்தாலும் பையன் அவ்வளவுதான் என குண்டைத் தூக்கி போடவும், எனக்கு குலை நடுங்கிவிட்டது.
t1
சரிங்க மேடம், இதை எப்படி சரிசெய்வது என கேட்டதற்கு. அவசரப்படாதீங்க கடைசியில் சொல்றேன்னு சொல்லிட்டு பொதுவாக பல டிப்ஸ்களை அள்ளி விட்டு நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் கழித்து நாங்களாகவே, பரிகாரம் செய்ய எவ்வளவு செய்யனும்னு கேட்டோம். அவரும் நிதானமாக, 50 வயது வரைக்கும் பையன் நல்லா இருக்கனும்னா, பரிகாரம் செய்துக்க, அனைவருக்கும் 40000 ( நாற்பதாயிரம் ) செலராகும், உங்களுக்கு 50000 செலவாகும் என்று எடுத்துவிட்டார். ஏன், எங்களுக்கு மட்டும்ன்னு கேட்டா, கட்டங்களில் ஒரே கட்டத்தில் நான்கு கிரகங்கள் இருக்கிறதாம் , அதனால் 50000 ஆகுமாம். அதாவது, பரிகாரம் செய்தவுடம், பையன் செய்வதெல்லாம் துலங்குமாம், அதிர்ஷ்டதேவதை கூடவே வந்திடுவாராம் என்கிற ரீதியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
t2
அம்புட்டுத் தொகையை பரிகாரமாக செய்வதற்கு என்னசெய்வது ? நாங்கள் இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டோம். இது அதுக்கு சரிப்பாடாதுன்னு முடிவுகட்டி கொங்சமா குறைக்கப்படாதன்னு கேட்டோம், அதெல்லாம் முடியாது என்று பதில் வரவே, பசியும் வயிற்றைக்கிள்ள, சரி நாங்க அப்புறம் வருகிறோம்ன்னு சாதரணமாக கூறிவிட்டு வெளியேறினோம். எங்களுக்கு அடுத்ததாக, இரண்டு ஜோடி பெற்றோர்கள் தலையைக் கொடுக்க உள்ளே நுழைந்தனர்.
பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் கூறியதுபோல், ஜோதிடம் பொய்யில்லை, ஆனால் அதனை வைத்து பொய்யாக காரணங்களை கூறி ஜோதிடர்கள் சம்பாதிப்பவராக இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றை கூற விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் என்து தம்பியின் நண்பர் பிராமினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார், ஜாதகங்கள் பார்ப்பார் என அறிமுகப்படுத்தப்பட்டார், (ஓசியின்னா விடுமோமா) உடனே எங்கள் ஜாதகங்களைக் காட்டி சில கருத்துக்களையும் கேட்டறிந்ததோம். கடைசியில் அதற்குண்டான கட்டணத்தை நாங்கள் கொடுக்க முன்வந்தபொழுது வாங்கமறுத்து, இதை நான் வாங்கினால், கிரகபீரித்தி கட்டாயம் செய்யவேண்டும், அதனால் நான் வாங்க மாட்டேன் என கூறிசென்றுவிட்டார்.
t3
மேலேசொன்ன பிரபல டிவி ஜோதிடர்கள் கட்டணங்களை அதிகமாக வாங்குவது, தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக என்பது தெரிகிறது.. ஆனர்ல் இவர்கள் கிரக பீரீத்தி செய்கிறார்களா, அவர்களை கிரகங்கள் ஏதாவது செய்ததா என்ற தகவல்கள் இல்லை. எனது நண்பர் ஒருவர், அலுவலகத்தில் பணிசெய்து கொண்டே, இடையில் கணிணி மூலம் ஜாதக பிரிண்ட் எடுத்து கொடுத்துவந்தார், ஒருநாள் ஒருவரிடம் அதிகமான தொகை டிமாண்ட் செய்து வாங்கிவிட்டார், அடுத்த நாள், மிகவும் சோகமாக வந்தார், ஏன் என்று கேட்டோம், இல்ல வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு படுத்தோம், எனது பையன் தனது காலை பீரோக்கடியில் விட்டு நசுக்கி கொண்டான். அவசரமாக மருத்துவமணைக்கு எடுத்து சென்று காண்பித்தோம். நேற்று சம்பாதித்ததைவிட 10 மடங்கு அதிகமாக செலவாகியது. என வருத்தத்துடன் கூறி அன்றிலிருந்து ஜாதக நகல்கள் எடுத்து யாருக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

Advertisements

4 thoughts on “ஆட்டையப்போடும் ஜோதிடங்கள்… பகுதி 2

 1. வணக்கம்

  எனது பையன் தனது காலை பீரோக்கடியில் விட்டு நசுக்கி கொண்டான். அவசரமாக மருத்துவமணைக்கு எடுத்து சென்று காண்பித்தோம். நேற்று சம்பாதித்ததைவிட 10 மடங்கு அதிகமாக செலவாகியது

  மெய்யை வருத்தாமல் பிறர் பணத்தில் வாழ்பவர்களுக்கு இதுதான் சோதனை…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • //ஆனர்ல் இவர்கள் கிரக பீரீத்தி செய்கிறார்களா//
   இப்படி எதாவது சமாதானம் சொல்லிக்கொண்டு மக்கள் தொடர்ந்து ஏமாறுவதன் காரணம் அவர்களின் சோம்பேறித்தனமும், பேராசையும், முறையான அறிவியல் கல்வி இன்மையும்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s