கூட்டமோ கூட்டம்…கருப்பு பர்தா
Over population… Traffic and other News
நேற்று விடுமுறை தின்ம், மற்றும் முகூர்த்ததினம் ஆகையால், ஒரு நண்பரின் மகளுக்கு திருமணத்தில் கலந்து கொள்ள பழக்கப்பட்ட ரூட் பஸ்ஸில் செல்ல வேண்டி வந்தது… அந்த பேருந்தில் கிட்டத்தட்ட ஆறுவருடங்கள் தினந்தோறும் சென்று வந்தமையால் கண்டக்டருடன் நல்ல பழக்கம். அப்புறம் வேலை நிமித்தம் சுமார் 7 வருடங்கள் தொடர்பு அறுந்து போனது ( வேறு ஒரு ரூட்டில் தினந்தோறும் போய்வந்ததால்). எதிர்பாராமல் நேற்று மீண்டும் அதே பழைய ரூட்டில் பேருந்தில் பயணிக்க வேண்டி வந்தபொழுது, எதர்பாராததருணத்தில் கண்டக்டர் அடையாளம் கண்டு கொண்டு மிகுந்த நலம் விசாரித்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் தினந்தோறும் எத்தனையோ ஆயிரக்கணக்கான பயணிகளை சந்திப்பவர் இத்தனைக்கும் அவவ்ளவாக பழக்கம் இல்லாதவர், ஞாபகம் வைத்திருந்து நலம் விசாரித்தது மிகுந்த ஆச்சரியமும், எளிமையானவர்கள் மேன்மக்களே என்பதை இன்னொரு சம்பவமும் இதேபோல் நடந்ததுள்ளது. புதுக்கோட்டையில் பணியில் இருக்கும் பொழுது தினந்தோறும், ஒரு ஓட்டலில் சாப்பிட செல்வதுண்டு, அங்கே பரிமாறுபவர் அந்த ஊரைவிட்டு வந்து 5 வருடங்கள் கழித்து அதே ஓட்டலில் சாப்பிட சென்றபொழுது அடையாளம் கண்டுகொண்டு மகிழ்ச்சியை பரிமாறினார். ( என்ன வாழ்க்கை… நம்மை அறியாமலே பிறரின் கவனத்தில் நாம் இருக்கிறோம் என்பதற்கு இது அடையாளம்.)

வழக்கத்துக்கு மாறாக வரவர அனைத்து பகுதிகளிலும் எக்கச்சக்க டிராபிக் விழிபிதுங்குகிறது… எஙகு சென்றாலும் கூட்டம், ஷாப்பிங்போனா, மளிகை சாமான் வாங்க போனா, ஐஸ்கீரிம் சாப்பிட போனா, அட பெட்ரோல் போட போனாக்கா கூட குறைந்தது 10 நபர்களுக்கு பின்னால்தான் நாம் இருக்க வேண்டிஇருக்கிறது. மக்கள் தொகை எக்கச்சக்கமாக வளர்ந்து போய்விட்டது. எனது திருமணத்திற்கு முன்னால் 90 களில் ஒரு குழந்தை போதும் என பலர் இருப்பதை பார்த்திருக்கிறேன். பிறகு 2000ல் மீண்டும் இரண்டு குழந்தைகள் அவசியம் என்பதுபோல் ஒவ்வொரு புதிதாக திருமணம் ஆகியிருப்பவர்களும் சொல்லி வைத்ததுபோல் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

நம்பிக்கை அளிப்பதுபோல் ஆரம்பித்திருக்கும் மோடிஜியின் அரசு இந்த குடும்பகட்டுப்பாடு விஷயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது போல் தோன்றுகிறது. அப்புறம் இன்னொரு விஷயம், முஸ்ஸீம்கள் மோடி அரசு வந்ததில் மிகவும் காண்டாக இருக்கிறார்கள் என்பது கண்கூடாக்தெரிகிறது. எனது நண்பர் தனது பைக்கில் மோடி ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருந்தார். முஸ்ஸிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று திரும்பினால், மோடி ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல், எம்எஸ்ஓ எனப்படும் டிவி ஆபரேட்டர் முஸ்லீம் ஆக இருப்பார் போல, நேஷனல் சானலில் மோடியும் ராஜபக்ஷேவும் கைகுலுக்குவதுபோல் ஸ்டில் செய்து ஒருவாரமாக வைத்திருக்கிறார். மக்கள் கொதிப்படைய வேண்டும் என எதிர்பார்க்கிறார் போல…. இன்னொரு விஷயம்… நேற்று மாதாந்திர மளிகை சாமான் வாங்க வழக்கமான சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தேன். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கருப்பு பர்தா அணிந்த கிட்டத்தட்ட 25 பேர் ஆண்களும், பையன்கள், பெண்கள் என கூட்டத்தில் அலைமோதி பிறரை விருப்பதேர்வு செய்ய இடைஞ்சலாக இருந்ததாகவே படுகிறது… ( என்னவோ சந்தேகம் தான்.)



