அஞ்சான்…திரைக்கதைவசனம் … திரைவிமர்சனம்.
anjan, kadai thiraikadai vasanam direction … Tamil Film Review..
1. அஞ்சான்…
இந்தப்படத்தைப்பற்றி சொல்வதென்றால், தாதா ராஜீ ( சூர்யா ), தாதா சந்துரு ( துப்பாக்கியில் வந்த வில்லன்) இருவரும் நண்பர்கள்.. ஒருவருக்குகொருவர் உயிர் நண்பர்கள்.. மும்பையில் இஷ்டத்திற்கு தாதாவேலை செய்துகொண்டிருப்பவர்கள்… இடைஇடையே போலீஸ் கமிஷனரின் பொன்னு ஓடி போய்விட, ஒரு சந்தர்ப்பத்தில் இவர்கள் தான் கடத்திவிட்டார்கள் என கமிஷனர் முறைக்க, இதில் ராஜீ… கொஞ்சம் கொஞ்சமாக இளித்துக்கொண்டே இருக்கும் சமந்தாவை காதலிக்க ஆரம்பிக்க, ஒருசமயம் கோவாவிற்கு ராஜீ.. சமந்தா பாடிக்கொண்டே சென்றுவிட இடையில் கூட இருக்கும் குட்டித்தாதாக்களால் சந்துரு கொல்லப்பட, திரும்பிவரும் ராஜீவை போட்டுதள்ளி ஆற்றில் வீச… படம் ஆரம்பத்தில் இருந்து ராஜீ வோட தம்பி என்று சூர்யா எண்ட்ரி ஆகி… தாதா கூட்டத்தில் சந்துருவை போட்டுத்தள்ள என்ன காரணம், யார் போட்டார்கள் என படிப்படியாக கண்டுபிடித்து அவர்களைப்போட்டுத்தள்ளுவதுதான் அஞ்ஞான்… மற்றபடி சொல்லும்படி எதுவும் இல்லை…70களின் இந்திப்படத்தைப் பார்த்ததைப் போல் இருந்தது.
2. கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் …
இந்த தலைமுறை இயக்குநர்களின் வரிசையான உறிட்களைப் பார்த்து, 90களின் புதியபாதை அமைத்த ஆர். பார்த்திபன் புலியைப் பார்த்து பூணை சூடு போட்டுக் கொண்ட படம்.. எதிர்பார்த்த அளவிற்கு எந்தவிதமான அதிகபட்ச நகைச்சுவையோ புதுமையோ இல்லை. முதல் காட்சியில் விசால் வெள்ளத்தில் சிக்சியிருப்பது, டாப்ஸி குண்டுமழையில் சிக்கிக்கொள்வது, விஜய்சேதுபதி நடுத்தரக்குடும்பத்தின் காட்சி கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.. சீன்சொல்ல அருதபழைய காலத்து சினிமாவிலிருந்து தற்போது வரை சினிமாவில் இருக்கும் தம்பிராமையா, இந்தகாலத்து 3 பசங்க 1 பொன்னு, இளைய இயக்குநரின் மனைவி (ஐடி கம்பெனி சம்பளம்) அதனால் கதை டிஸ்கஷன் என்று படம் முழுக்க பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்பொழுது நடக்கும் சம்பவங்களே படம்… முடிவில் கதைக் கிடைக்காமல், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களே கதையாக்கி யூடிவி பைனான்ஸிடரிடம் சொல்கிறார்கள்.. பைனான்ஸியரின் முடிவு என்ன… என்பது யாருக்கும் தெரியாது… ? கடைசி 3 அல்லது 4 ரீல்களில் ஆர்யா, அமலாபால் காட்சிகளாக வந்து செல்வது கொஞ்சம் ஆறுதல்… மற்றபடி… புதிய ஒயின் பழைய குடுவையில் என்பதே சரி….