வீடு பாதியில் நிற்கிறதா… ஜோதிட டிப்ஸ்

வீடு பாதியில் நிற்கிறதா… ஜோதிட டிப்ஸ்
house construction stoped … Jothida Remedy

ஒரு சிலருக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் அருளால், சிறப்பான மனைவியும் மனையும் அமைந்து நினைத்த மாதிரி நினைத்த
இடத்தில் வீடு கட்டும் யோகம் செயல்பட்டு, சிறப்பான வீட்டைக் கட்டி முடித்துவிடுவர்…
a2
1. சிலரால் தாம் ஆசைப்பட்டவாறு வீட்டை கட்டி முடிக்க இயலாது.
2.வீட்டைக்கட்டியும் அந்த வீட்டில் குடியிருக்க வாய்ப்பு அமையாது.
3.வீடு ராசி இல்லாமல் இருத்தல்
4.வாஸ்து பிரச்சினை போன்று
5.வீட்டினால் கடன்பிரச்சினைகள் தொடர்தல்

https://drive.google.com/file/d/0B9DGbIqH0NUORzFZU3RMVVhwUHc/edit?usp=sharing
மொபைல் போன்மூலம் கூட டவுன்லோடு செய்து கேட்கலாம்.

என சிலகாரணங்கள் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஜோதிடரால் பரிந்துரை செய்யப்பட்ட
ஆலய தரிசனம் மற்றும் அங்கிருந்து ஒரு சிறுகல் பெற்று வந்து வீடு வேலையில் கலந்து விட்டால்,
பிரச்சினைகள் தீரும் என தெரிவிக்கிறார்.. தேவைப்படுபவர்கள் முயற்ச்சிக்கலாம்.

நன்றி. ஜோதிடர்.
a1

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மஉறாலயச பட்சம் அமாவாசை ..அனைத்து ராசிகளுக்கும் பரிகாரங்கள்

மஉறாலயச பட்சம் அமாவாசை ..அனைத்து ராசிகளுக்கும் பரிகாரங்கள்
MAHALAYA PATCHAM – AMMAVASAI – ALL RASI PARIKARANGAL
வருகிற அமாவாசை மிக சிறப்பான ஒன்றாகும்.. ஆன்மீக வாதிகளே, இந்த அமாவாசை
அன்றும் தொடர்கிற நவராத்தி நாட்களிலும் அனைத்து ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கான பரிகாரங்கள் இங்கே ஒரு ஜோதிடரால் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
a1
கதை.. மகாபாரப் போரில் கர்ணன் கொல்லப்பட்டு மேலுலகிற்கு செல்கிறார், அப்பொழுது எமதர்மன் விடுப்பில் (?) இருந்ததால், இந்திரனே எமதர்மனின் பொறுப்பில் இருக்கிறார். கர்ணனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறார்கள்,உணவருந்த தட்டில் வைரமும், தங்கமும் வைடூரியமும் தறுகிறார்கள். அதைக்கண்டு செறுக்குற்ற கர்ணன், இந்திரனிடம்முறையிட, இந்திரனோ, நீங்கள் எவ்வளவோ தான தர்மங்கள் செய்திருந்தாலும், உன் முன்னோர்க்குண்டான முறையான திதிகளையும் பித்ரு பூஜைகளை செய்யாததல் உணக்கு இதுதான் வாய்த்திருக்கிறது. எனினும், நீ இந்த மஉறாலய பட்சக் காலத்தில் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய தர்பணைகளை செய்துவிட்டு வந்தால், மீண்டும் பாவங்கள் நீங்கி உணவு கிடைக்கஏற்பாடு செய்கிறேன் என்றாராம்.

https://drive.google.com/file/d/0B9DGbIqH0NUOZlRCLTdOZjJwUDg/edit?usp=sharing

நாம் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், பித்ருவாவது சத்ருவாவது ஆனால், உண்மையில் முன்னோர்களை வழிபடுபவர்களும், பெரியோர்களை மதிப்பவர்களுக்கும் பல பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது. திருட்டு பயம், கொள்ளை, நோய்கள், விபத்துகள், முன்னேற்றமின்மை போன்றவைகளிலுந்து தப்ப இந்த ஆடியோ பைலில் குறிப்பிட்டுள்ளவாறு அவரவர் ராசிகளுக்கு ஏற்பதேவைப்படும் பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.
a2
நன்றி.. மேற்கண்ட உரையை நிகழ்த்திய ஜோதிடருக்கு

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

டிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா ?

டிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா ?
Fake products in TV advt.

சமீப காலங்களில் 100 கணக்கான சேனல்கள் தங்கள் பொழப்பை ஓட்ட even Discovery Channel
போன்றவைகள் கூட தங்கள் பிழைப்புக்காக பல டெலிமார்க்கெட்டிங் விளம்பரங்களை உபயோகப்படுத்துகிறது. இவற்றில் 95 சதவீதம் மிகவும் போலியான மார்க்கெட்டில் மலிவான கிடைக்கும் பொருளையே வேறுபெயரில பொய்யான உறுதிமொழியுடன் சைடு எபக்ட்களை உருவாக்கும், நாட்டு மருந்துகள் என்ற பெயரில் கெமிக்கல்களையும், ஒன்றுக்கும் உதவாத ஆயில்களையும் விற்பனை செய்வதாகத் தெரிகிறது.
q1
1. எனது, மகளின் நண்பி 50 கிலோ இருந்தாராம், எடையை குறைக்கவேண்டி டிவி விளம்பரத்தில் வந்த புரேட்டின் பவுடரை வாங்கி சாப்பிட்டதில் சடார்ன்னு 20கிலோ எடையாக ஆகிவிட்டாராம் ஆனால்,
உடலில் உள்ள எல்லா பாகங்களும் சுருங்கி கிட்டத்த்ட்ட 1 வருடம் மருத்துவமனையில் அட்மிட் ஆகி
இன்னமும் நார்மலுக்கு வரமுடியவில்லையாம்.. எச்சரிக்கை.

2. வழக்கமான முடிவெட்டிவிடும் நண்பரின் கடைக்கு சென்றிருந்தேன், நண்பருக்கே வழுக்கை
ஆனால், விலை உயார்ந்த எருமாமாட்டின் போன்ற ஆயில்களை வாங்கித்தடவ வசதியில்லை. வாய்ப்பாக ஒரு கஸ்டமர் மேற்கண்ட ஆயிலை வாங்கி தடவி விடசசொல்ல இவரும் கொஞ்சம் தனக்காக பயன்படுத்தி பார்த்திருக்கிறார் 3 மாதமாக கிட்டத்தட்ட 10000 ரூபாய் செலவில்… 3 மாதங்களில் கொஞ்சம் நஞ்சம் இருந்த முடிகளும் விழுந்திருக்கிறது. ஆனால் புதிதாக வளரவில்லை..

3. போன்மூலம் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது, 2500 மட்டும் டேக்ஸ் கட்டி காலக்ஸி ஸ்மார்ட் போன் 25000 மதிப்புடையதை வாங்கிக்கொள்ளுங்கள் என பக்கத்து வீட்டு அம்மணியிடம் சொல்ல, அடித்து பிடித்து மாதாந்தாந்திர சேமிப்பை நிறுத்தி பணத்தை எடுத்துக்காத்திருந்தால் வந்ததோ காலக்ஸி டெல்லி செட் ஸ்மார்ட் போன். ஒரு சிலருக்கு தனலட்சுமி எந்திரம் என மாற்றி வருவதும் உண்டு.. ஏமாறாதீர்கள்
q2
4. டெலிமார்க்கெட்டிங்கில் உள்ள பல பொருள்கள் பிளாட்பார்ம்களிலும், வீட்டு உபயோகப் பொருட்காட்சிகளிலும் மிகச் சல்லிசாக கிடைப்பதைக் காணமுடிகிறது…. ஏமாறாதீர்கள்…

5. போதைபழக்கத்தை நீக்குகிறேன், சர்க்கரை வியாதியைப் போக்குகிறேன் என இப்போ ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. முழுக்க ஒரியா, மராட்டி போன்ற இடங்களில் இருந்து துணை நடிகர்கள் கூட்டத்தை களமிறக்கி பிராடக்ட்டைப்பற்றி ஆகோஓகோன்னு ஒரு இத்துபோன காம்பியர், குண்டு நடிகையை வைத்து விளம்பரம் வருகிறது… அதுவும் டூபாக்கூர் தான்னு சொல்லிக்கிறாங்க… உண்மையான மருந்துகள் நாட்டில் கிடைக்கும் ஆனால் இவர்களிடத்தில் இல்லை… பணத்தை வீணாக்காத்திருக்க விழிப்புடன் இருக்கவும்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

சலீம்… சூப்பர்வ் ரஜினிபிலிம்….

சலீம்… சூப்பர்வ் ரஜினிபிலிம்….
Saleem … Tamil Film Review.

அப்பாடா, ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு சாப்ட் பட் விறுவிறுப்பான ஒரு தமிழ் ஆக்சன் படம் பார்க்க சலீம் வாய்ப்பளித்துள்ளது. சலீம் முந்தைய படத்தின் தெடாச்சியாக தெரியாமல் ஜஸ்ட் கேரக்டர் மட்டும் தொடர்கிறது. ஆரம்ப காட்சியில் இருந்தே கதாநாயகியை பார்த்து ஜொள்ளும் விஜய் ஆண்டனி, தொடர்ச்சியான காட்சிகளில் கதாநாயகி ஓவர் அட்ராசிட்டியையும் பொறுத்துக்கொள்கிறார்.. திருமணம் வரைக்கும் செல்லும் நட்பு, திடீரென கதாநாயகியால் நீ ரொம்ப நல்லவனாக இருப்பது பயமாக இருக்கிறது என்று கூறி பிரேக்அப் செய்யப்படுகிறது.
a1
அதே நேரத்தில், பணிபுரியும் மருத்துவமணையில் சேவையை மருத்துக்கூட கொள்ளாம்ல் பணம் கொழிக்கும் நிறுவனமாக மாற்றி அதனையும் நிறுவனர் பார்ட்டி வைத்து கொண்டாடியும், அந்த கொண்டாட்டத்தில் டாக்டர் சலீமை கேவலப்படுத்தி சிறுமைப்படுத்துவதைக் தாங்க இயலாமல் பொங்கி எழுகிறார் கதாநாயகன்… தொடர்ச்சியாக ஒன்வேயில் வரும் போலிசிடம் தகறாறு செய்ய, போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேர்கிறது.. இதனால், திருமணம் நின்றுவிடும் சூழ்நிலையில் போலிசிடம் இருந்து தப்பித்து (இடையில் இவறால் காப்பற்றப்படும் ஒரு கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமணையில் சேர்த்திருந்தும் காணாமல் போய்விடுகிறார் ) இதன்தொடர்ச்சியாக, சக டாக்டர்களை அடித்து உதைத்தும், ஐந்து நட்சத்திட ஓட்டலில் கற்பழிக்கப்பட உள்ள ( இது மட்டும் எப்படி கதாநாயகனுக்குத் தெரியும் ? ) பெண்ணை காப்பாற்றி 4 இளம்தடியர்களை (வழக்கமான உள்துறை அமைச்சரின் மகன் ஒருவர்) பிளாக்மெயில் செய்து காணாமல் போன பெண்ணின் பிணத்தை கண்டுபிடித்து … கடைசியில் தான் தப்பித்து அமைச்சர் மகனை என்ன செய்தார் என்பதே கதை….
a2
விஜய் ஆண்டணி.. சும்மா உம்மானாட்சியாக வந்தாலும், இதுதான் என்னால் முடியும்ன்னு வசனத்தால் அனைத்துக்காட்சிகளிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். கதாநாயகி ( பேர் என்னவோ ? ) கொஞ்சம் ஸ்மார்ட்தான் அந்த வெள்ளைத் தோலுக்கே உரிய திமிர் எல்லாத்திலேயும் அழகாக வெளிப்படுத்துகிறார். படம் பார்க்கும் நமக்கே, பளார்ன்னு ஒன்னு விடாலாம் போலிருக்கிறது… நண்பராக வரும் சாமிநாதன் அழகாக செய்கிறார். படப்பிடிப்பு நேர்த்தியும், இசையும், சம்போ பாடல் போன்று பல பாடல்களும் கேட்க நன்றாக இருக்கிறது…. வாழ்த்துக்கள் சலீம் பாய்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu