நாய்கள் ஜாக்கிரதை… திரை விமர்சனம்.
naaikal jakkirathai … Tamil Film Review
சிறுவயதில் ஆட்டுக்கார அலமேலுக்கு கூட்டிப்போக சொல்லி அடம்பிடிக்க, எங்க மாமா வீட்டில் காசு வாங்கிட்டு அப்படியே ஆட்டுக்கார அலுமேலு தியேட்டர் கூட்டிபோய், ஒரே கூட்டமாக இருக்கிறது என காண்பித்து, பக்கத்து தியேட்டரில் ஜெய்சங்கர் நடித்த டாக்ஸி டிரைவர் ( அதிரடி திரைப்படம் அப்பொழுது ) கூட்டி சென்றது இன்னும் நினைவிருக்கிறது. சிபி சத்யராஜ், நடுவில் காணாமல் போயிருந்தாலும், உட்கார்ந்து யோசித்து ஒரு உறிட் கொடுத்திருக்கிறார் தற்சமயம் ஐடா நாயுடன்,
கதை இதுதான், சிபியும், இன்னொரு இளவயது போலீஸ் அலுவலர்களும் ஜாலியாக கோயம்புத்தூரில் பணிபுரிகிறார்கள்.. மாமூல் கூட வாங்குவது இல்லை. அப்படி இருக்கையில் சத்யமங்கலம் செல்லும்வழியில் உள்ள கைவிடப்பட்ட பாக்டரியில் ஒரு பெண்ணின் அலறல் கேட்டதாக, ஒரு லாரி டிரைவர் சொல்ல, இருவரும் அங்கே செல்கிறார்கள் நடந்த சண்டையில் போலீஸ் நண்பரை கைதவறி சிபி சுட்டுவிட இறந்துவிடுகிறார். வில்லன் கோஸ்டி 2 மாதங்கழித்து சிபியின் காதலியை கடத்தி வைத்து மண்ணில் பெட்டியில் வைத்து புதைத்து வெப்கேமரா மூலம் லைவ் ஆக இறப்பதை பார்க்க வழியும் செய்துவிடுகிறது. கூட்டிகழித்து கணக்கு போட்டு சுமார் 6 மணி நேரத்திற்குள் பெட்டியை மீட்க கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரே, போலீஸ் நண்பரை சுட்டுவிடுவதால், சஸ்பென்ட்டில் வீட்டில் குடித்துகொண்டே பொழுது போக்குபவரிடம் பக்கத்து வீட்டு மிலிட்டரி ஜெனரல் தன்னுடைய நாயை மிலிட்டரி நாயை 4 நாட்களுக்கு பார்த்துகொள்ள சொல்லி சென்றாலும், நாயை அடித்து விரட்டிவிடுகிறார். மறுநாள், தெருப்பையன்கள் நாயின் கூண்டுக்குள் வெடியை கொளுத்திபோட, சிபி போதையிலேயே போய் நாயை காப்பாற்ற, அதற்குப்பின் நாய் சிபியை எஜமானராக ஏற்று ( மிலிட்டரி ஜெனரல் இறந்துவிடுவதால் ) வீட்டை இரணகளம் செய்தாலும் நண்பராகிறது. கடத்திசெல்லப்பட்ட காதலி ஊட்டியில் புதைக்கப்பட்டிருப்பது தெரிந்து, நாய் சகிதம் ஊட்டி சென்று அடி வாங்கி அடி கொடுத்து கடைசியில் நாயை பறிகொடுத்து காதலியை மீட்பதே கதை.
மனோவும், சிறிய பையனும் சேர்ந்து சிபியை கலாய்ப்பது அருமை. இசையும், கேமராவும் அலுப்பில்லாமல் பார்க்கவும், நன்றாக பழக்கப்பட்ட நாய் சிபியை விட நன்றாக நடிக்கிறது. இதேபோல் தொடர்ந்து நா.ஜா,,2,3,4 ன்னு பல படங்கள் எடுக்கலாம்.. குடும்பத்துடன் நீண்டநாளுக்குபின் குழந்தைகள் குதுகலமாக வெளியில் மழை பொழிய உள்ளே ஏசி நடுங்க டால்பிஅட்மோஸ் மழை பெய்யும் ஒலியை ஒலிக்க பிளாக்பாரஸ்ட் கேக்கும், பெப்சி கப்பும் கைகளில் தவழ… சிகப்பு காந்தி நோட் ஒன்று முழுக்க காலியாக அவசியம் நீங்களும் பாத்துடட்டு நாம ஜாக்கிரதைன்னு சொல்லாம்.