கயல்.. திரை விமர்சனம்.
kayal .. tamil film review
டிசம்பர் 26, ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம், இந்த தலைமுறையினாரால் மறக்க இயலாத ஒரு சம்பவம், இந்தத்திரைப்படம் அந்த சம்பவத்தை மையமாக வைத்தே புனையப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஆரம்பகாட்சிகளில் ஏகமாய் இயற்கை காட்சிகளின் ஊடே பயணித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்பிற்கு கொண்டு சென்று, மறக்காமல் ஏமாற்றியும் விடுகிறார்கள்.. நாயகன், அவருடைய நண்பர் இருவரும் வழிபோக்கிகள், ஆறுமாதம் ஏதாவது பணிபுரிந்து தேவையான பொருளைச் சேர்த்துக் கொண்டு பிறகு ஆறுமாதம் இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களையும் சுற்றிபார்த்து மனதை நிறைக்கும் வாலிப வழிபோக்கிகள்.. வால்பாறையில் இயற்கையை பருகிய கையோட கோயம்புத்தூர் புகைவண்டிநிலையத்தில் காவலர் ஒருவரை கலாய்க்க, அதனால் தீவிரவாதிகள் என முத்திரைக்குத்தி அலைக்கழிக்க போகிறார்கள் என்று பார்த்தால். ஊகும்.. காவல் உயரதிகாரிக்கே பாடம் எடுத்து, ஏகப்பட்ட ( அதாங்க இந்த உலகில் பணம் முக்கியமல்ல… நாம் அனுபவித்த அனபவங்கள், பார்த்த இடங்கள் நினைவுகள், பசுமையான காலஓட்டம் ஆகியவையே முக்கியம் என 15 நிமிடமாக பாடம் சொல்லிக்கொடுத்து நமக்கே போதும் மக்கா,
அடுத்து என்ன .. என்று கேட்கும் அளவிற்கு ) கலாய்ப்பிற்கு பின், விடுதலையாகி ஆரல்வாய்மொழி ஊரில் ( கன்னியாகுமரி போகும் வழியில்) கரும்புத்தோட்டத்தில் குளித்து, கரும்பை வெட்டி சாப்பிடும் பொழுது ஒரு இளைஞியும், மூன்று இளைஞர்களும் ஓடிவர, இவர்களைப்பார்த்த அரண்டுபோய் கொண்டுவந்த பையை போட்டுவிட்டுச் செல்ல, அந்த பையை அவர்களைத் துரத்திபிடித்து ஒப்படைத்துவிட்டு திரும்பும்பொழுது, இவர்களை ஒரு ரவுடி கும்பல் துரத்திபிடித்துக் கொண்டுபோய் ஒரு ஜமீன்வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்த, தூதாக வந்த அந்த வீட்டின் வேலைக்காரி (கயல்)யை பார்த்து கதாநாயகன் அனைவருக்கும் முன்னே காதலைச்சொல்ல, ஜாதிக்கு முக்கியம் தரும் அந்த கிராமத்தினரால் பெட்ரோல் ஊற்றி கொளுத்த இருக்கும் சூழ்நிலையில், காட்சிகள் மாறி கதாநாயகன் மற்றும் நண்பரை விடுதலை செய்ய, கன்னியாகுமரிக்கு செல்கிறார்கள். இடையே, கயல் கதாநாயகன் மேலே காதல் வயப்பட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறி கதாநாயகனை சந்திக்க, கன்னியாகுமரி செல்ல, கதாநாயகன் கன்னியாகுமரியில் இருந்து காதலியை கைப்பிடிக்க ஆரல்வாய்மொழிக்க செல்ல, இடையில் நடக்கும் ஜாதிக்கலவரத்தில் இருவரும் ஒரே வாகனத்தில் பயணத்தில் சந்திக்க வாய்ப்பில்லாமல், ஆரல்வாய்மொழிக்கு சென்று காதலி கன்னியாகுமரிக்கு சென்றிருக்கிறார் என்றும் காதலிக்கிறார் என்றும் அறிந்து கன்னியாகுமரிக்கு திரும்பவும் வருகிறார்கள். டிசம்பர் 25, கிருஸ்துமஸ் விழா அன்று அருகருகே காதலனும், காதலியும் இருந்தும் சந்திக்க விடாமல் கூட்டம் அலைமோதி, அடுத்தநாள் காலை டிசம்பர் 26, காலை சுனாமி வருவதற்கு முன் கடல் உள்வாங்க, எதிர்பாராத விதமாக இருவரும் ச்ந்தித்து கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்ய, அடுத்த சில நிமிடங்களில் சுனாமி வந்து விடுகிறது… ( சுனாமி காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது ) ஏகப்பட்ட இடிபாடுகளில் சிக்கி, அடிபட்டு ஒரீடத்தில் படுத்திருக்கும் கதாநாயகனை பிணம் என்று எடுத்துசெல்வதைப்பார்க்கும் கயல் கதற, கதறலைக்கேட்ட பிணம் அதாங்க நம்ம கதாநாயகன் முழித்துக்கொண்டு அடித்துபிடித்து ஓடிவந்து கட்டிபிடிக்கிறார்….
இந்தப்படத்தைப்பொறுத்த மட்டில் கேமராதான் கதாநாயகன், அப்பா பாலைவனம் ஆகட்டும், பசுமையான சோலைகளாகட்டும், சாதாரண இடிந்த கட்டிடம் ஆகட்டூம், காய்ந்த கரும்புத்தோட்டமாகட்டும், குப்பைமேட்டைக்கூட மிக அழகாக படம்பிடிக்க முடியும் என நிரூபித்திக்கிறார்கள். சபாஷ்.. காவல்துறை மீது என்ன கோபமே தெரியவில்லை எதார்த்தமாக காண்பிக்கும் விதமாக, பயங்கரமாக கலாய்த்திருக்கிறார்கள்… ஆரம்ப காட்சியில் சிக்கிக்கொள்ளும் எல்ஐசி ஏஜெண்ட் மீது நமக்கே பரிதாபம் வந்துவிடுகிறது. லாரிடிரைவவர் வில்லனாக இருக்குமோ என்று கவலைப்பட்டும், அண்ணாவாக மாறிவிடும் தருணம் (அருமை !), போலீஸ் அதிகாரியின் கண்டிப்பு, இளம்பெண்களை சுற்றுலா அழைத்து வந்திருக்கும் குண்டு காமெடி ரொம்ப ஸ்டிரிக்ட் ஆக இருப்பதும், இளம்பெண்கள் பாதுகாப்பு தருவதும், உதவுவதும், தேவையில்லாமல் குடிகார லாட்ஜ் உதவியாளர், என பல கதாபாத்திரங்கள் வந்தும் படத்தை நகர்த்துகிறார்கள். ஆக, கயல் வருட இறுதியில் ஒரு அருமையான காதல் ரசம் சொட்ட சொட்ட மனங்குளிரும் படமே…