டார்லிங் … திரை விமர்சனம்

டார்லிங் … திரை விமர்சனம்
Darling Tamil Film Review
பொங்கல் லீவில் ஏதாவது ஒரு படத்தையாவது பார்த்தாகனும் என்னும் எழுதப்படாத விதிகளில் ஒன்றை நிறைவேற்ற குடும்ப சகிதமாக டார்லிங்க்கு ( அப்பத்தான் பேய் பயம் குழந்தைகளுக்கு போக்கனும்ட்டு, ஆனால் உண்மையில் இந்தப்படத்தால் குழந்தைகள் கற்றுக்கொண்டது என்ன என்பதை கடைசி வரிகளில் சொல்கிறேன் ).
போய் சேர்ந்தோம். இசை அமைப்பாளர் ஜி.வி கதாநாயகனாகவும், வடக்கத்தி கதாநாயகி இறக்குமதி செய்யப்பட்டு பேயாகவும், கதாநாயகியாகவும் டூயல் நடிப்பில் கலக்க, கதை இதுதான்..
c1
கதைக்காக ரொம்ப சிரமப்படவில்லை, நாம் காலம்காலமாக பார்த்து வந்த தமிழ்சினிமாவில் இருந்தே சுடப்பட்டுள்ளது. அதாவது, கற்பழிக்கப்ப்ட்ட பெண்ணின் அண்ணனோ, காதலனோ, யாரோ ஒருவர் வில்லன்களை பழிவாங்குவதுதான்… இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக பேய் அந்த வேலையைச் செய்கிறது.
ஒரு இளம் ஜோடி ( காதலர்கள் ? ) ஈஸ்ட்கோஸ்ட் ரோட்டில் உள்ள கடற்கரை பங்களாவிற்கு செல்லும்பொழுது 5 பொறுக்கிகளால் காதலனின் முன்னால் கதறகதற கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.. சிறிது காலம் கழித்து, ஜிவி, அவரது நண்பர் ( சிரிப்பு நடிகர், பர்மான்மென்ஸ் பிரமாதம் ), அவரது ஒருதலை காதலி என மூவரும் தற்கொலை செய்துகொள்வதற்காக அந்த பங்களாவிற்கு வருகிறார்கள் இதற்கிடையில் கருணாஸ் இந்தக்கூட்டத்தில் இணைந்துகொள்கிறார். வாட்ச்மேன் எச்சரித்தும், வேலைக்காரன் பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டும், கங்கம்மா கணக்காக ஒரு பெண் சுடுகாட்டில் இவர்களின் வருகையை முறியடிக்க பூஜை செய்தும், இந்த நால்வர் அணி ஜாலியாக பங்களாவில் தங்குகிறார்கள்.. தற்கொலை செய்துகொள்ள நாட்களை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறார்கள்… இடையில் ஒருதலையாக காதலித்த காதலியின் ஏக்கத்திற்கு பழியான ஜிவி(கதாநாயகன்) இரவு 12.00 மணிக்கு காதலிக்கு முத்தம் கொடுக்க அறைக்கு போகும்பொழுது பேய் காதலியின் உடலுக்குள் புகுந்து கொண்டு ஜிவியை துவைத்து எடுக்கிறது. இப்படியாக படம் முழுவதும், பேயுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்கனவே காதலித்தவர்களை திட்டமிட்டு வரவழைத்து பேய் கையாலயே கொல்லவைத்து, கதாநாயகியின் உடலிலிருந்து பேயை விரட்டிவிட்டு, நம்மையும் தியேட்டரைவிட்டு விரட்டுகிறார்கள்…
c2
படம் முழுக்க பேய் இருக்கிறதோ இல்லையோ, நல்லா சிரிப்பு வருது… பேய்க்கு வித்தியாசமான கெட்டப்பல்லாம் கிடையாது சும்மா பவுடர் அடித்து மின்னல் போல் கோடு போட்டாலே போதும்ன்னு முடிச்சுட்டாங்க, கதாநாயகி நல்லா வாட்டசாட்டமாக இருப்பதே பேய் கெட்டப்புக்கு ஒரு பிளஸ்.. கருணாஸ், பல சீன்களில் எரிச்சல் மூட்டினாலும், ஜீவியின் நண்பர் எப்பொழுதும் கிச்சுகிச்சு மூட்ட தவறவில்லை…
நல்ல எண்டர்டெய்ண்மெண்ட்…. குழந்தைகள் பேயைப்பற்றி அறிந்து கொண்டதைவிட விடலைக்காதலைப்பற்றி விலாவாரியாக அறிந்து கொள்ள இந்தப்படம் ரொம் உதவியது.
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu
World Tamil Blog Aggregator

என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்…

என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்…
Dad is always great ….

இப்பதிவு வா. மணிகண்டன் அவர்கள் அறிவித்த உங்களைக் கவர்ந்தவரைப்பற்றிய பதிவுகளில்

மசால் தோசை 38 ரூபாய்

    புத்தக வெளியீட்டிற்கான பரிசிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்க்சியுடன் தெரிவிக்கிறேன்.
    http://www.facebook.com/vaa.manikandan
    http://www.nisaptham.com/
    பார்க்க…
    …………………………………………………………………………………………………………
    வழக்கமா எல்லாரும் அம்மாவிற்கே ஓட்டு போடூவார்கள்… அப்பாவின் மீது கரிசனம் இருந்தாலும், நெக்ஸ்ட் டூ மதர் என்ற ரீதியில் தான் கவனம் இருக்கும். என்னைப்பொருத்தவரையில் எனது முதல் கவனம் அனைத்தும் அப்பாவிற்கே சேரும்… ஏன்.. எப்படி? சிம்பிள்… அம்மாவிற்கு நேரமில்லை என்ற ரீதியில் எப்பொழுதும் கவனம் இல்லாமல் தனது பணியைப் பற்றியே சிந்தனை கொண்டு பிள்ளைகளை ஒதுக்கி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடிக்கொண்டே இருந்ததுதான். எத்தனையே மாலை நேரங்களில் பள்ளிவிட்டு வந்தும் வெறுமையான வீட்டை யாருமில்லாத வீட்டின் கதவைத்திறந்து தானே இருப்பதை கொட்டிக்கொள்ளும் பழக்கம், அடுத்த வீட்டில், அன்புடன் மாலைப்பொழுதில் அம்மாவின் கைவண்ணத்துடன் செய்துதரும் சிற்றுண்டிக்கு மணம் ஏங்குகையில், ஓரளவிற்கு மனதை அறிந்தவாறாக, அப்பா ஆபந்பாந்தவாறாக வந்து சேர்கிறார் கையில் அய்யர் கடை தோசை, சுவையான சாம்பார் சட்னியுடன்… அப்பப்பர் அந்த தருணங்கள் உண்மையில் தற்சமயம் 5 ஸ்டார் ஓட்டலில் கிடைக்கும் விருந்தைவிட மகிழ்ச்சியை அளித்தது.
    bbb
    சைக்கிள் விட தெரியாத காலத்தில் தைரியமூட்டி, கீழே விழுந்ததாலும் காயங்களுக்கு மருந்துப்போட்டு தெம்பாக சைக்கிளை ஓட்டச் சொல்லி, குரங்குபிடல் போட்டாவது தெருவை மட்டுமல்ல, கடைவீதிக்கும் போய்ட்டுவா ராசா என அனுப்பிவைப்பதில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே… கூடுமானவரை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வந்து விட்டு செல்ல முடியவில்லையென்றாலும், அக்கறையாக பள்ளியில்நடந்ததைப் பற்றி கேட்டறிந்து, வகுப்பு ஆசிரியரை கண்டிப்பாக ஒருமுறையாவது நேரில் சந்தித்து ( இப்பொழுது போல் பேரண்ட்ஸ் மீட்டிங் கட்டாயம் இல்லை அப்பொழுது ) பையனைப்பற்றியும், சேர்மானம் பற்றியும் விசாரித்து வைத்துக்கொள்வார். இருந்தாலும் நாமெல்லாம் மனிதர்கள்தானே, மனம் குரங்குபோல் இஷ்டத்திற்கு யோசித்து… அப்படி இப்படி பசங்களுடன் இணைந்து கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்வதும், அஜால் குஜால் படங்களுக்கு எப்படியாவது சென்று விடுவ்தும், தெரு அண்ணாக்களுடன் இணைந்து பாட்டீல் துளிகளை முகர்ந்தும், அப்பாவிற்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், இதெல்லாம் ஆம்பளைகள் வாழ்வில் சகஜம் என்று தானே திருந்திவிடுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்ததும்… அப்பப்பா….
    aaa
    டூவீலர் ஓட்ட கற்றுக்கொடுத்து பெட்ரோலுடன் வண்டியையும் கொடுத்து, ஊர்சுற்றினாலும் வருத்தப்படாமலும்… விடலைக் காதல் நேரத்தில் கிடைத்த பெண்ணிடம் கடலை போட்டாலும், கண்டும் காணாமலும் இருந்தது அப்பப்பா…. வேலையை நாமே தேடிக்கொள்ள, தேவைப்பட்ட வைராக்கியம் நம்பிக்கையையும் விதைத்ததில் அப்பாவிற்கு வேறொரு டூப் தேவையில்லை. திருமண வயதில், ஓடி ஓடி கடைசியில் நமக்கே நமக்கே பிடித்த பெண்ணை மட்டுமே கட்டிவைத்ததும், பின்னால் பிரச்சினைகள் உருவானபோது வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என விடைத்தாலும், இருபக்கமும் சமரசம் பேசி ஒட்ட வைத்துக் கொண்டே இருந்தது.. குழந்தைகள் பிறந்ததும், அன்புடன், ஆசையுடன் எடுத்து சீராட்டியது… பேரக்குழந்தைக்கு மரணவிளிம்பில் ஏற்பட்ட சோகத்தை தாங்காமல் மருத்துமணை ஐசிக்கு வெளியே குலுங்கி குலுங்கி அழுததும்… இன்றும் இதுபோல் அளவிட முடியாத அன்புடன் ஆண்டவனின் அருளுடன் அப்பாவின் அன்பு தொடர்கிறது….
    … சிவபார்க்கவி
    Tamil Blogs Traffic Ranking
    Thenkoodu
    World Tamil Blog Aggregator