என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்
yennai arinthal … tamil film review

படம் தொடங்குவது துபாயில்… (ஏர்போட்டில்) இதைத்பற்றி கதைப்பாரவில் தருகிறேன். ரொம்ப நாளைக்ப்புறம் தல படத்தை பார்க்க ஆர்வத்துடன் சென்றிருந்தோம்…
aa2
ஆரம்பம் 15 நிமிடம் அறுவைதான்… பிளைட்டில் வாந்தியெடுக்கும் அனுஷ்கா …கதை பழைய கதைதான்.. ரௌடிபோல் நடித்து ரௌடிகளிடம் நட்பாகி, பின் அவர்களை போட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி வேடம் அஜித்துக்கு, பிளாஷ்பேக்கில் அவங்க அப்பா நாசரை ரவுடிகள் போட்டுத்தள்ள, மூன்றுமுகம் ரஜினியின் நடிப்பைப்பார்த்து போலிஸ் அதிகாரி ஆகிறார். எக்குதப்பாக ஆஷிஸ் வித்யார்த்தியிடம் விளையாட தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் (திரிஷா ) கன்று மற்றும் பசு ( அதாங்க திரிஷாவிற்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பெண்குழந்தையுடன் விவாகரத்து செய்து இருப்பவர்) என கூடித்திரிகிறார் அஜித்… இடையில் திரிஷாவை போட்டுத்தள்ள, போலிஸ் வேலையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு கன்றுடன் ஊர்சுற்ற கிளம்பிவிடுகிறார்.. திரும்பி வந்தவுடன், போலிஸ்நண்பரின் சிறுவயது மகளை காணாமல் போவதை கண்டுபிடிக்க கேட்டுக்கொள்ள, கன்றும் அனுமதி அளிக்க மீண்டும் பார்ம்க்கு வருகிறார் அஜித். அப்பொழுதுதான் இதயம் தேவைப்படுபவர்களுக்கு சப்ளை செய்யவென சிறுமிகளை கடத்தி கொல்லும் கும்பலை அடையாளம் காண்பதும், அதற்கு தலைவனாக தான் ஏற்கனவே ரௌடிகளிடம் பழகும் போது தோழனாக இருந்த அருண்விஜய் என்பதனை அறிகிறார். கூடுதலாக, துபாயில் இருந்து வரும் அனுஷ்காவை கடத்தவும் திட்டமிட்டிருப்பது தெரியவந்து, அனுஷ்காவை காப்பாற்றவே படத்தின் முதற்காட்சி துபாயில் இருந்து கூடவே பாதுகாப்பாக வருகிறார். ஆனால், இதைப்பற்றி எதுவும் தெரியாத அனுஷ்கா அஜித்தை (உலகிலேயே மிக அழகான ஆண் ?) என ஜொள்ளு விட்டு சுற்றிசுற்றி வருகிறார். அஜித்தின் கன்றையும் கடத்தி பிளாக்மெயில் செல்லும் வில்லன், தொடந்து வருவதற்கு ஜிபிஎஸ் கருவி என போலிஸ் பிரதானங்களுடன் பிற்பாகு மிக மிக விறுவிறுப்பாக சென்றாலும், முதற்பாதி எப்படா முடியும் என காத்திருக்கிறது விசிலடிச்சான் குஞ்சுகள் ( ரசிகர்கள்) பிறகு மனித உறுப்புகளுக்காக கடத்தும் கும்பலுக்கும் அஜித்துக்கும் சேஸ் நடக்க, முடிவில் எல்லாம் சுபம்..
aa3
கௌதம் மேனன் குறைஞ்ச செலவில் எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும் சுமார் 10/15 காட்சிக்கான இடங்களே திரும்பிதிரும்பி வருகிறது. எவ்வளவோ கதைகள் இருக்க, தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்தும் புதுமுயற்சிகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, புகழ்பெற்ற இயக்குனர் தேர்தெடுத்திருப்பதோ பழைய பழிவாங்கும் கதை அதுவும் 10 தமிழ் சினிமாக்களின் கதையை மிக்ஸியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கிறார். இசையும் சுமார்தான்… படப்பிடிப்புகள் பெரும்பாலும் இரவில் வைத்திருக்கிறார்கள். ஒரே இருட்டுக் காட்சிகள்தான் அதிகம். எனினும், அஜித் இளமையாகவும், தெர்ந்தி, நரை முடி என இருவேடங்களிலும், சண்டை காட்சிகளிலும் சோபித்திருக்கிறார்.
என்னை அறிந்தால்… என்னை அறிந்தால் உலகத்தில் போராடாலாம்.. என பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது படம் பார்த்தவுடன்.
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu

ஐ திரை விமர்சனம்.

ஐ திரை விமர்சனம்.
I .. Tamil Film Review..

ஜெண்டில்மேன் சங்கரின் வரவால் தமிழ் சினிமா கொஞ்சம் நிமிர்ந்தது உண்மை, தொடர்ந்து அந்த மாதிரி வித்தியாசங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இந்த முறை ஐ … பட டைட்டிலே கொஞ்சம் என்னவாக இருக்கும்ன்னு பயங்கர பில்டப் கொடுத்தது. தொடர்ந்து பொங்கல் விடுமுறையில் முக்கிய தியேட்டர்களையும் ஆக்கிரமித்தாலும், ஒரளவிற்கு ரசிகர்பட்டாளங்கள் அனைவரும் மாய்ந்து மாய்ந்து பாத்துவிட்டார்கள்.. இருப்பினும் படம் சரியாக போகவில்லை போலிருக்கிறது.
லிங்கேசன்.. விக்ரம்.. சென்னையில் ஒரு சேரியில் வசிக்கும் சாதாரணமானவர், அவருடைய எண்ணமெல்லாம், பாடி பில்டிங் சேம்பியானாக வேண்டும் என்பதே, ஒரு டாக்டர் என்ன காரணத்திற்கோ விக்ரத்தை ஸ்பான்சர் செய்கிறார், பாடி பில்டிங் தாதா ஒருவர் இவர் போட்டியில் ( கதாநாயகன் இல்லையா ? ) கலந்து கொண்டால் எங்கே முதல் பரிசை வெல்ல முடியாதோ என்று எண்ணி வீராப்பு காண்பிக்கிறார்.
B
இப்படி இருக்க, விக்ரம் ஜொல்லுவிடும் மாடல் அழகி மற்றும் சினிமா கதாநாயகிக்கு பாடி கார்ட்டாக செல்ல வாய்ப்பு அமைகிறது. அங்கே, மாடலிங்செய்யும் கூட ஒர்க்பண்னும் ஆண் கதாநாயகியை செக்ஸ் சில்மிஷம் செய்ய, கதாநாயகி திட்டமிட்டு, விக்ரத்தை ஆண் ஒர்க்பண்னும் பகுதியை செய்ய வைக்க பிரயத்தனம் செய்து வெற்றியும் பெறுகிறார்… விக்ரமின் எதிரிகளில் ஆண் மாடலிங்கும், விக்ரமை தயார் படுத்தும் பொழுது மேக்கப் செய்யும் திருநங்கை விக்ரமின் மீது மையல் கொள்ள, விக்ரமோ கதாநாயகியை மொய்க்க, கதாநாயகியோ விக்ரமை வெறுக்க, படம் அப்படியே சீனாவில் நாம் பார்த்து ரசித்து ஆகவேண்டும் என வித்தியாசமான இடங்களை டிஜிட்டலில் சுருட்டிக் திகட்ட திகட்ட படைத்திருக்கிறார். ஆனால், திரும்ப திரும்ப சிகப்பு மலர்களின் பிண்ணனியே ரொம்ப நேரம் வருவது கொஞ்சம் எரிச்சலாகிறது.
A
விக்ரம் மாடலிங் செய்த பிராடக்ட் பிச்சுக்கிட்டுபோக, அந்த பிராடக்ட் போலி எனத்தெரியவற அதைப்பற்றி மீடியாவில் தெரிவிக்கும் விக்ரமிற்கு பிராடக்ட் முதலாளியும் எதிரியாகிறார். ஆக 5 வில்லன்கள் உருவாக, விக்ரமை காலிசெய்ய ஐ என்னும் வைரசை ஊசி மூலம் விக்ரமிற்கு செலுத்திவிட அதன் பயனாய் உருவம் மாறி கொழுக்கட்டை கணக்காக முகமும் உடலும் குறுகி விகாராமாகிறது.. இதற்கிடையில் அபரிதமான அன்பினால் கதாநாயகியும் விக்ரமை உண்மையாக காதலிக்க ஆரம்பிக்க, உடல் மாற்றமானபின்பு, கதாநாயகியை டாக்டர் குறுக்குவழியில் திருமணம் செய்யும் நாளில் மண்டபம் புகுந்து கடத்திவிடுகிறார். அதன்பின்பு, விக்ரமும் கதாநாயகியின் உதவியால் உடல்நலம் பெற்றும் நண்பனின் உதவியால் எதிரிகளை இதேபோல் விகாரமான உருவத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகும் விதமாக பழிவாங்கி பழித்தீர்த்துக்கொள்கிறார். விக்ரமின் உழைப்பு, கதாநாயகியின் அழகு, காமெடியின் சிரத்தை, ரகுமானின் இசை என பலமுனைத்தாக்குதலில் ரசிகரை போட்டுத்தாக்குகிறார்கள்.படம் கொஞ்சம் இழுவைதான்… பிரம்மாண்டமும், பாடல்களும் அசத்தல்… பார்க்கலாம் ரகம்தான்… அடுத்து இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம் சங்கர் சார்.. வாழ்த்துக்கள்
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu
World Tamil Blog Aggregator