மணியான ரத்தினம்…ஓ காதல் கண்மணி … இளமைத்திருவிழா
Oh kadhal kanmani Tamil Film review
அந்த வருடம் 1988, இப்பொழுதுள்ள பல இளைஞர்கள் (ஆண்/பெண்) அப்பொழுது பிறந்திருக்கவே மாட்டார்கள்.. அப்பொழுது தூர்தர்ஷன் மட்டும்தான், வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளியும் ஒலியும் திரைப்பாடல்கள் ஒளிபரப்புவார்கள்.. அந்த தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை முதல் பாடலே, அந்திமழை சாயும் … என்னும் நாயகன் பட பாடல், மழையில் நனைந்து கொண்டு கமலும், சரண்யாவும் குதுகலமாக கொண்டாடும் பாடலை பார்த்த எங்களுக்கு ஏற்பட்ட பரவசத்திற்கு அளவே இல்லை. இப்பொழுது நினைத்தாலும் அந்த பரவச நிலை ஏற்படுகிறது. பல பல சறுக்கல்களுக்கு பின்னால், இளமையை மீண்டும் கொப்பளிக்க வைக்கும் அலைபாயுதே டிரண்ட் செட்டிற்கு பிறகு இப்பொழுதுதான் நமக்கு ஓ காதல் கண்மணியை மணிரத்தினம் கொடுத்திருக்கிறார்.
தி கிரேட் மணி…. ஒவ்வொரு காட்சியும் இயல்பாக லாஜிக் உதறல் இல்லாமல், இயற்கையாக, பல வண்ணங்களாக, வசனங்கள் நறுக்குத் தெறித்தால் போல் ( படத்தின் கான்செப்ட் தப்பாக பலருக்கு புரிந்துகொண்டு இணையத்தில் கிழிகிழியெனக்கிழிக்கிறார்கள்.) உண்மையில், மும்மையை இவ்வளவு மென்மையாக, இளமையாக, அனைவரும் இடமாக ( நமக்கு தெரிந்ததெல்லாம் மும்பை என்றால் வெடிகுண்டு, தாதா சண்டை சச்ரவு, குடிசைவாசிகள் பிரச்சினைகள் ) கிளாசிக்கலாக படம்பிடித்து காண்பிக்கிறார். படத்தைபார்க்கும் இளைஞர்கள் கூட்டம் ஆரவாரம் எழுப்பி வரவேற்ப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
மும்மை 2.0 கேம் தயாரிக்கும் கதாநாயகன், பாரீஸ் சென்று கட்டிடக்கலை பயில விரும்பும் இளம்பெண் தற்செயலாக இருவரும் சந்திக்க ஒரு ஈர்ப்பு தொடர்ந்து, நாயகி செல்லும் இடமெல்லாம், நாயகனும் செல்ல, இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி சந்தர்ப்பம் கிடைத்த காரணத்தால் படுக்கைவரை எந்தஒரு மனப்பயம் இல்லாமலும் தொடர்கிறது. நாளைடைவில், கதாநாயகனும், கதாநாயகியும் ஒன்றாக சேர்ந்தே வாழ விருப்பப்பட்டு அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். இருவரும், தங்களது இலக்கை நோக்கி பிரிய நேரும் சந்தர்ப்பம் அமையும் பொழுது, கதாநாயகனும் கதாநாயகியும் தாங்கள் விரும்பாத கல்யாணத்தைப் பண்ணிக்கொள்கிறார்கள். இடையில் பிரகாஷ்ராஜ், பவானி என்னும் அவரது ஓல்ட் மனைவி, கதாநாயகனின் அண்ணன் அண்ணி, கதாநாயகனின் அம்மா ( அப்பப்பா அப்படியே பெரியபணக்காரர்களின் பாடி லாங்வேஜ் ) என ஒருசில காரக்டர்களும் நம்மை பரவசப்படுத்துகிறார்கள்.
காந்தி ஆசிரமம், குஜராத், அகமதாபாத், மும்பை என சிறப்பான படப்பிடிப்பு… நடிப்பு ஆகா.. நாயகனும் நாயகியும் போட்டிபோட்டுக்கொண்டு இயல்பாகவே இளமையை கேமிரா முன்னால் வெளிப்படுத்துகிறார்கள். இசை சூப்பர்.. காட்சிக்கு காட்சி பிண்ணனி இசை தூள் பரத்துகிறது. இளைஞர்கள் தவறவிடாத படம்… கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கவும்… படத்தின் கான்செப்ட்டை மனதில் கொள்ளாமல்… படத்தின் போக்கை ரசிக்கவும் கற்றுக்கொள்ளவும்….
அன்புடன்
சிவபார்க்கி
பின்குறிப்பு .. சிறிது காலம் உடல்நலக்குறைவால் இந்த பகுதியை புதுப்பிக்க இயலவில்லை… தெடர்ந்த உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி.