பாபநாசம் .. திரை விமர்சனம்…
papanasam tamil film review
இளமை இதோ இதோன்னு பாடிய கமலுக்கு வயசாகிவிட்டது. அதுவும் இந்த பாபநாசம் படம் ஆரம்பம்மே கமலனின் மிகமிக குளோசப் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சியும் குளோசப் காட்சியில் முடிவடைகிறது. படம் ஆரம்பித்து முதல் 25 நிமிடங்களுக்கு இது எந்த மாதிரி படம்ன்னு நாம யோசனை பண்ணவே முடியாது… அந்தளவிற்கு ஒரு பெரிய கிராமத்தின் தினசரி நடைமுறைகளைப் இன்ஞ் இன்ஞ்சாக பதிவு செய்திருக்கிறார்கள்.
கமல், கௌதமி ஒரு முன்னேறிவரும் நடுத்தர வர்க்கக் குடும்பம் இவர்களுக்கு டீன் ஏஜில் ஒரு மகளும், சிங்கிள் ஏஜில் ஒரு மகளும் அன்பும் பாசமும் சந்தோகமாக மலைக்கிராமத்தில் இயற்கை அழகுகொஞ்ச வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இடையில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவத்தால் இக்குடும்பம் அந்த மாவட்டத்தின் டிஐஜி ரேங்கில் உள்ள பெண் அதிகாரியின் கொடுமைக்கு ஆளாக நேர்கிறது. அந்த போலீஸ் அதிகாரவர்க்கத்தின் பிடியில் இருந்து தனது குடும்பத்தைக் காக்க, படிக்காத கமல், தனது பட்டறிவு ( உபயம்.. தினந்தோறும் 3 சினிமாக்கள் பார்ப்பது ) பயன்படுத்தி ஒவ்வொரு கோணத்திலேயும், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கிறார். கடைசியில், வன்முறை மூலம் உண்மையை அறிய போலீஸ் முனையும்பொழுது, மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையிலும் தன் குடும்பத்தைக்காக்க என்ன செய்தார் என்பதே, இந்தப்படம், கடைசியில், அனைத்து வழிகளும் மூடப்பட்டு, போலீஸ் அதிகாரி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டும், விடாமல் கமலைத்துரத்தி துரத்தி கேட்டாலும், உரிய பதில் கிடைக்காமல் அமெரிக்கா கிளம்பிவிடுகிறார்.
கமல், கௌதமி உண்மையில் ஒரு நடுத்தர குடும்பத்தை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறார்கள். இரு பெண்குழந்தைகளும் தங்களின் பாத்திரம் அறிந்து அறுமையாக நடித்திருக்கிறார்கள். கமலின் நண்பர்கள் மற்றும் சாட்சிக்காக நண்பர்களாக்கபட்டோர்களும் த்தருபமாக நன்றாக நடித்திருப்பதால் பல டிஸ்யூம் டிஸ்யூம் படங்களுக்கு மத்தியில் ஒரு திரில்லர் கம் குடும்பப்படம் பார்த்த திருப்தி.. கேமரா, பாபநாசத்தையும், தென்காசியையும் ( உண்மையில் பாபநாசம் தானா அல்லது வேறு இடமோ தெரியவில்லை) பச்சை பசுமையாக கண்னுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். இசையும், காட்சிக்கேற்றவாறு அமைந்திருப்பதும், கேரள படத்தின் ரீமேக் என்ற குறையே தவிர, தமிழ் வசனங்கள் வெரிகுட் ரகம்தான்.