ஏன் இந்தப் போராட்டம்..?
Why this Protest ?
காலையில் எழுந்து விடுதியின் கீழ்த்ளம் வழியாக ரோட்டிற்கு சென்றதுதான், எங்கிருந்தோ பறநது வந்த காக்கை ஒன்று தலையில் கொத்திவிட்டு அருகில் இருந்த மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. அதற்கு துணையாக, பல காக்கைகளும் சேர்ந்து கொண்டு தொடர்ந்து தாக்க வந்து கொண்டே இருந்தது… அய்யோடா, இது என்ன மாயம் எதுக்காக நம்மை இப்படி டார்கெட் செய்யுது இந்தக்காக்கைகள் அப்படின்னு சிறுதுதொலைவில் உள்ள வழக்கமான டீக்கடையில் டீ அருந்திவிட்டு திரும்பினேன். நான் தங்கியிருக்கும் அறைகளின் நுழைவாயில் அருகே உள்ள
பால்கனியில் சிறிதுநேரம் நின்றுகொண்டு சாலையில் செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்போதுதான் கவனித்தேன், அருகில் இருந்த மரத்தின் கிளைகள் பால்கனியைத் தொட்டுக்கொண்டிருப்பதும், உற்று நோக்குகையில் உள்ளே ஒரு கிளையில் காகம் கூடுகட்டி முட்டைபொரித்து குஞ்சும் பொரித்துள்ளது. நான் இரவு நேரங்களில் பொழுது போகாமல் பால்கனியில் சாய்து கொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம் அதுபோல் முதல்நாள் வேடிக்கைப் பார்த்ததை இந்த காக்கைக்கூட்டம் தனது காக்கைக் குஞ்சுகளுக்கு தீங்கு விளைவிக்க வந்திருக்கிறேனோ என்று அஞ்சிதான் மேலே கண்ட நடவடிக்கையில் காலையில் ஞாபகமாக என்னை (இருட்டில் பார்த்தது எப்படி ஞாபகம் இருக்கிறது பாருங்கள்) குறிவைத்து தாக்கியிருக்கிறது. வீட்டிற்கு போன்செய்து, இந்த விசயத்தை சொன்னால் உடனே, அய்யயோ, சனிஸ்வரனுக்கு உடனே விளக்கு போடுங்கள், திருநள்ளாருக்கு போய்டு வரனும் அப்படின்னு ஆரம்பித்துவிட்டார்கள்.
காக்கையே இப்படி போராடுகிறது…
செய்திப்பார்வை…
0, இந்தியாவில் 2014ம் வருடம் தூய்மையான நகராம் என்று திருச்சிக்கு 2ம் பரிசாம்… இன்னமும் குப்பைகளினால் நிறைந்தும், ஆடு மாடுகள் சர்வ சாதாரணமாக தெருவில், ரோட்டில் சுற்றி வருவதும், தெருவிற்கு ஒருவர் அல்லது இருவர் ஆடு, மாடுகள் வளர்த்து தெரு முழுதும் சாணிகளால் நிறைத்துவிடுவது நடைபெற்றுதான் வருகிறது.
1, இலங்கையில் ஒருவழியாக ரணில் விக்கிரமசிங்கேயை செயிக்கவைத்து, ராஜபக்ஷேயை ஓரங்கட்டியாகிவிட்டது… இனிமேலாவது அங்கே அமைதி திரும்பி நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்., எவ்வளவு இரத்தம் சிந்தியிருக்கிறான் ஈழத்தமிழன்…
2. தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரத்திற்காக 92 கோடி செலவானதை விமர்சிக்கிறார்கள். உண்மையில் அதுபோல் விளம்பரம் செய்துமே, தூய்மைப்பற்றி அக்கரையில்லாமல் தான் நடந்துகொள்கிறேர்ம்… இனிமேலாவது ஒவ்வொருவரும் தன்வரைக்கும், தன்குடும்பம், என குப்பைகளை சரியாக கையாண்டு நாட்டிற்கு உதவுவோமே..
3. வழக்கமா குரூட் ஆயில் விலை எறங்கினால், தங்கம் விலையும் எறங்கும். ஆனால், மறுபடியும் தங்கம் 20 ஆயிரத்திற்கு மேல் எகிறிவிட்டது…
4.வாட்ஸ்அப், அருவிபோல் செய்திகளையும் காணக்கிடைக்காத காட்சிகளையும் கொட்டித்தீர்க்கிறது… சமீபத்தில் பார்த்து மகிழ்ந்தது.. பாகுபலியில் வரும் அருவில் போல் இந்தியாவில் ஒரு இடத்தில் மிகப்பிரம்மாண்ட அருவிக் கொட்ட அதனை கடந்து செல்கிறது ஒரு நீண்ட புகைவண்டி…. சமீபத்தில் பார்த்து வெறுத்தது. பெங்களூருவில் இருந்து மைசூர் சென்ற ஒரு குடும்பம் கார்விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது. அதனை இன்ஞவிடாமல் புகைப்படம் எடுத்து ( உதாரணம் ஒரு 9 வயது பாப்பாவின் தலை தனியாக கிடக்கிறது, உடலை மட்டும் உயிருடன் எஞ்சியவர் மடியில் வைத்து அழுகிறார்) வாட்ஸ்அப்பில் பரவவிட்டுள்ள புண்ணியவானை 1 மணிநேரமாகத் திட்டிக்கொண்டிருக்கிறேன். ( உடனே அனைத்து புகைப்படத்தையும் டெலிட் செய்துவிட்டு)
5.வீட்டு உபயோகத்திற்காக போர்வெல் தோண்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறவேண்டியது இல்லையாம்…. செய்தித்தாளில் படித்தது.