வேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா

வேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா VELANKANNI – SUMMAR TRIP

                     வெயில் அடித்து நொறுக்கி,  சில வருடமாக மே மாதம் செல்லும் சுற்றுலா தடைபெற்று போக, இந்த வருடம் கண்டிபாக சுற்றுலா செல்லாம் என முடிவெடுத்து, பழனிக்கு போய் மொட்டை போடாலாம் என்றும், பாண்டிக்கு போய் பாருக்கு போகலாம் என்றும், ஆளாளுக்கு ஒன்று கூற, கடைசி நிமிடத்தில் அன்னையை தரிசிக்க வேளாங்கண்ணிக்கு போகலாம் என தெரிவிக்க குடும்பத்தினர் வேற வழியில்லாமல் ஒத்துக் கொண்டார்கள்.                 காலையில் 5 மணிக்கு எழுந்து கிளம்பிவிடலாம் என முடிவாகி, நெட்டை துரத்தி துரத்தி பிடித்ததில் காலையில் அனைவரும் எழுந்ததே ஏழு மணி, பரவாயில்லை என அவசர அவசர மாக கிளம்பி, இடையில் வீட்டம்மா சுட்ட இட்லியை உள்ளே தள்ளி நால்வரும் நானோவில் உள்ளே, வண்டியை ஸ்டார்ட் செய்யுடா மவனே…( றி றி… எனக்கு வண்டி ஓட்டத்தெரியாதே….) என விசில் கொடுக்க மணி 9 ஆகிவிட்டது.                      IMG_20170505_111823 மத்தியஅரசின் தயவால் 4 வழிசாலையாக தஞ்சை வரை அடுத்த 40 நிமிடத்தில் பயணித்து எந்தவழியில் செல்வது எனத்திகைத்து மன்னார்குடிக்கே போகலாம் என அந்தவழியில் வண்டியை செலுத்தியாயிற்று..  மன்னார்குடியில் சித்தி வீடு இருக்கு இருந்தாலும் முன்அறிவிப்பு இல்லாமல் போகக்கூடாது என்ற தர்மத்த்தால் அங்கே ஒரு சிறிய கடையில் சர்பத் மட்டும் சாப்பிட்டு ( நன்றாக இருந்தது நன்னாரி சர்பத்) வண்டிக்கும் கொஞ்சம் ஓய்வு (நானோ இல்லையா)

                       IMG_20170505_111816அடுத்து, 11 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரஸ்தாவில் எங்கள் வண்டி பயணித்தது என்பதை விட ஊர்ந்தது என்பதே சரி, அப்பப்பா எத்தனை வளைவு, நெளிவு, சாலையில் பள்ளங்கள் இல்லாத இடம் குறைவு.. ஆனால், இவ்வளவு வறட்சியில் இரு பக்கத்திலும் பசுமையான நெல் வயல்கள்,, போர்வெல் தயவால்.. பார்க்க பரவசமாகத்தான் இருந்தது.. நான் சிறுவனாக இருந்தபோது திருச்சியில் இருமடங்கும் சாலை ஓரத்தில் சாதரணமாக பார்த்த காட்சி.. இப்பொழுதுதான் காணக்கிடைக்கிறது.

                        திருத்துறைப்பூண்டியில், எனது பழைய நண்பர் காதர் மொய்தீன் சிங்கப்பூர் பேன்சிகடை 30 வருடங்களுக்கு முன் வைத்திருந்தார்.  இப்பொழுதும் இருக்கிறாரா என எட்டிப்பார்த்தேன் கடை இருக்கிறது.  ஆனால் அவரைப்பற்றி எந்த விவரமும் இல்லை. கடையில் இருப்பவரோ ஏதோ யாசகம் கேட்க வந்துட்டார் என துரத்தாத குறையாக துரத்திவிட்டார்.             அடுத்து, 2 வழி கடற்கரை சாலை வேளாங்கண்ணி வரையிலும் செல்கிறது, வழியில் செலவிற்காக ஒரு கிராமத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சும்மா 100 ரூபாயாக அழுக்கு நோட்டாக கொட்டித்தீர்த்தது.  வேளாங்கண்ணியில் நுழைந்தவுடன் நுழைவு சீட்டு தொல்லையெல்லாம் இப்போ இல்லை, ரோடெல்லாம் சும்மா சூப்பராக போட்டிருக்காக, ஆங்காங்கா நல்ல ஆர்ஓ குடிநீர், கட்டணமில்லா சுத்தமான கழிப்பறையெல்லாம் ஜோராக கட்டி உட்டுருக்காங்க.

                     ஒரு நாள் தங்க பிளான் செய்திருந்தால், ரூம் தேடினோம், சுமார் ஏசி போட்டாக்கா 2 ஆயிரம், ஏசி இல்லைன்னா 1 ஆயிரம் என காதில் விழுந்தது.  என்ன செய்ய, அடிக்கிற வெயிலுக்கு ஏசி ரூமே போடலாம் என பேரம் பேசி 1200க்கு சகாயமாதா (வீடு) கெஸ்ட் அவுஸ்ல இடம் பிடித்து கொஞ்சம் இளைப்பாறினோம்.   மாலை 4 மணிக்கு எழுந்து அன்ணையை தரிசிக்க சென்றோம்.   இளைஞனாக இருக்கும்பொழுது பலமுறை வேளாங்கண்ணிக்கு வருவது உண்டு.  இடையில் பலகாலம் வர வாய்யில்லை.    தற்பொழுது சர்ச்சில் காலை வைத்தவுடன் உண்மையில் உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.. எனது மகள் எனது கையை பிடித்தவுடன்தான் அந்த பீலீங் மறைந்தது.

                   IMG_20170505_184023

                        அன்னையிடம் பலரும் மண்டியிட்டு தங்கள் குறைகளை வெளிப் படுத்துவதும்,  கேரளா மாநிலத்திலுந்தும், கோவா, கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளனமானவர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.  மனமுருகி வேண்டுவதும், சிறிய பொருள் அல்லது முக்கியம் எனக்கருதும் டாக்குமெண்ட் போன்றவற்றை அன்னையின் பாதத்தில் வைத்து திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.   எந்தவிதமான தள்ளுமுள்ளு, பணியாளர்கள் தொல்லை, எதும் இல்லை.  பணியாளர்களும் இன்முகத்துடன் பணிபுரிகிறார்கள்.   கலர் கலரான மெழுகுவர்த்திகள்பூமாலை 10 ரூபாயில் இருந்து 500 வரை விற்பனையாகிறது.   அவரவர் சக்திக்கேற்ப வாங்கி அன்னைக்காக வழிபாடு செய்கிறார்கள்.

IMG_20170505_183634

                     கிழக்கு பார்த்த அன்னையின் சர்ச்சில் ஒருமணிக்கு ஒருதரம் பூசை சுமார் 15 நிமிடம் மட்டும் நடைபெறுகிறது.  தமிழ், ஆங்கிலம், கொங்கன், மலையாளம் என மொழிகளில் ஒவ்வொருமுறையும் நடைபெறுகிறது.  பேராலாயத்தை சேர்ந்தவர்கள் ஒரு பிட் இடத்தைக்கூட விடாமல் பிளான் செய்து பூங்கா, பார்க்கிங், கடைகள், தங்குமிடம், காட்சியிடம் என சுத்தமாகவும், கூட்டம் கூடா விடாமல் அவ்வப்பொழுது வழிகளை மாற்றி அமைத்தும் விடுகிறார்கள். சர்ச்க்கு பின்னால் ஒரு பெரிய சர்ச் அதனில் விரிவான பூசை நடைபெறும் போல… பலர் அதில் கலந்து கொள்ள, நமக்கு ஆர்வமில்லாதால் கடற்கரையை நோக்கி நகர்ந்தோம்.

                                                                                                (தொடரும்,,, 1)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s